தி.மு.க.,வின் தற்போதைய லோக்சபா எம்.பி.,க்கள் 24 பேரில், 10 பேருக்கு வரும் தேர்தலில், 'சீட்' கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி தலைமை வந்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' கொடுக்க வேண்டும் என்பதை விட, யாருக்கு தரக்கூடாது என்ற பட்டியல் கட்சி தலைமையால் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போதைய எம்.பி.,க்கள், 10 பேருக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில், 'சீட்' அளிப்பதில்லை என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=emai9mbh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொகுதி பக்கமே எட்டி பார்க்காதவர்கள், மக்கள் குறை கேட்காதவர்கள், சர்ச்சை விஷயங்களில் ஈடுபட்டு, கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள், கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாதவர்கள், மக்கள் அதிருப்திக்கு ஆளானவர்கள் என, பல்வேறு விஷயங்களின் அடிப்படையில், 10 பேருக்கு சீட் மறுக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.சமீபத்தில் உளவுத்துறை ஒரு அறிக்கையை ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு அளித்துள்ளது. தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தால், தோற்பது உறுதி என குறிப்பிட்டு, 10 எம்.பி.,க்கள் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தலைமையின் இந்த முடிவுக்கு, உளவுத்துறை அறிக்கையும் முக்கிய காரணம். இவ்வாறு அறிவாலய வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -