உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: விஜய் குரலாக ஒலிக்கும் ஆதவ்

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: விஜய் குரலாக ஒலிக்கும் ஆதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது; கட்சி தலைவர் விஜய் வழிகாட்டுதல்படிதான் இதை சொல்கிறேன்,'' என, த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.அவர் அளித்த பேட்டி:வக்பு திருத்த சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், கேரள அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தி, பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கிறோம். 'பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது தவறு' என விஜய், தெள்ளத் தெளிவாக கூறி விட்டார். அ.தி.மு.க., இப்போது ஆட்சியில் இல்லை. அவர்கள் செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து விட்டனர். ஆட்சியில் இருந்து இறங்கிய பின், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும், தோல்வியை சந்தித்து வருகிறது.தோல்வியில் இருக்கும் ஒரு கட்சியை விமர்சித்து பேச வேண்டிய அவசியம் த.வெ.க.,வுக்கு இல்லை. அதனால்தான், அ.தி.மு.க., குறித்து நாங்கள் பேசுவதே இல்லை. அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. எங்கள் கட்சி தலைவர் விஜயுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர், அவரது வழிகாட்டுதல்படி தான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன்.விஜய், தமிழகம் முழுதும் தீவிர பிரசார பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்று மாதங்களில் பிரசாரம் தீவிரமாகும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் விஜய், தன்னுடைய தீவிர பிரசார பயணம் வாயிலாக பேரதிர்வை உருவாக்குவார்; தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை உருவாக்குவார். தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக, எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். அதன் வாயிலாக விவாத பொருளை உருவாக்கி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.தி.மு.க., கொள்கைகளுக்கும், த.வெ.க., கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தி.மு.க.,வை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை, ஆளுங் கட்சியான பின், தி.மு.க., செயல்படுத்தவில்லை. கூட்டணி கட்சிகளே போராட வேண்டிய நிலையை, தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது.இந்த நிலையை மாற்றி, தமிழகத்தில் புதிய அரசியல் களத்தை உருவாக்குவதுதான், த.வெ.க.,வின் பிரதான நோக்கம். அதை நோக்கி வேகமாக செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

செல்வா
மே 21, 2025 16:50

டேய், ஏண்டா நீங்க வேற இங்கிட்டும் அங்கிட்டும் ஓடி காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க.....போங்கடா போய் வேற வேலை இருந்தா பாருங்கடா.


Barakat Ali
மே 21, 2025 14:01

டிவிகே யோ, நாம் தமிழரோ ... எதுவானாலும் திமுகவின் பி டீம் எப்படிங்க அதிமுகவுடன் சேரும் ???? அப்படிச் சேர்ந்தா எங்க பெரிய தொளபதி இந்த சின்ன தொளபதியை கள்ளத்தி ஓட உட்ருவாரு ....


PALANISWAMY BALAKRISHNAN
மே 21, 2025 12:41

நீ யார் என்று இப்போதுதான் புரிகிறது. பாவம் த வெற்றி கழகம்.


lana
மே 21, 2025 11:27

எந்த நோக்கம் ஆக ஆதவ் tvk இல் சேர்ந்தார் ஓ அது கூடிய விரைவில் நடக்கும். ஆனால் ஒன்னு விடியல் இன் மறு வடிவம் என்று ஒப்புக் கொள்ள ஒரு தைரியம் வேணும்


Kanakala Subbudu
மே 21, 2025 10:14

விஜய்க்கு கூட இருக்கும் கூட்டமே அழித்து விடும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராக கொம்பு சீவி விடுகிறார்கள். விஜய் உஷாராக இருக்க வேண்டும்


R.MURALIKRISHNAN
மே 21, 2025 10:08

அப்ப நீங்களும் கூட்டமா? சொந்த காருக்கு வரி ஏமாத்தியவன் முதல்வராக வர முடியாதுப்பா. சினிமாவை விட அரசியலில் விஜய் நடிப்பு பிரமாதம். மண்குதிரை மண்ணுதான்.


Padmasridharan
மே 21, 2025 10:06

"தி.மு.க.,வை அழிப்பது எங்கள் நோக்கமல்ல" என்று கூறுவது ஆலமரத்தை வேரோடு சாய்ப்பதுபோல். இது பயத்தால் வந்ததா அல்லது விஜயம் செய்ய இன்னும் 4 நல்ல திரைத்துறை நண்பர்கள் திரையில் பொங்கியெழும் நடிகர்கள் அசலில் மூடிக்கிட்டு இருப்பவர்கள் அரசியலில் வர பயமா .


திருட்டு திராவிடன்
மே 21, 2025 08:33

அருமை. தா வே கா மற்றும் திமுக இரண்டுமே ஒரே கொள்கை உடையது என்று கூறிவிட்டார். எங்களுக்கு இக்கொழுகை ஒன்றும் வேண்டாம். உம்மையும் திருட்டு திராவிட அயோக்கிய கட்சியுடன் தான் சேர்க்க வேண்டும். இன்று நீர் வெளிப்படையாக திமுக பி டீம் என்பதை ஒத்துக் கொண்டாய்.


Neel Sansu
மே 21, 2025 07:50

தி. மு. க. மற்றும் த. வெ. க. வின் கொள்கைகள் ஒன்றே என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மிக்க நன்று. ஊழலும், ஹிந்து நம்பிக்கைகளின் எதிர்ப்புமே எங்கள் இருவரின் கொள்கைகள் என்று நேரடியாகவே கூறிவிட்டார்.


குத்தூசி
மே 21, 2025 07:31

தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் த வெ க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை