உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத வெளிநாடு வாழ் இந்தியர்கள்

ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: நாட்டின் வாக்காளர்களாக பதிவு செய்வதில் பெரும் ஆர்வத்தை காட்டிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதை பயன்படுத்துவதில் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என்பது, தலைமை தேர்தல் கமிஷனின் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது.இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலையொட்டி, 1 லட்சத்து 19,374 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்தனர். இதில் அதிகபட்சமாக, கேரளாவில், 89,839 பேர் அடங்குவர். 2019 லோக்சபா தேர்தலையொட்டி, 99,844 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்தனர். நடப்பாண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பதிவு செய்த 1 லட்சத்து 19,374 பேரில், வெறும் 2,958 பேர் மட்டுமே, நம் நாட்டுக்கு வந்து லோக்சபா தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். இதில், 2,670 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கூட ஓட்டுரிமையை பயன்படுத்தவில்லை. குஜராத்தில் 885 பேர் பதிவு செய்த நிலையில், இருவர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.இதே போல், மஹாராஷ்டிராவில் 5,097 பேர் பதிவு செய்த நிலையில், 17 பேரும், ஆந்திராவில், 7,927 பேர் பதிவு செய்த நிலையில், 195 பேரும் மட்டுமே லோக்சபா தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.பயணச் செலவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான நிர்ப்பந்தம், கல்வி உள்ளிட்டவை, நேரில் வந்து ஓட்டளிக்க முடியாமல் போனதற்கான காரணங்களாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
டிச 30, 2024 11:07

இங்கேயே சோம்பேறியாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கே தபால் ஒட்டு இருக்கும்போது... வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினால் என்ன ? அருகில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு சென்று ஓட்டளிக்கும் வசதியையும் ஏற்படுத்தலாமே


S BASKAR
டிச 30, 2024 07:42

இந்தியா டிஜிட்டல் இந்தியாவா மாறிவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் ஓட்டு போட ஏற்பாடு செய்தால் வெளிநாட்டினர் மட்டுமல்ல இந்தியாவிலும் ஓட்டு சதவீதம் அதிகம் ஆகும்


இறைவி
டிச 30, 2024 06:48

வெளிநாடுகளுக்கு கல்வி கற்கவோ வேலைக்கோ சென்றவர்கள் பயண செலவுகள், விசா கட்டுப்பாடுகள் அலுவலகத்தில் விடுப்பு என்று பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அத்துணை பெரும் தேர்தலுக்காக இந்தியா பயணப்பட விமானங்களில் கூட இடன் கிடைக்காது. இதை தீர்க்க ஒரே வழி, தபால் ஓட்டு போல, அவர்கள் அருகில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு சென்று அடையாள அட்டையை காண்பித்து, தங்கள் தொகுத்துக் உண்டான வாக்கை தேர்தல் ஆணையத்தின் நேரடி தளத்தில் வாக்களிக்கலாம். இந்தியாவில், வாகு எண்ணும் அன்று அந்த முன் ஒட்டுக்களையும் தொகுதி வாரியாக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய கணினி முன்னேற்ற காலத்தில் இவைகள் சாத்தியமே. ஃப்ரெஞ்ச் தலைவர் தேர்தலுக்கு இங்கு பாண்டியில் பல காலமாக வாக்களிப்பார்கள். அது போலதான் இதுவும். இதற்கு தேவை திறந்த மனதும் அரசியல் ஆதாயம் தேடாத புத்தியும்.


முக்கிய வீடியோ