உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்.ஜி.ஆர்., குறித்த விமர்சன பேச்சு; திருமாவளவனுக்கு பழனிசாமி பதிலடி!

எம்.ஜி.ஆர்., குறித்த விமர்சன பேச்சு; திருமாவளவனுக்கு பழனிசாமி பதிலடி!

'திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை புகுத்தியவர் எம்.ஜி.ஆர்.,' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சென்னையில் நடந்த கருணாநிதி நினைவு நாள் கூட்டத்தில் பேசினார். இதற்கு, 'எம்.ஜி.ஆரை விமர்சித்தால், தமிழக அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போவார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இருவருடைய கருத்துகள் இங்கே: திருமாவளவன் , தலைவர், விடுதலை சிறுத்தைகள்: தமிழகத்தில் புதிதாகக் கிளம்பி இருக்கும் அமைப்புகள் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்ற பெயரில், உண்மையான எதிரி யார் என்பதை மக்களுக்கு சொல்லாமல், தமிழ் தேசியத்தின் எதிரி கருணாநிதியும், தி.மு.க.,வும் தான் என்று சொல்கின்றன; கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைத்தால் உடைப்போம் என்று வெறுப்பை உமிழ்கின்றன. ஆனால், அக்கட்சிகளெல்லாம் என்றைக்குமே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணாதுரை குறித்து எங்கும் விமர்சித்ததில்லை. கருணாநிதி மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்? இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல், 50 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது. தமிழகம் முழுதும் இருந்த கருணாநிதி எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது. ஆனால், அவரின் ஆளுமை, ஆற்றலை கண்டு வியந்த நான், கருணாநிதி குறித்து பேசுவதை நிறுத்தினேன். ஈ.வெ.ரா., அரசியலைத்தான் அண்ணாதுரை பேசினார்; அதைத்தான் கருணாநிதி பேசினார். ஆனால், கருணாநிதி தான் தாக்கப்பட்டார். கருணாநிதியை எதிர்கொள்ள முடியாமல், திரைப்படத்தில் புகழ் பெற்றிருந்த எம்.ஜி.ஆரை மாற்றாக நிறுத்தி, பார்ப்பன சக்திகளால் திட்டமிட்டு வெறுப்பு எழுப்பப்பட்டது. எம்.ஜி.ஆர்., தான், கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார்; விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்கு காரணமாக இருந்தது எம்.ஜி.ஆர்., தான். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமைய பாதை போட்டுக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., என்ற விமர்சனங்கள் உண்டு. ஜெயலலிதா தன் கடைசி மூச்சு வரை கருணாநிதியின் முகத்திற்கு நேராக, அவரது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவரது வெறுப்பு இருந்தது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மிகச்சிறந்த அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் மக்கள் திரண்டனர் என கூறுவதை விட, மிகச்சிறந்த கதாநாயகன், கதாநாயகி என்ற அடிப்படையில் தான் மக்கள் திரண்டனர் என்பதே உண்மை. எனினும், தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் காலுான்ற முடியாமல் போனது, எம்.ஜி.ஆரால் நடந்த நன்மை. தமிழகத்தில் காங்கிரஸ் வலிமை குன்றியதற்கு எம்.ஜி.ஆரின் எழுச்சி காரணம். காங்., வளர முடியாமல் போனது என்பதை விட, பா.ஜ., காலுான்ற முடியவில்லை. காங்., வலிமை பெற்றிருந்தால், அதை வைத்து பா.ஜ., காலுான்றி இருக்கும். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அரசியலில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் எப்படி தி.மு.க.,வுக்கு அடிமைகளாக தங்களை ஆக்கிக் கொண்டனரோ, அதே போலவே, திருமாவளவனும் தி.மு.க.,வுக்கு அடிமையாக மாறிவிட்டார். அரசியல் பேசுகிறோம் என்ற பெயரில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுாறாக விமர்சித்து பேசியிருக்கிறார். திராவிட இயக்கத்துக்குள் பார்ப்பனியத்தை புகுத்தியவர் எம்.ஜி.ஆர்., என்று பேசிய அவருக்கு, அ.தி.மு.க., சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., சாதாரண மனிதர் அல்ல; சாதாரண தலைவரும் அல்ல. தமிழக அரசியலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டவர். முதல்வராக இருந்து, தமிழகத்துக்கு நிறைய திட்டங்களைத் தந்து, மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இன்றைக்கும் அவரை, தமிழக மக்கள் தங்கள் தெய்வமாக நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்தது போன்று, தமிழக மக்களின் மனங்களில் வாழும் தலைவர் எம்.ஜி.ஆரையும் கூட, திருமாவளவன் விமர்சிக்கத் துவங்கினால், தமிழக அரசியலில் திருமாவளவன் இருக்கவே மாட்டார்; மொத்தமாக காணாமல் போய் விடுவார் என எச்சரிக்கிறோம். கருணாநிதியை திருமாவளவன் புகழட்டும்; பாராட்டிப் பேசட்டும். அது அவருடைய உரிமை. ஆனால், கருணாநிதியை புகழ்வதற்காக, அடுத்த தலைவரை இகழும் வகையில் பேசினால், அதை ஏற்க மாட்டோம். தன்னைப் போன்று இன்னொரு தலைவர் கிடைக்க மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம். எல்லா ஜாதியைச் சேர்ந்தோரும் அ.தி.மு.க.,வில் இருக்கின்றனர். எல்லாரும் ஒற்றுமையாகவும் பணியாற்றுகின்றனர். மத ஒற்றுமையும் கட்சியில் இருக்கிறது. இது, திருமாவளவன் போன்ற ஒருசில தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், எரிச்சலில் குழப்பம் உண்டு பண்ணப் பார்க்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் நடக்கவே நடக்காது. மொத்தத்தில், அரசியலில் திருமாவளவன் நினைத்தது எதுவுமே நடக்காததால், எம்.ஜி.ஆர்., மீது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Shivakumar
ஆக 11, 2025 04:04

தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினால் அனுப்பப்பட்டவர் தான் திருமா. இப்படி பேசினால் பிரச்சனைகளை திசை திருப்பி விடலாம் என்று நினைக்கின்றார். அது அவருக்கே பிரச்னை ஆகி விடுகிறது.


கிருஷ்ணன்
ஆக 10, 2025 18:41

அண்ணன், வாய், வார்த்தைகள், வரவர..நாறுது.. அண்ணா தமிழ் தாத்தா... யார் என்று கொஞ்சம் விளக்கமா..சொல்லுங்க திரு திரு திரு திருமா....?


V RAMASWAMY
செப் 05, 2025 15:02

உ. வே. சு. பாரதியார், கல்கி, இன்னும் பலப்பலர் உள்ளனர், இவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழ்த்தலைவர்கள் என்று கொக்கரிக்கும் பலர் எந்த மாநிலத்தைக்ச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வு செய்யுங்கள் புரியும். சாதி மத பேதங்களை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் வாக்காளர்களே.


Balasubramanian
ஆக 10, 2025 17:37

திமுக வின் இருபது சதவிகித ஓட்டுக்கு காரணம் தான் என்று இருமாந்திருக்கும் திருமா அன்று நூறு சதவிகிதம் காரணமாக இருந்த எம்.ஜி.ஆரை விமரிசிப்பதா? அவர் அரசியலில் இருந்த வரை மு.க.வினாலும் திமு.க.வினாலும் தலை எடுக்க முடியவில்லை! பிறகு கடசியை ஜெயலலிதா தாங்கி நின்றார் அந்த மாலைக்கு முன் திருமா நீ ஒரு சிறு கூழாங்கல் கூட இல்லை! இனி உன் அரசியல் ஃபணால் தான்.


Dhanavel
ஆக 10, 2025 16:40

திருமாவளவன் அவர்கள் உண்மையை தான் பேசினார் ஏன் கோபம்... MGR இன் ஒரே கொள்கை DMK எதிர்ப்பு மட்டுமே....


Santhakumar Srinivasalu
ஆக 10, 2025 13:04

அடுத்தவன் மனைவியை அபகரித்தவர், தகாத உறவுமுறையில் கட்சியை அபகரித்தவர் எல்லாம் அதை காப்பற்ற முடியாமல் ஒருவர் இருக்க திருமாவளவன் எந்த விதத்தில் மோசம்?


Shivakumar
ஆக 11, 2025 03:58

இப்போ அந்த கட்சிக்குத்தானே விசுவாசமாக உழைத்து கொண்டு இருக்கின்றார். இதற்க்கு அவர்தான் வெட்கபடவேண்டும்.


Kogulan
ஆக 10, 2025 12:26

ராகுல் மற்றும் திருமாவளவன் போன்றோர் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம், ஏதோ பேசவேண்டும் அறிக்கை விடவேண்டும் என்பதற்காக செய்பவர்கள், மற்றபடி ஒன்றுமறியாதவர்கள், பாவம்


Haja Kuthubdeen
ஆக 10, 2025 11:02

நாலு சீட்டுக்கு பிச்சை எடுக்கிறவர் எல்லாம் புரட்சிதலைவரை பற்றி விமர்சனம் செய்யும் அளவு வந்திருக்காங்க...அவ்ளோதான் இனி மரியாதை...


Shivakumar
ஆக 10, 2025 10:12

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு அதையெல்லாம் பேசமாட்டார். இவரின் மேல் நம்பிக்கை வைத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இவரின் அரசியல் வாழ்கை கழுதை தேய்ந்து கட்டெறும் ஆனா கதையா ஆக போகுது.


Padmasridharan
ஆக 10, 2025 08:48

கதாநாயகன்_கதாநாயகிக்குதானே மக்கள் திரண்டு வருகின்றனர். அதனால்தானே அரசியலுக்கு நுழைவதற்கு முன் ஆட்கள் நடிகர்களாக மாறுகின்றனர். நடிக்கும் மக்களை வைத்துதானே சில கட்சிகள் ஆட்சி செய்கின்றன. நம்பும் மக்களை சினிமா நடிகர்கள் உயர்த்தவும் செய்கிறார்கள், ஏமாறிய மக்களை தாழ்த்தவும் செய்கிறார்கள். ஏனென்றால் மக்களுக்கு வீட்டு நபர்களை ஹீரோக்களாக பார்ப்பதை விட ஹீரோக்களைத்தான் வீட்டு நபர்களாக பார்க்கின்றனர்.


ஆரூர் ரங்
ஆக 10, 2025 07:41

இந்திரா, வாஜ்பாய்டன் சேர்ந்த போது நினைவுக்கு வரவில்லை. அட திருமா ஜெயா வுடன் கூட்டணி வைத்த போது காணோம். என்ன ரீல்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை