உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,

சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், 'சுதேசி' பாடப்புத்தகத்தை, என்.சி.இ.ஆர்.டி., வடிவமைத்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, இந்திய பொருளாதாரத்தை தக்க வைக்கவும், வளர்த்தெடுக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், தற்சார்பு எண்ணத்தை உருவாக்கும் வகையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., நிறுவனம், 'சுதேசி' என்ற பாடப்புத்தகத்தை, இரண்டு நிலைகளில் உருவாக்கி உள்ளது. சுயசார்பு இந்தியா அதில், 'பிரிட்டிஷ் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி தயாரிப்புகளை, நம் நாட்டு மக்கள் அதிகளவில் வாங்கியதால், உள்நாட்டு தொழில்கள் அழிந்து, வறுமை ஏற்பட்டது. அதிலிருந்து மீள, கடந்த 1905ல், அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்து, உள்நாட்டு பொருட்களை வாங்கும் வகையில், சுதேசி இயக்கத்தை தலைவர்கள் கையில் எடுத்தனர். 'அதைத்தொடர்ந்து தற்போது, பிரதமர் மோடி, 'விக் ஷித் பாரத்' எனும் சுயசார்பு இந்தியா குறித்து, தொடர்ந்து உரையாற்றுகிறார். அதை செயல்படுத்தும் வகையில், 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்துகிறார் என்பது உள்ளிட்ட விஷயங்கள், இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், டாடாவால் நிறுவப்பட்ட இரும்பு, எக்கு நிறுவனம், பால் துறையில் அமுல், விண்வெளியில், 'இஸ்ரோ' உள்ளிட்டவை வளர்ந்த விதம் குறித்தும் விளக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள், விண்வெளி, பாதுகாப்பு, சுகாதாரம், தொழில் துறைகளில் சாதிக்க, 'ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத்' உள்ளிட்ட திட்டங்கள் உதவுவது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு ஏ.ஐ., மேலும், இன்றைய 'டிஜிட்டல்' உலகில், தரவு பாதுகாப்பு உள்ளிட்ட தனித்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகம் உள்ளதால், பிரத்யேகமான உள்நாட்டு ஏ.ஐ., தளங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றை பின்பற்றி, தற்சார்பு இந்தியாவுக்கான திட்டங்களை மாணவர்கள் வடிவமைத்தால், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியால், இந்திய பொருளாதாரத்தையும், மரியாதையையும் காப்பாற்ற முடியும் என, இப்புத்தகத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பாடப்புத்தகம், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மா ணவர்களுக்கு வழங்கப் பட உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மணிமுருகன்
அக் 05, 2025 23:51

அருமை அந்தந்த மாநில தாய்மொழியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டுகிறேன்


அப்பாவி
அக் 05, 2025 13:24

காகிதம் கூடாந்நியர் கண்டுபிடிச்சது. ஓலச்சுவடியில் எழுதி வெளியிடுங்க.


Barakat Ali
அக் 05, 2025 11:53

உடனடியாக பரவலாக்கணும்.... அடிமைப்படுத்தியவர்களைக் கொண்டாடிய மனப்பான்மை ஒழியணும் .....


எவர்கிங்
அக் 05, 2025 03:02

வழக்கமாக திராவிடியா மாடல் இதை எதிர்க்கணுமே


N Sasikumar Yadhav
அக் 05, 2025 20:20

அதான் கோபாலபுர கொத்தடிமையான அப்பாவி எதிர்க்கிறாரே .


நிக்கோல்தாம்சன்
அக் 05, 2025 01:41

வரவேற்க தகுந்த நிகழ்வு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை