உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்; ஆதார் இருந்தும் கண்டுபிடிக்காத வாரியம்

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்; ஆதார் இருந்தும் கண்டுபிடிக்காத வாரியம்

சென்னை: ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்ற விபரத்தை கண்டறிய, மின் இணைப்பு எண்ணுடன், நுகர்வோரின், 'ஆதார்' எண் இணைக்கும் பணி முடிவடைந்து இரு ஆண்டுகளாகியும், அந்த விபரம் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், முறைகேடான மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலர் இலவச மின்சார சலுகை பெறவும், அதிக மின் கட்டணம் வருவதை தவிர்க்கவும், ஒரே வீட்டுக்கு முறைகேடாக கூடுதல் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் பலர், இலவச மின்சாரத்திற்கு வாடகைதாரர்களிடம் யூனிட்டுக்கு, 5 - 10 ரூபாய் வசூலிக்கின்றனர். எனவே, இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் வீடுகள் உட்பட, 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்களுடன், அவர்களின், 'ஆதார்' எண்களை இணைக்கும் பணியை, மின் வாரியம், 2022 நவம்பரில் துவக்கியது. பணி, 2023 மார்ச்சில் முடிவடைந்தது. இதுவரை, ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்ற விபரம் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இலவச மின்சாரம் ரத்தாகும் என கருதி, பலர் ஆதார் இணைக்க வரவில்லை. இதையடுத்து, 'ஆதார் இணைத்த பின், ஒருவர் பெயரில் விதிகளுக்கு உட்பட்டு, எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும், அனைத்துக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்; ரத்து செய்யப்படாது' என, மின் வாரியம் அறிவித்தது. பின், பலரும் ஆதார் எண்களை இணைத்தனர். அப்படி இருந்தும், இரு ஆண்டுகளாகியும், ஒரே நபர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன; அவை விதிகளுக்கு உட்பட்டு வாங்கப்பட்டுள்ளனவா என்ற விபரங்களை, மின் வாரியம் வெளியிடாமல் உள்ளது. இதற்கு, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமே காரணம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gajageswari
பிப் 08, 2025 05:34

கடந்த ஆண்டு நுகர்வோர் மற்றும் அல்ல மின் ஊழியர்கள் துன்புறுத்தி ஆதார் இணைக்கபட்டது. இதை தினந்தோறும் நேரடியாக கவனம் செலுத்திய அமைச்சர்


KARTHIK PONNUMANI
பிப் 07, 2025 19:50

திமுக இருக்கும் வரை ஊழல்கள் தொடரும் என்பதை அறியாத அப்பாவி போல


சிந்தனை.
பிப் 07, 2025 19:11

கோவை musலீம் ஏரியாவில் அவர்கள், மீட்டர் பாக்ஸே இல்லாமல் கம்பத்திலிருந்தே மின்சாரம் எடுக்கிறார்கள் . கேட்க ஆளில்லை!


suman balaiah
பிப் 08, 2025 09:01

கோவைல மட்டும் அல்ல எல்லா முஸ்லிம்ஸ் பகுதிகளிலும் இது போன்ற சட்டவிரோதம் நடைபெறுகிறது. ராயபேட்டை மற்றும் ராயபுரம் போய் பார்த்தால் இதை விட ஒருபடி மேலே சட்டவிரோதம் நடைபெறுகிறது


Ethiraj
பிப் 08, 2025 09:18

Why coimbatore entire TN SEVERAL CONSUMERS draw power from overhead lines. All distribution transformers HT metering to be taken which will expose unmetered electricity consumption. The reading to monitored by respective SErespective SE


Balamurugan
பிப் 07, 2025 12:11

இது சரியாக புரியவில்லை. ஒரு உரிமையாளர் 5 வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார் அப்போ அந்த 5 வீட்டுக்கும் அவருடைய பெயரிலேயே தானே மின் இணைப்பு இருக்கும்.


KARTHIK PONNUMANI
பிப் 07, 2025 19:51

அதற்கும் பதிவு உள்ளதே வாடகை வீடு பதிவு.


nv
பிப் 07, 2025 11:29

சாராய அமைச்சரை மின் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான்.. திருட்டு திராவிட மாடல்


Arya Prasad
பிப் 07, 2025 10:40

உயர் மின் அழத்தம் கொடுக்கக்கூடிய மின் இனைப்புகளில் (150Hp) வரை என அனுமதித்து இரண்டு அல்லது முன்று மின் இனைப்புகள் வழங்கியதை வரையறுத்தால் வாரியத்திற்கு கனிசமான வருமானம் வரும்


அப்பாவி
பிப் 07, 2025 07:33

தத்திகளுக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியுமா?


Kanns
பிப் 07, 2025 07:33

Recover All Freebies/Concessions 90% UnDue Vote Briberies from Concerned Ruling Parties& Leaders-Cadres. No Mercy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை