உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தவறாக சொத்து வரி வசூல்; திருத்த மறுக்கும் அதிகாரிகள்

தவறாக சொத்து வரி வசூல்; திருத்த மறுக்கும் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில், தவறான பரப்பளவு அடிப்படையில் சொத்து வரி வசூலிப்பதால், வங்கிக்கடன் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு, சொத்து வரி வருவாய் பிரதான நிதி ஆதாரம். பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாத நிலையில், 2021ல் வெகுவாக உயர்த்தப்பட்டது. அதாவது, வீடுகளுக்கு, 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டும், அதை ஏற்று, பொது மக்கள் கட்டத்துவங்கினர். அத்துடன், ஒவ்வொரு வீட்டில் வசிப்பவர்களிடமும் சுய மதிப்பீட்டு படிவம் பெறப்பட்டது. அதில், வீட்டின் பரப்பளவு தொடர்பான விபரங்களை உரிமையாளர்கள் அளித்தனர். ஆனால், பெரும்பாலான வீடுகளின் பரப்பளவு விபரங்கள், தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, 800 சதுர அடி வீட்டின் பரப்பளவு, 1,000 அல்லது, 1,200 சதுர அடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.பழைய பரப்பளவுக்கும், புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்ட பரப்பளவுக்கும் இடைப்பட்ட அளவுக்கான சொத்து வரித்தொகை, வீட்டு உரிமையாளர் கணக்கில் நிலுவையாக குறிப்பிடப்படுகிறது. இதுதொடர்பாக, பொதுமக்கள் அளிக்கும் முறையீடுகளை, அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

இப்பிரச்னை தொடர்பாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

தமிழகம் முழுதும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி பதிவேடுகளில் தவறான பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்து குறித்த பத்திரம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் அடிப்படையில் தான், பரப்பளவை குறிப்பிட வேண்டும்.இந்த ஆவணங்களை பெறுவதிலும், சுய மதிப்பீடு முறையில் விபரம் பெறுவதிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த இரண்டிலும் இல்லாமல், புதிதாக ஒரு பரப்பளவை அதிகாரிகள் பதிவேற்றம் செய்வது, புதிய பிரச்னையை ஏற்படுத்துகிறது.வீட்டு உரிமையாளர்கள், வங்கிக்கடன் உள்ளிட்ட விஷயங்களுக்கு செல்லும் போது, இந்த தவறான பரப்பளவால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து முறையீட்டு மனுக்கள் அளித்தும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசிடம் இருந்து இதற்கான வழிகாட்டுதல்கள் வரவில்லை என்று கூறுகின்றனர். இதை சரிசெய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V Prabhu
நவ 20, 2024 18:31

I am also a sufferer by wrong valuation by Thiruninravur Town Panchayat, comes under Greater Chennai near Avadi and paying 3 times of house tax.


Narayanan.R
நவ 20, 2024 11:22

I have also suffering by wrong valuation of property tax by Ambattur Municipality. Is it possible to seek court intervention by public interest petion on commissionar?.


hrjorim
நவ 19, 2024 11:35

நகராட்சி நிர்வாகத்துறை எல்லா நகர மற்றும் மாநகர ஒவ்வொரு இடத்தின் சொத்துவரி மற்றும் குடிநீர், கழிவுநீர் வரிகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்து அந்தந்த வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நகலை கொடுக்கவேண்டும் . ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை சரி செய்ய ஒரு தனியார் குழு ஒன்று அமைக்கவேண்டும்.


suriyanarayanan
நவ 19, 2024 09:38

சொத்து வரி புதியதாக பதிவு செய்யும் போது அப்பார்ட்மெண்ட் கள் சதுர அடிகள் மாறாது, மற்றும் சிஎம்டியே அப்புருவல் உள்ளது, கம்பிளிஷன் சர்டிபிகேட் அரசு கொடுக்கிறது, நிறைய வீடுகள் உள்ளே அப்பார்ட்மெண்ட்களில் குழப்பங்கள் உள்ளன


V GOPALAN
நவ 19, 2024 08:10

தவறான சொத்து வரியை சி ம் செல்லுக்கு அனுப்பினால் அவர் அன்பரசுக்கு அனுப்புவார் அன்பரசு அதிகரிகளுக்கு அனுப்புவார் அதிகாரிகள் விசாரிக்காமல் எல்லாம் சரியாக உள்ளது என்று சி ம் செல்லுக்கு எழுதுவார். ஒரே அளவு உள்ள பிளாட்டிற்கு ஒவ்வொரு தளத்திற்கும் பல்வேறு வரி விதித்துள்ளார்கள். மக்கு சி ம் இ ருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்


Suresh Kesavan
நவ 19, 2024 06:52

நானும் பலமுறை முறையிட்டும் தீர்வு இல்லை ...என்னுடைய வீட்டின் பரப்பளவும் அதிகப்படுத்தி வசூல் செய்தனர்... அனைத்தும் டாக்குமெண்ட்களை அளித்தும் பலனில்லை.. வேறு வழியின்றி தண்டம் அழுதுவிட்டு வந்தேன்.. விடியா த்ராவிஷ மாடல் அரசு இப்படித்தான் இருக்கும்.


புதிய வீடியோ