உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்களில் ஒருவன்: இஸ்லாமிய நாடுகளின் தோழனாக பிரதமர் மோடி!

உங்களில் ஒருவன்: இஸ்லாமிய நாடுகளின் தோழனாக பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரம்ம தேவன் தன் தோஷம் நீங்க வழிபட்ட நாகநாதசுவாமி கோவில் அமைந்திருக்கும் ஆம்பூர்; வாணி தேவியான அன்னை சரஸ்வதி தேவி சாபவிமோசனம் பெற்று பாடியதுமான, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி; வாழையடி வாழையாக வாழைச் சாகுபடிக்குப் பெயர் பெற்ற குடியாத்தம் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிகளிலும், பெரும் திரளாக கூடி ஆதரவளித்த பொதுமக்கள் ஆரவாரத்துடன், வெகுசிறப்பாக பா.ஜ., பாதயாத்திரை பயணம் நடந்தேறியது.ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்று கரையில் விவசாயம் செய்வோர் அனைவரையும், விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதில்தான் ஆளும் அரசு குறியாக இருக்கிறது. போதிய சுத்திகரிப்பு அலைகள் அமைக்கவும், அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், திராவிட மாடல் அரசு தவறிவிட்டது.பிரதமர் மோடி, நல்லாட்சியாலும், வெளியுறவுக் கொள்கைகளாலும், வளர்ச்சியாலும் உலக நாடுகளின், 14 உயரிய விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டவர். அவற்றில், ஆறு விருதுகளை இஸ்லாமிய நாடுகள் வழங்கிஉள்ளன. அதுமட்டுமல்ல, அபுதாபி அரசர், எகிப்து நாட்டுத் தலைவர், இஸ்லாமிய உலக லீக்கின் தலைவர் என, முக்கியமான இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடியை நெருங்கிய நண்பராக குறிப்பிடுகின்றனர்.ஆனால், தமிழகத்தில் பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரானவராக கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.

சலுகைகள்

 கடந்த 2014க்கு முன்வரை, காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மத்திய அரசு பணிகளில், 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது, 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்தவர்களில், 36 சதவீதம் சிறுபான்மையினர் பிரதமரின் விவசாய கவுரவ நிதி திட்டத்தில் 33 சதவீதம்; பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீதம் சிறுபான்மையினர் பயன்பெற்றுள்ளனர் இஸ்லாமிய பெண் குழந்தைகள் பட்ட படிப்பை ஊக்குவிக்க, அவர்கள் படித்து முடித்தவுடன், 51,000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தி.மு.க., தொடர்ந்து மக்களை, மதத்தால் பிரித்து வெறுப்புணர்வைத் துாண்டி அரசியல் செய்கிறது.முக்கியமான இஸ்லாமிய நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள, சிறுபான்மை சகோதரிகளுக்கு எதிரான 'முத்தலாக்' முறையை இந்தியாவிலும் நீக்கியவர் பிரதமர் மோடிதான். அன்று, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்த பிரிவினையை, இன்று தி.மு.க., - காங்., போன்ற கட்சிகள் செய்து வருகின்றன. ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்ப்பதைத் தவிர, சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்காக, எந்தத் திட்டங்களையும் தி.மு.க., செயல்படுத்தவில்லை.

கிராம சாலைகள் இல்லை

கிராம சாலை திட்டத்திற்காக, மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை 5,886 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனாலும், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும், இந்த தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலை என்ற மலை கிராமம் உட்பட, பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், 100 சதவீத சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது.இந்தப் பகுதியில் ஓடும் பாலாற்றில் கழிவுகள் கலப்பதாக, பலமுறை விவசாயிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டியும், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதால், மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தரைப்பாலம் அமைக்க, மத்திய அரசு 67 கோடி ரூபாய் ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பாலம் அமைக்கப்படவில்லை. பாலத்தை விரைந்த கட்ட வைக்கும் முயற்சியில் பா.ஜ., களமிறங்கி உள்ளது.

சுவடே இருக்காது

குடியாத்தம் தொகுதியில், முன்னாள் முதல்வர் காமராஜர், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின், கவுண்டினிய நதியின் குறுக்கே பாலம் அமைத்தார். அந்த பாலம், 70 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. தி.மு.க., ஆட்சியில் கட்டியிருந்தால், பாலம் இருந்த சுவடே தெரியாமல் போயிருக்கும். ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர் உதாரணம். அன்னிய முதலீட்டாளர்கள் தமிழகத்தைவிட, பிற மாநிலங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், தமிழகத்தில் நிலவும் கமிஷன், ஊழல் நிலவரம். வேலையில்லா இளைஞர்களுக்கு, மூன்றரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., 10,000 பேருக்கு மட்டுமே அரசு பணி வழங்கி உள்ளது. காவல் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் ஆள் பற்றாக்குறை உள்ளது. வரும் லோக்சபா தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கப் போகும் தேர்தல். அதனால், ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். -பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

PRAKASH.P
பிப் 04, 2024 22:44

But we need improve our relationship with surrounding nations.


