உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு; கர்நாடகாவில் அடுத்த புயல்

தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு; கர்நாடகாவில் அடுத்த புயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : கர்நாடகாவில், 'ஹனி டிராப்' விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை ஹனி டிராப் வலையில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும், இந்த விஷயத்தில் சொந்த கட்சியினர் கைவரிசை இருக்கலாம் எனவும் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கிடையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அசோக் நேற்று அளித்த பேட்டி:

தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவது, நுாறுக்கு நுாறு சதவீதம் உண்மைதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. எனது மற்றும் மத்திய அமைச்சர் குமாரசாமியின் தொலைபேசியை ஒட்டு கேட்கின்றனர்.கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, காங்., - எம்.எல்.சி., ராஜேந்திராவை ஹனிடிராப்பில் சிக்க வைக்க, அவர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, பல எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.காங்கிரசின் உட்கட்சி பூசலால் மாநில அரசு சாகும் நிலைக்கு வந்துள்ளது. முதல்வர் நாற்காலியை வைத்து, 'மியூசிக்கல் சேர்' விளையாடுகின்றனர். சக்கர நாற்காலியில் முதல்வர் அமர்ந்திருக்கிறார். கோஷ்டிப் பூசலால் காங்கிரஸ் சேதமடைந்துள்ளது. வரும் நவம்பரில் காங்கிரசின் கிரஹநிலை மாறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