உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்

ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:மறைந்த கருணாநிதி, கடைசி வரை தி.மு.க., தலைவராக இருந்தார். அப்போது, ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை; தன் தந்தைக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கவில்லை. அவர் போல என் மகன் இல்லையே?ஆதிகாலத்தில் இருந்து கிளைச்செயலர், ஒன்றிய செயலர், மாவட்டச் செயலர் என பா.ம.க.,வில் பல்வேறு பொறுப்புகளில் தன்னலம் கருதாது பணியாற்றி, ஒதுக்கப்பட்டவர்களுக்கு தான் இப்போது பொறுப்புகளை கொடுத்திருக்கிறேன்.இந்த பொறுப்புகள் நிலைத்து நீடித்து இருக்கும். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.தற்காலிக பொறுப்பு என யார் சொன்னாலும், அதில் உண்மையில்லை. தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த அன்புமணி போஸ்டரை, விஷமிகள் கிழித்திருக்கலாம். யாருடைய போஸ்டரையும் கிழிக்கக்கூடாது. என் 60ம் ஆண்டு திருமண நாளுக்கு, மகன் அன்புமணி வராதது வருத்தம் தான். விரைவில் பா.ம.க., பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து முடிவு செய்வேன். கட்சியின் செயல் தலைவர் பதவி அன்புமணிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் ஏற்றுக் கொண்டால், பிரச்னை தானாகவே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், செயல் தலைவர் பதவியை ஏற்க, அன்புமணி மறுக்கிறார். இருந்தபோதும், பிரச்னைக்கு தீர்வு காண பேசிக்கொண்டே இருக்கிறோம்.நான், பதவி சுகத்தை விரும்புவது போல வெளியில் செய்தி பரப்புகின்றனர். அப்படி நான் விரும்பியிருந்தால், மத்தியில் எந்த பதவியும் கிடைத்திருக்கும். நான்கு பிரதமர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். இன்றைக்கும் பிரதமர் மோடி என்னோடு நட்பாக இருக்கிறார். அரசு பதவிக்கு போகக்கூடாது என்று சத்தியம் செய்திருக்கிறேன். நான் சுயம்புவாக உருவாக்கிய கட்சிக்கு, என் மூச்சு இருக்கும் வரை தலைவராக இருப்பேன். எனக்கு பின் முகுந்தனோ, சுகந்தனோ தலைவர் பொறுப்புக்கு வரப்போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ameen
ஜூன் 28, 2025 09:03

பாஜக கூட கூட்டணி வைத்த எந்த கட்சிதான் அதன்பின் உருப்பட்டு உள்ளது?


அப்பாவி
ஜூன் 27, 2025 23:07

டி.வி சீரியல்ல குணச்சித்திர நடிப்புக்கு ஆள் எடுக்கறாங்களாம். அனுப்பிப் பாருங்க. கதாநாயகனா நடிக்க வயசாயிரிச்சு.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 22:22

பித்து பிடித்துவிட்டதா இந்த மனிதருக்கு?


Ramesh Sargam
ஜூன் 27, 2025 22:21

ஸ்டாலினைப்போன்று தன் மகன் இல்லையாம். என்ன ஒரு பயித்தியக்கார எண்ணம்.


சந்திரன்
ஜூன் 27, 2025 21:04

இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ?தன் மகன் முட்டாளாக இல்லை என கூவுகிறார்


குமார்
ஜூன் 27, 2025 20:57

தயவுசெய்து ராமதாஸ் அய்யா அரசியலை விட்டு விலகி விடுங்கள்.. அன்புமணி அண்ணன் செய்வது தான் சரி.. நீங்கள் 5 வருடத்திற்கு ஒரு முறை கூட்டணி மாறும் போக்கிலேயே உள்ளீர்கள்.. உங்களைப் பின்பற்றினால் எக்காலத்திலும் பாமக ஆட்சியில் பங்கு பெறாது..


MAHADEVAN NATARAJAN
ஜூன் 27, 2025 19:41

இந்த ஆளு காலம் முழுவதும் குடும்ப முன்னேற்றத்திற்கு உழைத்து இருக்கிறார். இவருக்கு ஓட்டு போட ஒரு கூட்டம்


Bhaskaran
ஜூன் 27, 2025 19:37

ஸ்டாலின் முதலில் சாதாரண கட்சி உறுப்பினர். பின் சம உ, பின் மேயர் ,பின் அமைச்சர்,பிறகு தான் முதல்வர் .உங்க பிள்ளை,எப்படின்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்


krishnan
ஜூன் 27, 2025 18:47

அப்பப்பா ! அப்பப்பா ! வர வர அரசியல், அப்பாக்கள் எல்லாம் பேசுவதே சரியில்லை வயசு ஆயிடுச்சோ என்னவோ ?


krishnan
ஜூன் 27, 2025 18:37

மருத்துவர் அய்யா, உங்கள் உவமையே தவறு என்று உங்கள் தொண்டர்கள் இப்போது சொல்வார்கள் நீங்கள் தற்போது நிதானமாக இருக்கீங்களா ? நீங்கள் பேசியது, மிகக் கொடுமையான வார்த்தை அவரவருக்கு ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை இருக்கும் நீர் இவரைப் போல் இல்லை, அவரைப் போல் இல்லை என்ற உங்கள் வார்த்தைகளே மிகத் தவறு உங்கள் மகனை, இதை விட வேறு யாரும் அசிங்கப்படுத்த முடியாது உங்கள் எண்ணத்தில், வன்மமாக, அடங்காத, பெரும் கோபம், கொப்பளித்துக்கொண்டு இப்பொழுதும் உள்ளது போலும், பேசியது போதும், தயவு செய்து, மிக நிதானமாக பேசவும் உங்கள், மீது நல்ல மதிப்பு எல்லோருக்கும் இருந்தது