Akhand Bharat × = INDIA
பிப் 04, 2024 15:48

தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு செலவு செய்யும் பணம் வட இந்தியாவில் ஒரு மாநிலம் முழுவதற்கும் செலவு செய்யும் பணத்திற்கு நிகரானது என்று போன சட்டசபை தேர்தலுக்கு திமுகவினரின் வெற்றிக்காக 370 கோடிகள் வாங்கி கொண்டு அவர்களுக்கு தேர்தல் வேலை செய்த ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலினுடைய திமுகவினர் எப்படி தேர்தலுக்கு பணத்தை அள்ளி சூறை விடுகிறார்கள் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார் இந்த பிரசாந்த் கிஷோர் இதை எல்லாம் மவுனமாக கேட்டுக் கொண்டு இருக்கும் கருணாநிதி சொன்ன சோற்றால் அடித்த பிண்டங்களான இந்து தமிழர்களுக்கு புரிந்தால் நல்லது.


SUBBU,MADURAI
பிப் 04, 2024 12:12

//மோடி இந்திய இஸ்லாமியர்களின் ஆதரவை வாங்கியிருக்கிறாரா என்பதை பற்றி பேசுங்கள்//பிரதமர் மோடியின் மேல் உள்ள வெறுப்பினால் தங்களின் பிறந்த நாட்டையே இழிவு படுத்தும் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், இந்தியாவில் இருக்கப் பிடிக்காமல் தனிநாடு கேட்டு போராடி பிரிந்து சென்ற பாகிஸ்தான் என்ற நாடு தன்னுடைய நாட்டையும் நாட்டு மக்களின் வளர்ச்சியை கவனிக்காமல் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் மட்டுமே வளர்த்து விட்டது அதன் பயன் இன்றைக்கு அவர்கள் வளர்த்துவிட்ட அந்த பயங்கரவாத தீவிரவாதிகளினாலேயே அந்த நாடு அழிவை சந்தித்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் தற்சமயம் பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியால் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது எனவே அந்த நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலையை பார்த்தாவது நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.இந்த பாரத தேசம் மட்டும்தான் உங்களுக்கு நிம்மதியாக வாழுகின்ற சுதந்திரத்தை அளித்திருக்கிறது எனவே இந்தியா மட்டும்தான் உங்களின் சொர்க்க பூமி என்பதை உணருங்கள் வேறு எந்த இஸ்லாமிய நாடுகளும் நீங்கள் இஸ்லாமியர் என்பதற்காக உங்களை பட்டுக் கம்பளம் விரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அவர்களை பொறுத்தவரை தாங்கள்தான் ஒரிஜினல் இஸ்லாமியர்கள் என்கிற மனப்பான்மையில் இருப்பவர்கள் உங்களை பொறுத்தவரை அவர்களுக்கு நீங்கள் ஒரு மதம்மாறிய முஸ்லீம்களே அவர்களின் இத்தகைய மேட்டுக்குடி எண்ணத்தை நான் சௌதியில் (Saudi Aramco) பணி புரியும் போது நேரில் பார்த்திருக்கிறேன் இந்தியர்கள் அந்த நாட்டிற்கு வேலைக்கு வருவது போல பக்கத்தில் உள்ள மற்ற அரபு நாடுகளில் இருந்து சௌதிக்கு வேலை பார்க்க முஸ்லீம்கள் வருவார்கள் உதாரணத்திற்கு எகிப்து, ஏமன், துருக்கி, லெபணான், சிரியா, ஓமன், ஜோர்டான், சூடான் போன்ற பக்கத்து அரபு நாடுகளில் இருந்து வருபவர்களை சம உரிமை கொடுத்து மதித்து நடத்துவதை போல உங்களை அதாவது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம்களை அவர்கள் மதிப்பதில்லை ஏனென்றால் அவர்களுக்கு நீங்கள் ஒரிஜினல் இஸ்லாமியர்கள் அல்ல மதம் மாறிய முஸ்லீம்கள் நீங்கள் இந்துக்களாகிய எங்களை எப்படி காஃபீர் என்று அழைக்கிறீர்களோ அதே போல்தான் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்களை அழைக்கிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். ஆகவே இனிமேலாவது உங்கள் தாய்நாடான இந்த பாரதத்தை பழிக்காமல் இந்துக்கள் அனைவரும் முன்பு நம் தொப்புள் கொடி உறவுகளாகவும் நம் சகோதர, சகோதரிகளாகவும் இருந்தவர்கள்தான் என்பதை மனதில் வைத்து அனைவரிடமும் அன்பாக பழகி உங்கள் தேசப்பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.


