உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தமிழகம் சேராததால் சிக்கல்: அரசு பள்ளி நுாலகங்கள் முடங்கும் அபாயம்

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தமிழகம் சேராததால் சிக்கல்: அரசு பள்ளி நுாலகங்கள் முடங்கும் அபாயம்

சென்னை: புதிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ., திட்டங்களை ஏற்காததால், தமிழக அரசு பள்ளி நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் 14,500 பள்ளிகளை தேர்வு செய்து, பி.எஸ்.ஸ்ரீ., பள்ளிகள் என பெயரிட்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் வகையில், மத்திய,- மாநில அரசுகளின் கூட்டு நிதியில், இந்தாண்டு மத்திய அரசின், 839 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 599 நவோதயா பள்ளிகள் மற்றும் 8,639 மாநில பள்ளிகள் என, மொத்தம் 10,077 பள்ளிகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக வரும் 2027 வரையிலான கல்வியாண்டுகளுக்கு, மொத்தம் 27,360 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 18,128 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்; மீதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதன்படி, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயருக்கு முன், பி.எம்.ஸ்ரீ., என்று எழுத வேண்டும்; அப்பள்ளி, புதிய கல்வி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கையின்படி, ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும் என்பதால், தமிழகம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுதும் ஒரே கல்வி திட்டத்தை கடைப்பிடிக்காததால், ஏற்கனவே தமிழகத்துக்கான, சமக்ர சிக்சா அபியான் என்ற, எஸ்.எஸ்.ஏ., நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி வாயிலாக, அரசு பள்ளி நுாலகங்களுக்கு நுால்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, நுால்கள் வாங்க முடியாமல் உள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி நுாலகர்கள் கூறியதாவது:

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் கையெழுத்திடாததால், தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டம், புதிய கல்வி கொள்கை உருவாக்குவதற்கு முன்பிருந்தே செயல்படுத்தப்படுகிறது. அதை புதிய கல்வி கொள்கையுடன் இணைத்து, ஏற்கனவே தமிழகம் பெற்று வந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால், கல்வி சார்ந்த கைத்தொழில், விளையாட்டு, நுாலகம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பாமரன்
ஜன 22, 2025 20:37

தோபார்ரா... பலகாலமாக மாநிலத்தின் சொந்த செலவில் இஸ்கோல் கட்டி நடத்தி வர்றதுக்கு திடீர்னு என் பேர் போடு அப்போதான் துக்கினியூண்டு பணம் தருவாங்கலாம்...‌அத ஒத்துக்கலன்னா நஷ்டமாம்ல,... இத்தினி நாள் நூலகம் இங்கே இல்லையா என்ன... நாட்டிலேயே அதிக நூலகங்கள் இருப்பது தமிழ் நாட்டில் தான்... எல்லாம் மாநில அரசு நிதியில் வந்தது... இந்த சில்லறைக்கு அவனுவளுக்கு லிக்கிங் பண்றது இங்கே பகோடாஸ் வாந்தியெடுக்கறதுக்கு சமம்...


SS
ஜன 22, 2025 15:36

ஹிந்தியை திணிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பிஜேபி வேகமாக உள்ளது.


அப்பாவி
ஜன 22, 2025 10:55

ஏதோ படிச்சவனுக்கெல்லாம் ரெண்டு கோடி வேலை குடுத்து முடிச்சிட்டாப்ப்ல. பரோட்டா படி, டீ க்கடை வெக்க நூலகம் தேவையில்லை.


PARTHASARATHI J S
ஜன 22, 2025 10:28

இனிமேலும் இந்தி மொழி வேண்டாமென்றால் சரியல்ல. அது இருந்து விட்டு போகட்டுமே ! மொழி கர்வம் வரட்டு வீம்பு.


Anantharaman
ஜன 22, 2025 09:54

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.


Rajasekar Jayaraman
ஜன 22, 2025 07:41

காசு மத்திய அரசு தரும் ஆனா திட்டத்துக்கு ... பெயரும் வைப்பானுங்க எல்லா ஆட்டமும் 2026 ரோடு முடிவுக்கு வரும்.


subramanian
ஜன 22, 2025 07:41

சுயநலத்திற்காக, வறட்டு கௌரவத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு அபாய விளையாட்டு நடத்தும் திமுக ஒழிக .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை