உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனிசாமி - மோடி பேச்சு: பன்னீர்செல்வம் அம்பலம்

பழனிசாமி - மோடி பேச்சு: பன்னீர்செல்வம் அம்பலம்

கோவை: ''அ.தி.மு.க., இயக்கம் பிளவுபட்டுள்ளது. தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு இணைய வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:கட்சி இணைய வேண்டும்; அப்போதுதான் ஆட்சிக்கு வர முடியும் என, உண்மையான தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.பார்லிமென்ட் தேர்தலில், 7 தொகுதிகளில் அ.தி.மு.க., டெபாசிட் இழந்துள்ளது; 13 தொகுதிகளில் 3வது இடத்துக்கு சென்றுள்ளது. கன்னியாகுமரியில் நடந்த இடைத்தேர்தலில், ஓட்டு குறைந்து விட்டது. அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையை மீட்பதில் குழுவாக செயல்படும் நாங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். இணைய வேண்டும் என்ற, ஒத்த கருத்துடையவர்களுடன், இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் ரகசியம். செங்கோட்டையுடன் பேசுகிறேன் என சொல்ல வேண்டுமா?எப்படியாவது சண்டையை இழுத்து விட வேண்டுமா? தமிழகத்தில் எல்லா கட்சியின் தலைவர்களும், முதல்வர் ஆக வேண்டும் என பேசிக் கொண்டு இருக்கின்றனர். இரு பெரும் தலைவர்களும், உயிரை கொடுத்து காப்பாற்றிய அ.தி.மு.க., இயக்கம் இன்று பிளவுபட்டுள்ளது. தனிப்பட்ட ஈகோவை உதறி கீழே போட்டு விட்டு, கட்சி நன்றாக இருக்க வேண்டும்; ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இணைய வேண்டும். பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பழனிசாமியிடம் வலியுறுத்திச் சொன்ன விஷயம், 'பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியை வழிநடத்துங்கள்' என்பதுதான். 'இருவருக்கு மட்டுமல்ல; கட்சிக்கும் அது தான் பலம். அ.தி.மு.க., மற்றும் இருவருடைய நலனுக்காகவும் சொல்கிறோம்' என்று வலியுறுத்திச் சொன்ன பின்பும் அதை, பழனிசாமி கேட்டு நடக்கவில்லை; தன்னிச்சையாக செயல்பட்டார். விளைவு -- கட்சி, பார்லிமென்ட் தேர்தலிலும் தோல்வி அடைந்தது. இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சரவணக்குமார்
பிப் 20, 2025 23:13

ஐயா ஓபிஎஸ் எம்பி எலக்சன் நின்னார அவர் தொகுதியில் எவ்வளவு வாக்கு வாங்கினார்?ஜெயிச்சுட்டாரா? செல்லாக்காசு ஓபிஎஸ் வாழ வழி இல்லாம இபிஎஸ்–ஐ குறை சொல்லி எப்படியாவது சேர்ந்துடலாம்னு அலைகிறார்.


முருகன்
பிப் 20, 2025 18:06

அதிமுக யார் கட்டு பாட்டில் இருக்கிறது?


KRISHNAN R
பிப் 20, 2025 13:23

தர்மம் யு த்தம் இல்ல.. பணம் பதவி யுத்தம்


RAAJ68
பிப் 20, 2025 12:55

மொத்தத்தில் எல்லாருமா சேர்ந்து அதிமுக என்ற கட்சிக்கு சமாதி கட்டிட்டீங்க. நீங்க கொள்ளை அடித்த லட்சம் கோடிகளை வெளி நாட்டில் முதலீடு செய்து தீவு தீவாக வாங்கி குவித்து வைத்துள் றீர்கள். அம்மாவுக்கு துரோகம் செய்த உங்கள் எல்லோருக்கும் நல்ல சாவு கிடையாது.


Ranga
பிப் 20, 2025 12:53

இவர் இன்னும் இருக்காரா?


sethu
பிப் 20, 2025 12:12

பழனிச்சாமியிடம் சில லட்சம் கோடிகள் பணம் சிக்கியுள்ளது அதை திமுகவின் உதவியில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் திமுகவை வளரவிட்டுக்கொண்டு அதிமுக ஐ காலி செய்துகொண்டு உள்ளார் இபிஸ்


Haja Kuthubdeen
பிப் 20, 2025 12:58

இந்த கதை நல்லா இருக்கே....ஆட்சி அதிகாரம் சிபிஐ அமலாக்கதுறை வருமான வரித்துறை அனைத்தும் இருக்கும் பிஜெபி அரசால் அந்த பணத்தை கண்டுபிடிக்க முடியலையா!!!!


KRISHNAN R
பிப் 20, 2025 10:18

இந்த கட்சி நிலை இப்படி உள்ளது


HoneyBee
பிப் 20, 2025 10:01

முதலில் ஆரம்பித்து வைத்து இவர் தான்... இப்போது புரிந்து கொண்டு உள்ளார்


Naga Subramanian
பிப் 20, 2025 09:05

தர்ம யுத்தம் மற்றும் அதர்ம சத்தம். ஏனோ ஓபிஎஸ்சும் ஏபிஎஸ்சும் நினைவில் வந்தார்கள்.


Haja Kuthubdeen
பிப் 20, 2025 08:46

முதலில் நீர் யோக்கியனா இரு....தர்ம யுத்தம் என்ற பெயரில் கட்சியில் முதல் கலகத்தை தொடங்கி வைத்தது நீதானே???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை