உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா: தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: ஆர்.எஸ்.பாரதி

ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா: தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: ஆர்.எஸ்.பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''தி .மு.க., அரசு நிறைவேற்றும் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அது இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்து விடும்,'' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மத்திய அரசின் மசோதா குறித்து, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: 'ஆன்லைன் கேமிங்' மற்றும் சூதாட்ட செயலிகள் வாயிலாக, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை தடுப்பதற்கு இது வழி வகை செய்யும். பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள், பந்தயம், சூதாட்டம் போன்றவை தடைக்குரியவை என, மசோதாவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கல்லுாரி மாணவர்கள் துவங்கி, குடும்பத் தலைவர்கள் வரை பொது மக்கள் பலர், ஆன்லைன் சூதாட்டத்தால் அடிமையாகி, தங்களது பணத்தை இழந்தது மட்டும் இல்லாமல், தங்களது இன்னுயிரையும் மாய்த்துக் கொண்டனர். பலர் தாங்கள் தற்கொலை செய்து கொண்டது மட்டும் இல்லாமல், தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்தது, மேலும் வேதனைக்குரிய விஷயமாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவில், ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது, மத்திய அரசு தடை விதித்திருப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இப்படி தி.மு.க., அரசு நிறைவேற்றும் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அது இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்து விடும். இவ்வாறு கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Sadananthan Ck
ஆக 23, 2025 16:49

திமுகவிற்கு எதில் தான் வெற்றி இல்லை நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களைக் எல்லாம் திமுக தான் காரணம் ஸ்டிக்கர் ஒட்டுவதில் இவர்களை மிஞ்சிய ஆட்கள் இல்லை


c.k.sundar rao
ஆக 23, 2025 00:47

RSB is expert in pasting STICKER.


xyzabc
ஆக 23, 2025 00:39

நீ ஓட்டப்பந்தய போட்டியில் ஓடாமலேயே கோப்பை வாங்குபவன். நீயும் உன் சக மந்திரிகளும் வேற லெவல். அறிவு கெட்ட அறிவாலய கொத்தடிமைகள்.


Rajan A
ஆக 22, 2025 22:02

வெட்கப்படாமல் ஸ்டிக்கர் ஒட்டும் தைரியம் தான் ஆச்சிரியப்பட வைக்கிறது.


Rajasekar Jayaraman
ஆக 22, 2025 18:42

தெரிந்தே பொய் சொல்ல வெட்கப்படாத கட்சி திருட்டு திராவிடம் மற்றும் இந்தி கூட்டணி.


Ganapathy Subramanian
ஆக 22, 2025 18:33

விடியா கட்சியினர் பொய் பேசுவதில் மிகவும் திறமைசாலிகள். அதிமுக ஆட்சியில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு அதனை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் நியமித்த வக்கீல்கள் சரியாக வாதம் செய்யாமல் தோற்று பின் அதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வருடங்கள் கடத்தியவர்கள் இவர்கள் என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா?


Sri Ra
ஆக 22, 2025 17:03

ஊரான் பிள்ளையை தன்னுது என்று சொல்லும் பழக்கம் இன்னும் மாறவில்லை.


N Sasikumar Yadhav
ஆக 22, 2025 14:54

மத்திய மோடிஜி அரசின் திட்டத்தின்மீது வெற்றிகரமாக 552 வது ஸ்டிக்கர் திருட்டு திமுகவால் ஒட்டப்பட்டது


Gopalan
ஆக 22, 2025 14:38

கூடிய விரைவில் டாஸ்மாக் தடை சட்டம் கொண்டு வந்தால் பெரும் மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றப்படும். அப்போது ஆர்எஸ்பாரதி அவர்கள் கிரடிட் திமுகவிற்கு என்று சொல்வாரா??


thangam
ஆக 22, 2025 14:34

திமுகவை தடை செய்யும் நாளில் தமிழ்நாட்டுக்கு தீபாவளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை