உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா., சிலை அகற்ற அடுத்தகட்ட போராட்டம்: பா.ஜ., திட்டம்

ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா., சிலை அகற்ற அடுத்தகட்ட போராட்டம்: பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திரைப்பட சண்டை இயக்குனர் கனல் கண்ணனுக்கு எதிரான த.பெ.தி.க., வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஈ.வெ.ரா., சிலையை அகற்ற வேண்டும் என, அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலை உடைக்கப்படும் நாள்தான், ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என, ஹிந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனருமான கனல் கண்ணன் பேசியது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3qrsqbpx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 'கோவில் அருகில் உள்ள ஈ.வெ.ரா., சிலை பீடத்தில், கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு எதிரான வாசகங்கள், ஆத்திரமூட்டும் விதமாக உள்ளன' எனக்கூறி, கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கனல் கண்ணனின் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறியதாவது:

ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், ஸ்ரீரங்கம் கோவில் முன், ஈ.வெ.ரா., சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்த பீடத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள், பக்தர்கள் மனதில் கோபமும், ஆத்திரமும் ஊட்டும் வகையில் இடம் பெற்றுள்ளன.கடவுள் இல்லை எனக்கூறிய ஈ.வெ.ரா., சிலை, ஏன் மசூதி, சர்ச் முன் வைக்கப்படவில்லை. ஹிந்து கோவில் முன் மட்டும் எப்படி சிலை வைக்கலாம்? இது அராஜகத்தின் உச்சக்கட்ட செயல்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மன் கோவில் அருகில், ஈ.வெ.ரா., சிலை அமைந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வாசகமும் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, கோவில் முன் உள்ள சிலையை அகற்ற உயர் நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியதாவது:

ராமர் சிலையை செருப்பால் அடித்தார் ஈ.வெ.ராமசாமி. அத்தி வரதரை, 1 கோடி மக்கள் தரிசித்து, அந்த அடியை திருப்பிக் கொடுத்தனர். சுதந்திரம் பெற்ற நாள் கருப்பு நாள் என, ஈ.வெ.ரா., விமர்சித்தார். 'கடவுள் இல்லை, அவரை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்றார்.இப்படி பேசிய ஒருவரின் சிலையை வைப்பதும், அவரது வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதும் மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலுக்கு முன்னுதாரணமாக உள்ளது.ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலை, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. சிலையையும், பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களை அகற்றவும், கனல் கண்ணன் வழக்கு உத்தரவை மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். சிலை அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

kumar
அக் 09, 2024 22:08

Sorry, you are the one who seem to be oblivious of history and bought into the modified history pushed by your kazhaga masters.


கிஜன்
அக் 09, 2024 21:02

தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார் .... இந்த சிலையை வைக்கும்போது சும்மா கம்முன்னு இருந்துட்டு ...இப்போ சவுண்ட் விடுறது நியாயமா ?


Sudarsan Ragavendran
அக் 11, 2024 06:16

சிந்திக்க. எப்படி மகள் போன்றவர் என்று கூறி தாரமாக்குவதைப் போல.. ஒரு சிறு உதாரணம் அவரின் சிந்தனைகளுக்கு..


முத்துப்பாண்டி
அக் 09, 2024 19:27

கடவுள் இருந்தா ஏன் இத்தனை நாள் விட்டு வெச்சிருந்தாரு சிலையை? கடவுளே பொறுத்துக்கிட்டு போறாருன்னா இவிங்களுக்கு எங்கே இடிக்கிது? ரெண்டு சைடும் யாவாரம் தான்.


ManiK
அக் 09, 2024 19:18

இந்த மாதிரி கேவலமான சிலையில் வெறுப்பு வசனம் எழுதி நிலுவிய வீரமணி, தீமுக தலைமை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கபட வேண்டும்.


Gopalan
அக் 09, 2024 18:57

ஏன் இவ்வளவு வருடங்கள் வாசகங்களை அகற்ற வில்லை என்பது மிக்க வருத்தங்கள் அளிக்கிறது. மிகவும் மோசமான அரசியல் நடந்து இருக்கிறது. மக்கள் பெருவாரியாக தன் நிலைகளை தெரியாத அப்பாவிகள் என நினைக்க தோன்றுகிறது.


theruvasagan
அக் 09, 2024 15:39

கடவுள் இல்லைன்னு சொல்கிறவனையும் தன்னுடைய காலடியின் இருத்திக் கொண்டான் ஒருவன். அவன்தான் இறைவன். இறைவனை தரிசிக்கவரும் பக்தர் கூட்டம் அந்த சிலையின் கீழ் எழுதியிருப்பதை பார்த்து படித்து திரும்பிப் போனதாக வரலாறு உண்டா. இன்னும் நிறைய பேர்கள்தானே கோவிலுக்கு வருகிறார்கள். அங்கே கேவலப்பட்டு நிற்பது கடவுள் நம்பிக்கை இல்லை. அது எது என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.


SUBBU,MADURAI
அக் 09, 2024 16:05

ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற பாஜக போராட தேவையில்லை வருங்காலத்தில் தமிழக மக்களே வெகுண்டெழுந்து ராமசாமி சிலைகளை சுக்கு நூறாக உடைத்து போடுவார்கள் போனஸாக திருவாளர் கட்டுமரத்தின் சிலைகளுக்கும் அதே கதிதான் நேரப் போகிறது.


Sridhar
அக் 09, 2024 13:05

அந்த ஈன பிறவியின் சிலைகளை நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அகற்றக்கூடாது. தினம்தினம் கழிவுநீர் அபிசேகம் செய்து விளக்குமாரினால் வருடிக்கொடுத்து பூசைகள் செய்யவேண்டும். பிற்கால சந்ததியினருக்கு இப்படி அயோக்கிய சிகாமணி உலவிவந்தான் என்ற சரித்திரம் தெரியவேண்டும்.


A.Kennedy
அக் 09, 2024 12:36

நன்றே செய் அதை இன்றே செய்.


Sivagiri
அக் 09, 2024 12:33

அண்ணாமலை ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஈவேரா சிலைகளும் , ஆஞ்சநேயர் சிலைகளாக மாற்றப்படும் , அனைத்து கருணாநிதி சிலைகளும் காளியம்மன் சிலைகளாக மாற்றப்படும் , . . . அவர் ராமரை பழித்தார் . . . இவர் பெண் குலத்தையே பழித்தார் . .


rameshkumar natarajan
அக் 09, 2024 11:38

Periyar fought for the suppressed communities for temple entry and made sure that those people are allowed inside the temples. Now, people like kanal kannan, doesnt know the history what periyar has done for him, he is talking. Let Perumal give him good sense.


ஆரூர் ரங்
அக் 09, 2024 14:05

வடிகட்டிய பொய்.


Sudarsan Ragavendran
அக் 11, 2024 06:23

What you have stated is controversial. If you are faith on concepts ? E.V.R, you wont tell, Perumal give him good sense. If you are faith ? on God, you wont give respect to above said persons words.


சமீபத்திய செய்தி