Mohamed Younus
பிப் 04, 2024 15:26

மோடி இந்திய இஸ்லாமியர்களின் ஆதர்வரை பெற்று உள்ளாரா ? என்பது தான் இங்குள்ள கேள்வி ? அதற்கு எதற்கு அரபு நாடும் , அராம்கோ அனுபவமும் , பாகிஸ்தான் பொருளாதாரமும் … இந்திரா காந்தி முஸ்லிம்களின் ஆதரவை பெற வில்லை என சொல்லவில்லை ..பெற்று இருந்தார் .காந்தியின் பக்கம் , நேருவின் பக்கம் முஸ்லிம்கள் அணிவகுத்தனர் ..ராஜீவின் பக்கம் இருந்தனர் ..வி. பி சிங்கை ஆதரித்தனர் . மோடியை இந்திய முஸ்லிம்கள் அஆதரித்து இருக்கிறார்களா ? பதில் தேவை .


Ravisankar
பிப் 04, 2024 15:57

Superb. Really a fantastic briefing. In India, Muslims are regularly misguided, rater I can use the word brain washed, under the pretext of Majority/Minority. Parties like DMK/AIADMK/CONGRESS/ COMMUNISTS and Various other family parties repeatedly propagate false/lies and the innocent Muslims have become a scape goat for the same.


Godyes
பிப் 04, 2024 11:25

மத்திய மாநில ஆட்சி உறுப்பினர்கள் தொகுதிகளில் சுற்றி பார்த்து மக்களிடம் தொகுதி நிலைமைகளையும் சாதனை நிறை குறைகளையும் சொல்வதில்லை.அதை அண்ணாமலை சொல்லி மக்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஒரு பெரிய சாதனை.வாழ்க அண்ணாமலை.


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 10:48

ஹிந்து என்பதற்க்கு என்ன டெபினிஷன்


வீரபாண்டி,அலங்காநல்லூர்
பிப் 04, 2024 13:36

உன்னைப் போன்ற இந்து அல்லாதவனுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.


Barakat Ali
பிப் 04, 2024 14:31

தமிழன் ஹிந்து அல்ல ன்னு வேற வேற ஐடி யூஸ் பண்ணி நூறு தடவையாவது இங்கே நீயி பதிவு செஞ்சிருகுற ..... ஹிந்து என்றால் என்ன பொருள் என்று தெரியாமையே தமிழன் ஹிந்து அல்ல என்று சொல்லும் ஒரு மகா அறிவாளியை நான் கண்டதில்லை ....


Mohamed Younus
பிப் 04, 2024 09:52

மோடி இந்திய இஸ்லாமியர்களின் ஆதரவை வாங்கி இருக்கிறாரா என்பதை பற்றி பேசுங்கள் தன் சொந்த நாட்டு சிறுபான்மை மக்களை பகைத்து கொண்டு வெளி நாட்டு அதிபர்களிடம் நல்ல பெயரை வாங்கி என்ன பயன்? பூகோள அரசியல் ரீதியாக மோடிக்கு கிடைக்கும் மரியாதையை அடிப்படையாக கொண்டு அவரை இந்திய இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும் என கூறுவது தவறானது. இருந்தும் காஷ்மீர் பிரச்னையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மோடி அரசை கண்டித்ததை மறக்க வேண்டாம். மத வெறி ஆட்டம் நடத்தி இந்திய இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கும் நிலையில் இருந்து மோடி அரசும் சங்க பரிவார்களும் மாறாத வரை அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்க போவது இல்லை.


கலிவரதன்,திருச்சி
பிப் 04, 2024 11:42

ஒரிஜினல் அரபு முஸ்லீம்கள் கூட இப்படி கதற வில்லை இங்கே வாளுக்கு பயந்து மதம்மாறியதுகள் கதறுகிற கதறல் இருக்கே தாங்க முடியல...


Ramesh Sargam
பிப் 04, 2024 09:39

எங்கள் பழனிசாமி (அதிமுக) கூட இஸ்லாமிய நண்பர்களின் தோழன். ஆம், அவர் இப்ப எல்லாம் நெற்றியில் விபூதி இடுவதில்லை..


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 10:38

ஹலோ பழக்க தோஷம்


குமரன்
பிப் 04, 2024 08:15

திமுகாவின் பித்தலாட்டங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் இவ்வளவு தெளிவாக சொல்ல வில்லை என்பது மட்டும் உண்மை


Thirumalaimuthu L
பிப் 04, 2024 05:37

அருமையான, உண்மையான தகவல் கொண்ட பேச்சு. வாழ்த்துக்கள் ????


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை