உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிறையிலிருந்து கூட்டாளிகளை இயக்கும் கைதிகள்

சிறையிலிருந்து கூட்டாளிகளை இயக்கும் கைதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன், 'வாட்ஸாப்' அழைப்பில் தொடர்பு கொண்டது குறித்து, மத்திய உளவு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு, தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' எனும், 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சிறையில், இலவம் பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ேஹாம் தியேட்டர், விதவிதமான ஸ்மார்ட் போன்கள், வெளிநாட்டு மது வகைகள் என, சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறப்படுகிறது.இவர்கள், 2018ல், சிறையில் இருந்தபடி, குடும்பத்தாருடன், 'வாட்ஸாப்'பில், வீடியோ அழைப்பில் பேசினர். சிறைகளில் இருந்து, வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளை தொடர்பு கொண்டனர். இதுகுறித்து, மத்திய உளவு அமைப்பான ஐ.பி., அதிகாரிகள் விசாரித்து சிறைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கைதிகள் நடத்திய சொகுசு வாழ்க்கை குறித்த படங்களையும் வெளியிட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் சோதனை நடத்தி, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தற்போது மீண்டும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் வேலையை துவங்கி உள்ளனர். இதுகுறித்து, ஐ.பி., அதிகாரிகள் மீண்டும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'சென்னை மற்றும் திருச்சி சிறைகளில் இருந்து, வெளிநாடுகளில் உள்ள, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு, 'வாட்ஸாப்' அழைப்பு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து, இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் நடக்க இருப்பதை உறுதி செய்துள்ளோம். 'கடத்தலை, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் கைதிகள் தங்கள் கூட்டாளிகள் வாயிலாக அரங்கேற்றலாம் என, சந்தேகம் வலுக்கிறது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜன 18, 2024 17:51

செந்தில் பாலாஜி கூட உள்ளே இருந்தபடியே பார் வசூல் நடத்துவதாக கேள்வி. இல்லாட்டி வரப் போகும் ????சிறுவர் அணி மாநாட்டுக்கு இவ்வளவு செலவு செய்ய முடியாதே.


Duruvesan
ஜன 18, 2024 08:40

எல்லோருக்கும் விடியல் தந்த நவீன வள்ளல் வாழ்க


duruvasar
ஜன 18, 2024 08:37

தமிழக சிறைச்சாலைகளில் இவ்விதம் நடக்கிறது என்றால் கட்டாயம் மேலிடத்து "ஆசிர்வாதம்" இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.


Ramesh Sargam
ஜன 18, 2024 08:15

குற்றம் செய்தவர்களை சீராக்க சிறைக்கு அனுப்புவார்கள். ஆனால் அங்கு சென்றபிறகுதான், அவர்கள் மேலும் எப்படி எல்லாம் குற்றங்களை அதிகம் செய்யலாம் என்று 'நன்காக கற்று அறிகிறார்கள்' அங்குள்ள 'மூத்த சிறை கைதிகளிடம் மற்றும் சிறை ஊழியர்களிடம்'. இதுதான் இன்றைய நிலைமை நம் நாட்டில். வெட்கம். வேதனை.


J.V. Iyer
ஜன 18, 2024 06:07

சிறையில் இருக்கவேண்டியவர்கள் அமைச்சர்களாக வெளியே கல்லாக்கட்டி சுற்றும்போது இதற்கு பஞ்சம் ஏன்? மேலும் குற்றவாளிக்கு சிறையில் இருந்தாலும் அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்க்கும் மாடல் அரசு இருக்கும்போது குற்றங்கள் தமிழகத்தில் தலைவிரித்தாடுவதில் வியப்பு என்ன? ஒரு அரசே மக்கள் பணத்தை சுரண்டும்பொது பாவம் மக்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை