உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கழக நிர்வாகிகள் பங்கேற்பாம்.. அரசு செய்திக்குறிப்பில் பகீர்

கழக நிர்வாகிகள் பங்கேற்பாம்.. அரசு செய்திக்குறிப்பில் பகீர்

தர்மபுரி : தர்மபுரியில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அமைச்சர் வேலு பங்கேற்றார். முன்னதாக, காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், சாலையோர கடையில் டீ குடித்தார்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட பி.ஆர்.ஓ., லோகநாதன், படத்துடன் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'அமைச்சர் வேலு, தர்மபுரி மாவட்டத்தில் நடைப்பயிற்சியின் போது, சாலையோர கடையில் பொதுமக்களுடன் டீ குடித்தார். அவருடன் தர்மபுரி எம்.பி., மணி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்' என குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அரசு அதிகாரியாக இருக்கும் ஒருவர், 'கழக நிர்வாகிகள்' என குறிப்பிட்டு செய்தி குறிப்பு வெளியிட்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sundaran
மே 29, 2025 00:00

சுக்கா போகவில்லையா. இதெல்லாம் ஒரு செய்தி என்று போடுகிறீர்களே நியாயமா


Velusamy Dhanaraju
மே 28, 2025 17:25

குடிக்கிறது ஓசி டீ இதுல அரசு செலவுல விளம்பரம் ஒரு கேடு


vijai hindu
மே 28, 2025 16:18

இவனுங்க வருவாங்க அந்த டீக்கடைக்கு முன்னாடியே சொல்லி வச்சுட்டு போயிருப்பாங்க டீ குடிக்கிற கிளாஸ் புது கிளாசா இருக்கும் என்னடா நடிப்புடா சாமி


அசோகன்
மே 28, 2025 15:02

பஸ் ஸ்டாண்ட்ல இருக்கும் டாய்லெட் ல போய் 10 நிமிஷம் உட்கார சொல்லு பார்க்கலாம்........ஓடிடுவான். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே


chinnamanibalan
மே 28, 2025 12:33

கடையின் தோற்றம், சாலை ஓர தட்டி போட்ட டீ ஓட்டல் போன்று தோன்றவில்லை.


kumar
மே 28, 2025 05:07

அமைச்சர் ஆவதற்கு முன்பு சாலைஓரத்தில்தான எல்லாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை