உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / என்னை நம்பி கெட்டவர் இல்லை இப்தார் விழாவில் பழனிசாமி பேச்சு

என்னை நம்பி கெட்டவர் இல்லை இப்தார் விழாவில் பழனிசாமி பேச்சு

சென்னை: ''என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், நம்பி கெட்டவர் இன்று வரை யாரும் இல்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க., சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:

வாழ்வின் இளமைக் காலம் முதல் இறுதி நாள் வரை, முஸ்லிம் நண்பர்கள் பலரை பெற்றிருந்தவர் எம்.ஜி.ஆர்., அந்த மகத்தான மனிதரால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தவன் நான். அமைதி மார்க்கமான முஸ்லிம் மார்க்கத்தை தவறாக சித்தரித்து, முஸ்லிம்களின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் திரைப்பட காட்சிகள் வந்தபோதெல்லாம், உறுதிபட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. அந்த இரு பெரும் தலைவர்களால் அரசியலில் உருவாக்கப்பட்டு, அவர்களின் வழியில் அரசியல் பயணம் செய்யும் நான், அவர்களைப் போலவே முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனாக, சகோதரனாக, பாதுகாவலனாக செயல்படுவேன்.பதவிக்காகவோ, புகழுக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கென்று தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது. ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழனாக, இந்தியனாக, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன்.எல்லாருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று மனதார நினைப்பவன் நான். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான், முஸ்லிம்களுக்கு துணையாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.ஆண்டவரை துணையாக கொண்டவர்களை யாராலும் அழிக்க முடியாது. பொது வாழ்வில் அறமும், நேர்மையும் கொண்டு செயல்படுபவர்களுக்கு ஆண்டவன் துணை நிற்பார் என்பதற்கு நபிகள் நாயகம் வாழ்வே உதாரணம். மக்களின் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொண்டு செயல்படும் கட்சி அ.தி.மு.க., அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தன்மையை மதிக்கிறோம்; பாதுகாக்கிறோம். ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒவ்வொரு விதம். அது தான் கைக்கு அழகு. அது தான் இறைவனின் படைப்பு. இதைத்தான் எங்கள் தலைவர்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டி சென்றிருக்கின்றனர்.எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முஸ்லிம்களுக்கு துணை நின்றது போல, நாங்களும் துணை நிற்போம். எம்.ஜி.ஆர்., சொன்னது போல, என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், நம்பி கெட்டவர் இன்று வரை யாரும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Haja Kuthubdeen
மார் 22, 2025 15:14

முஸ்லிம்களை பற்றி யார் நல்லது சொண்ணாலும் பிடிக்காதுதான்.


ஆரூர் ரங்
மார் 22, 2025 13:40

கஞ்சிக்காக தொப்பி போட்டுக் கொண்டு விபூதியை தியாகம் செய்துவிட்டார். இது கூட குறியீடுதான்


கான்
மார் 22, 2025 13:21

பேகம் ஜெயலலிதா போட்டோ சூப்பர்.


குமரி குருவி
மார் 22, 2025 12:01

இவர் பேசுவது சசிகலா காதில் விழுமா...


குமரி குருவி
மார் 22, 2025 12:01

இவர் பேசுவது சசிகலா காதில் விழுமா...


Subburamu Krishnasamy
மார் 22, 2025 11:29

EPS means traitor. He is the worst political leader going to burry the ADMK for ever


ஆரூர் ரங்
மார் 22, 2025 11:01

மாதம் 10 அமைதி ஆட்களை என் ஐ ஏ கைது செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி நீங்கள் கருத்தே கூறுவதில்லை. அப்போ யாரால் யாருக்கு ஆபத்து எனத் தெரிகிறது? யாருக்கு கேடயமாக இருக்கிறீர்கள்?


Haja Kuthubdeen
மார் 22, 2025 15:09

ஆரூர் ரங்...உங்க மத தீவிரவாதிகளை தேசத்தை காட்டி கொடுப்பவர்கள் ஊழலாள் நாட்டையே சீர்குலைப்பவர்கள் இவர்களை ஒடுக்கவும் இதே போன்ற அமைப்பை ஜீயிடம் சொல்லி உறுவாக்கலாமே...


Haja Kuthubdeen
மார் 22, 2025 22:13

ஆரூர் அண்ணே ஏதோ நீதிபதி பத்தி ஏதேதோ செய்தி வருது..இதைபோல் நாட்டை பாழாக்கும் நிறையவங்க முஸ்லிம்ங்க இல்லங்கண்ணா...


தேவதாஸ் புனே
மார் 22, 2025 10:43

எல்லா முஸ்லிம் ஓட்டும் உனக்குத்தான்...... முஸ்லீம் சகோதரர்கள் சிந்தித்து இந்த மாதிரி பச்சோந்திகளை (அதிமுக, திமுக, தவெக மற்றும் பல) விலக்கி வைக்கவேண்டும்.....


ஆரூர் ரங்
மார் 22, 2025 09:31

உங்க வீட்டுக்கு ஸ்பெஷல் சிலிண்டர் வரும் வரைக்கும் அமைதி மார்க்கமாகத்தான் தெரியும். அவர்களுக்கு கேடயமாக இருப்பேன் எனக் கூறுவதன் மூலம் சொந்த ஹிந்து சமுதாயத்தையே மற்றவர்கள் தவறாக எண்ண வைக்கிறீர்கள்.


Haja Kuthubdeen
மார் 22, 2025 15:13

நாட்டில் தினதினம் கொள்ளையடிப்பவன் ஊழல்செய்பவன் கொலை மற்ற அநியாயம் செய்றவன் எல்லாம் யாருப்பா!!!90சதவீதம் உம் ஆளுதானே...அதற்காக அவன் சார்ந்த மதத்தை குறை கூறலாமா???


hariharan
மார் 22, 2025 08:04

இப்தார் கஞ்சி குடிக்கும் இவர்கள் எல்லோரும் அடுத்த வருடம் இப்தார் கஞ்சி குடிக்க செல்லும் வரையிலும் தொப்பியை வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள் போலும். கஞ்சி குடிக்கும் நிகழ்வுகள் தவிர எந்த தலைவர்களும் அந்த தொப்பியை அணிந்து பார்த்ததில்லையே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை