உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெறுப்பு பேச்சை வேடிக்கை பார்க்கும் போலீஸ்: போராட்டத்திற்கு தயாராகும் இந்து அமைப்புகள்

வெறுப்பு பேச்சை வேடிக்கை பார்க்கும் போலீஸ்: போராட்டத்திற்கு தயாராகும் இந்து அமைப்புகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில், சி.எஸ்.ஐ., மதபோதகர், ஹிந்துக்களின் மத உணர்வுகளைத் துாண்டும் வகையில் பேசியுள்ளதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை, சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், கடந்த ஜூன் 16ல் நடந்த கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மதபோதகர் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கைது இல்லை

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிராக, மத உணர்வுகளை துாண்டும் நோக்கத்துடனும், குரோதமான உட்கருத்துடன்; சமய, இன, மொழி தொடர்பாக சமூகத்தினர் இடையே பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்து பேசுதல்; பகை உணர்வும் வெறுப்பும் உண்டாக்கும் வகையில் பேசுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 'பா.ஜ.,- இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டாலே மத உணர்வை துாண்டுவதாக கூறி உடனுக்குடன் கைது செய்யும் போலீசார், மதபோதகர் விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு இந்து அமைப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், 'இந்துக்களை இழிவு படுத்தும் பாதிரியாரின் மத துவேஷ பேச்சை நேரடியாக முகநுாலில் ஒளிபரப்பியுள்ளனர்; அதற்கான ஆதாரங்களை சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவ்வாறிருந்தும் சாக்கு போக்கு சொல்லி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போலீசார் பதுங்குகின்றனர்.இது, 'ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு' என, பதிலடியான சம்பவங்கள் நிகழ வழி ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. நாங்கள் போராட்டத்தில் இறங்கும் முன் போலீசார் விழித்துக்கொண்டால் நல்லது' என்றனர்.

போலீஸ் விளக்கம்

மாநகர போலீசார் கூறுகையில், 'முகநுாலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'லிங்க்' தற்போது அழிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மைத்தன்மையுடன் வீடியோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் கைது நடவடிக்கை தாமதமாகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

T. Jayathkumar
ஜூலை 05, 2024 17:55

இந்தமாதிரி மோசமாக பேசும் பாதிரியாரை முதலில் சி.எஸ்.ஐ சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் .


Barakat Ali
ஜூலை 04, 2024 20:03

ஒரு பிரார்த்தனை பண்ணி வாடிகன் கோமகனாரை சக்கர நாற்காலியில் இருந்து விடுவியுங்க .....


ram
ஜூலை 04, 2024 16:29

திருட்டு திமுகவில் இருக்கும் சொன்னது மாதிரிதான்


ram
ஜூலை 04, 2024 14:56

காவல்துறை நல்ல ஒரு மகாக் கேவலமான காரணம் சொல்லுதே... வீடியோ அழிக்கப்பட்து என்றால் அதை திரும்ப எடுக்க முடியாதா என்ன.. நல்ல சப்பபைக்கட்டு கட்டும் காவல்துறை.. பேச சொன்னதே தி.மு.க.. தான்..காவல்துறை தி.மு.க கட்டுப்பாட்டிலே இருக்கு.. அப்புறம் எப்படி நடவடிக்கை நடக்கும்.. இப்பமட்டுமல்ல எப்போதுமே இந்துக்கலை கேவலப்படுத்தும் கட்சிதானே.. தி.மு.க.. இது ஒன்றும் புதிது இல்லையே.. கம்யூனிஸ்டு அமைச்சர் தி.மு.க துனையோடு வந்த அமைச்சர் பார்லிமென்டிலே பேசுறாரு.. செங்கோல் கேவலமானது ..அரசர் வச்சிருந்தது.. அரசரெல்லாம் அந்தப்புறத்துலே பல பெண்டளோட இருந்தவரு.. அதனாலே அந்த அரசர் வச்சிருந்த செங்கோல் பார்லிமென்ட் லே இருக்கக் கூடாதாம்.. அப்படின்னா ஸ்டாலின் மற்றும் அவங்க குடும்ப சகாக்கல் அப்படி பார்லிமென்ட்லே உக்காரமுடியும்...


விஸ்வநாத் கும்பகோணம்
ஜூலை 04, 2024 13:56

தமிழக காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. இப்படி சொல்வதை காவல்துறை ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆளும் கட்சியின் குரலாக பேசும் பாதிரியாருக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். உருதுத் திணிப்பும் இந்துமத வெறுப்பும் தான் ஆளும் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் . விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்.


kulandai kannan
ஜூலை 04, 2024 08:02

சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களைப் பற்றிக் கூறியது ஞாபகம் வருகிறது.


Sevvannan
ஜூலை 05, 2024 01:51

அவர்தான் அது ஒன்றிய ஆளுங் கட்சி தென் இந்திய வாக்காளர்களளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என்று கூறி இருந்தார் ஓ அதை நீங்கள் படிக்க வில்லை போலும்


vadivelu
ஜூலை 04, 2024 07:03

பிறவி யாரால் என்று தெரியாமல் இருப்பவன் எல்லாம் அப்படிதான் பேசுகிறான். பாவம் மன்னித்து இடுங்கள் எல்லாம் அல்ல இயேசு அவனை தண்டிப்பார்.


A Viswanathan
ஜூலை 04, 2024 09:43

மேல் இடத்து உத்தரவு படி தான் காவல் துறை நடப்பார்கள்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி