உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அக். 20க்குள் பாம்பன் பாலம் திறப்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

அக். 20க்குள் பாம்பன் பாலம் திறப்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்று சோதனை நடக்கிறது. இந்நிலையில் அக்., 15 அல்லது அக்., 20க்குள் இப்பாலம் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள், 2020 ஆகஸ்டில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. நுாற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் பாலத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2022 டிச., 24 முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.பாம்பனில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலம் பணிகள் முற்றிலுமாக நிறைவு பெற்று சில தினங்களுக்கு முன் சோதனைகளும் நடந்தன. ரயில்வே புதிய பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.அதற்கு முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்து இப்பாலம் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது என்ற சான்றளிக்க வேண்டும். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளன. தற்போது அக்., 15க்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்க ரயில்வே பொறியாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தென்னக ரயில்வே மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா, நேற்று பாம்பன் பாலப்பணிகளை பார்வையிட்டார். அக்., 15ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா என்பதால் அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்று பாம்பன் பாலத்தை நாட்டு அர்பணிப்பார் என தெரிய வந்துள்ளது.பிரதமர் மோடி வருகை தந்தால், பாலம் திறப்பதற்கான விழா நடக்கவிருக்கும் மேடை அமைப்பதற்கான இடம், பிரதமர் ெஹலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.எனவே, அக்., 15 அல்லது அக்., 20க்குள் பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
அக் 07, 2024 17:23

இந்தப் பாலமாவது நன்றாக நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!


சுப்பிரமணி
அக் 07, 2024 16:43

சிலருக்கு பணவெறி. சிலருக்கு பெண் வெறி. சிலருக்கு எல்லாத்தையும் தானே திறப்புவிழா செய்யணும்னு கொலவெறி.


அப்பாவி
அக் 07, 2024 16:41

எதுக்கு இங்கே வந்து அபாவி மக்களை பாதுகாப்புன்னு அடிச்சு முடக்கிக் கிட்டு. அதுவும் ராமநாதபுரத்திலிருந்தே அஞ்சடுக்கு, ஏழடுக்குன்னுட்டு. பேசாம காணொளி மூலம் இயக்கி வெய்யுங்க. மக்களை நிம்மதியா இருக்க விடுங்க.


பாமரன்
அக் 07, 2024 12:50

இது ஒன்னும் அப்படிப்பட்ட பெரிய சாதனைல்லாம் இல்லை... சைனாக்காரண் பிரம்மாண்டமான ஹாங்காங் மக்காவ் ஷென்ஜென் பாலத்தை சத்தமில்லாமல் திறந்து விடறான்... வெறும் ஒத்த ரயில் பாதைக்கு திறப்பு விழாவிற்கு விஷ்வ குரு வந்தா அவன மாதிரி குட்டி நாடுகள் சிரிக்க மாட்டாங்களா..??? மேலும் தமிழ் நாட்டில் பாம்பன் சாலை பாலம் வந்ததில் இருந்து இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் லோக்கல்ஸ் அதைத்தான் யூஸ் பண்றாங்க... அதனால் இங்கு பெருசா வாக்கு அறுவடைக்கு கூட வாய்ப்பில்லை...வடக்கன்ஸ் கூட வித்தவுட் டிக்கெட் பார்ட்டிங்க தான் அதிகம் யூஸ் பண்ணுவாங்க... ஹேய் தீஸ் காங் டீம்கா நாட் குட் யார் அப்பிடின்னு சொல்லிட்டு ஓட்டு போட வராத பகோடாஸ் எல்லாம் சாலை வழியாக போறவங்க தான்... முடிஞ்சா அஞ்சு வருஷம் முன்னாடி கல்லு நட்டுட்டு போன எய்ம்ஸ் சீக்கிரம் கட்டி முடிச்சு திறப்பு விழாவிற்கு வரட்டும்... தமிழ் நாட்டுக்கு எதாவது செஞ்சதா சொல்லிக்கலாம்... செய்வீர்களா...??


hari
அக் 07, 2024 13:26

பாவம் படிக்காத பட்டிக்காட்டான் பாமரனின் கருத்து.....


Ibrahim Ali A
அக் 07, 2024 12:21

இந்தப் பாலத்துக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயர் வைக்க வேண்டும் நம் நாட்டுக்கு புகழ் கிடைக்கும்


Ibrahim Ali A
அக் 07, 2024 12:08

பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் அவர்கள் வருவார்கள் இந்த பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் என்று பெயர் சூட்ட வேண்டும் என் இதற்கு இந்த பெயர் சூட்டும் போது நாட்டுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கும்


ராமகிருஷ்ணன்
அக் 07, 2024 05:01

திமுகவினர் கடலில் கஷ்டப்பட்டு பாலம் கட்டினால் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதா, வெக்கங்கெட்ட திமுக உ பி யின் மைண்டு வாய்ஸ்.


சமீபத்திய செய்தி