உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த ஆசிரியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தொடக்ககல்வியில் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க கல்வியை முடக்கும் வகையில் உள்ளது. அதாவது கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் 'கை வைத்தும்' அந்த உத்தரவு வெளியாகியதால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:

தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது தவிடு பொடியாகி விட்டன. பேச்சு வார்த்தைகள் பயனற்று போகின்றன.குறிப்பாக தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர்.இதுவரை தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றனர். 20 ஆண்டுகள் நடைமுறையை உடைத்து இந்த அரசு உத்தரவில் மாற்றம் கொண்டு வந்ததால் தொடக்கக் கல்வியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி என ஒரு லட்சம் பேருக்கு பதவி உயர்வு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பட்டதாரி ஆசிரியர் தமிழாசிரியர் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு இருந்தது. தற்போது பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் என திருத்தம் செய்யப் பட்டுள்ளது.இது ஆரம்ப நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்வதை தடுக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வும் பறிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப் பள்ளிகளில் ஒரு காலத்தில் 1-முதல் 8 வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களே கற்பித்தல் பணி செய்தனர். அங்கு தலைமையாசிரியர்களாக மூத்த இடைநிலை ஆசிரியர்களே பதவி உயர்வில் நியமிக்கப்பட்டனர்.நாங்கள் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இடைநிலை ஆசிரியருக்குப் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க வேண்டாம் என்கிறோம். 5000 ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிப்பது எந்த வகையில் நியாயம். இந்த உத்தரவு வெளியிடும் முன் சங்கங்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை. மாநில சீனியாரிட்டியால் பாதிப்பது 90 சதவீதம் ஆசிரியைகள். பதவி உயர்வை புறக்கணிக்கும் முடிவில் அனைத்து ஆசிரியர்களும் உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
ஜன 18, 2024 21:25

மாநில அளவில் சீனியாரிட்டி மிகவும் நல்லது.எங்கு வேண்டுமானாலும் டிரான்ஸ்ஃபர் போடலாம்.. சொந்த ஊர் சாதி சங்கங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரம் ஆகிய அக்கப்போர்கள் குறையும்


தமிழ் மைந்தன்
ஜன 18, 2024 21:10

திமுக அரசின் முக்கியமான மக்கள் நலன் சார்ந்த நியாயமான திட்டம் இது.... இதில் எவ்வித ஊழலும் இன்றி மிக நேர்மையாக நியாயமாக பனி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.....இதை பாராட்ட வேண்டும்...பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி செயலாளர் ஆகியோர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.....இதுபோல் அனைத்து துறைகளிலும் செய்யவேண்டும்.... வாழ்க வளர்க கல்வி துறை


raja
ஜன 18, 2024 17:48

... திருட்டு திராவிடம் போட்டு கொண்டு வந்தீங்கள்ள...


N SASIKUMAR YADHAV
ஜன 18, 2024 17:14

அனுபவியுங்க ராஜா அனுபவியுங்க ஆசிறியர்களான உங்களால் மற்றும் அரசு ஊழியர்களின் சுயநலத்தால்தான் தமிழக கோபாலபுர குடும்பத்தால் சுரண்டப்பட்டது . தேர்தல் வந்தாலே மிரட்ட கிளம்பிடுவானுங்க சுயநலம் கொண்ட அரசு ஊழியனுங்க . மாணவர்களை நுழைவு தேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாத உங்களுக்கு எதற்கு சலுகைகள் கொடுக்கவேண்டும்


நரேந்திர பாரதி
ஜன 18, 2024 13:43

விடியல் ஆட்சிக்கு பாடுபட்ட இவர்களின் கதியை பார்த்தீர்களா?


Duruvesan
ஜன 18, 2024 08:37

எல்லோருக்கும் விடியல் தந்த கர்த்தரின் சீடர் வாழ்க


duruvasar
ஜன 18, 2024 08:32

கண்மூடித்தனமாக பட்டனை அழுத்திய பாதகத்திற்க்கு இப்போது அனுபவிக்கிறீர்கள். இனியாவது ஆட்டு மந்தைகளாக இல்லாமல் அறிவை பயன்படுத்தி ஆக வேண்டியதை பெறும் வழிகளை தேடுங்கள்.


Rajarajan
ஜன 18, 2024 07:48

உங்கள் வாரிசுகள் எல்லாம் எந்த அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள்?? அந்த பட்டியலை பொதுமக்களிடம் வெளியிடலாம். இதற்கு மட்டும் அனைத்து அரசு சம்பளம் வாங்குபவர்கள் சங்கங்கள் பம்முவதேன் ??


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