உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  இண்டி கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம்: கம்பி நீட்டிய காங்.,கால் தி.மு.க., அதிருப்தி

 இண்டி கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம்: கம்பி நீட்டிய காங்.,கால் தி.மு.க., அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, காங்கிரஸ் மாநில நிர்வாகிகளிடம், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, தனது அதிருப்தியை தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் அறிவித்த பின், தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஓட்டுச்சாவடி வாரியாக, வாக்காளர்களை சரி பார்க்கும் பணிகளை மேற்கொண்டன. 38 பேர் குழு இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தமிழக காங்கிரசில், புதிய மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 38 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை, டில்லி மேலிடம் அறிவித்தது. இந்த பட்டியலை கண்டதும், மாவட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விட்டது என தெரிய வந்ததும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து செல்வதை, நிறுத்திக் கொண்டனர். வி.சி.க., - ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.நீ.ம., போன்ற கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், வாக்காளர்களுக்கு உள்ள சந்தேகத்தை நீக்கி, கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த பணியில், காங்கிரசார் ஈடுபடவில்லை என்ற புகார், தமிழகம் முழுதும் இருந்து, அறிவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை, சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி என, பல்வேறு மாவட்டங்களில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்து உள்ளனர். புறக்கணிப்பு இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு தெரியவந்ததும், அவர், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம், 'தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி மாவட்டத் தலைவர்கள் புறக்கணிக்கின்றனர்?' எனக் கேட்டுள்ளார். 'சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், இதெல்லாம் கூட்டணியை பலவீனப்படுத்தும்' என்றும் சொல்லி, அவர் தன்னுடைய வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நாகர்கோவிலில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, வேறு காரணம் சொல்லி காங்கிரஸ் புறக்கணித்தது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் எதிரில், நேற்று முன் தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கான மேடையில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில், 'காமராஜர் படம் வைக்கவில்லை; ராகுல் படம் ஸ்டாம்ப் சைசில் இருந்தது. அதனால், ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தோம்' என, நாகர்கோவில் காங்கிரசார் தெரிவித்தனர். தகவல் இல்லை ஆர்ப்பாட்டம் தொடங்கி நடந்து கொண்டிருந்தபோது, தாமதமாக அங்கு வந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.,வும், ஆர்ப்பாட்டம் முடியும் முன்னரே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அவரிடம் இது குறித்து கேட்டபோது, 'இந்த விஷயத்தில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை' என்று பதில் அளித்தார். இதற்கிடையில், புறக்கணிப்பு விவகாரத்துக்கு இது தான் காரணம் என, புது விஷயத்தை காங்கிரசார் சிலர் கூறினர். 'வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் இருக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தது, காங்., முன்னாள் தலைவர் ராகுல். 'ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அதை புறக்கணித்தோம்' என அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
நவ 13, 2025 19:41

பழம் நழுவி பாலில் விழுந்தது. இது மஞ்ச துன்டு விசனம். காலத்திற்கும் பொருத்தம்.


Vasan
நவ 13, 2025 17:38

ஆட்சியில் பங்கு கொடுக்காத திமுகவின் போராட்டத்தில் மட்டும் பங்கா என்று நினைத்து புறக்கணித்து விட்டார்களோ?


சந்திரசேகர்
நவ 13, 2025 15:12

காங்கிரஸ் உதவி இல்லாமல் மத்தியில் திமுக காழுன்ற முடியாது. ஏனென்றால் திமுக பிஜேபி யுகடன் கூட்டு வைக்காது. பிறகு காங்கிரஸ் தயவு கண்டிப்பாக வேண்டும் மத்தியில் அமைச்சர் பதவிகள் பிடிக்க


Rengaraj
நவ 13, 2025 13:32

காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு போனாலும் ஸ்டாலினுக்கு கவலையில்லை. விஜய், மற்றும் எடப்பாடி ரெண்டு பெரும் இருக்கிறார்கள். கவலைப்படமாட்டார். திரும்ப திரும்ப சொல்றேன், போட்டி ரெண்டு பேருக்குத்தான், ஒன்று திமுக, இன்னொன்னு த.வெ க என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கும் விஜய் கட்சி எப்படி திமுகவின் பீ டீம் என்று சொல்லப்படுகிறதோ அதே போன்று எடப்பாடி அதிமுக வும், திமுகவின் பீ டீம் என்பது தொண்டர்களாக மாறிய எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், ஜெவின் உண்மை விசுவாசிகள், எவரும் இப்போது வரை அறியாமல் ஏமாளிகளாக இருப்பதுதான் பாவம்.


ஆரூர் ரங்
நவ 13, 2025 11:49

பிகாரில் 15 சீட்டைக்கூட தாண்டாது.. நாளை முடிவுகள் வந்தபின் மதிக்காத நிலை ஏற்படும். அப்புறம் சட்டசபைத் தேர்தலில் விடியல் இதயத்தில் மட்டுமே இடம் தருவார்.


SRIRAMA ANU
நவ 13, 2025 11:22

நீங்கள் எவ்வளவு கதறினாலும்... உங்களுடைய வன்மத்தை கட்டினாலும்... உங்கள் தாமரை எடுபடாது... என்னனு இங்கு உள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல. கடவுளை கடவுளாக மட்டும் தான் பார்ப்பார்கள். கடவுளை போதிப்பவனை கடவுளாக பார்க்க மாட்டார்கள்.


DUBAI- Kovai Kalyana Raman
நவ 13, 2025 16:23

DMK வோட்டை போடு ..செத்து ஒழி ..கோயில் பூரா அழிக்கட்டும் ..ஹிந்து வ அழிக்கட்டும் ..சிறுபான்மை வளரட்டும்


Suppan
நவ 13, 2025 18:14

ஆனால் கயவாளித்தனத்தை போதித்தவனை தந்தை என்று வெட்கமே இல்லாமல் கொண்டாடுவார்கள்


நிவேதா
நவ 13, 2025 11:18

காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வாக்குகள் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் தான் பல தொகுதிகளில். பாராளுமன்றத்தில் ராகுலுக்கு திமுக ஆதரவு தேவை. ஆகவே, இங்குள்ள தலைவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிர ஓட்டுகளை வைத்திருக்கும் விஜய்க்கு சொம்பு தூக்கினாலும் ராகுல் தேர்வு திமுகவாக தான் இருக்கும்.


kjpkh
நவ 13, 2025 10:19

ஆக எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகினால் பதறும் நிலைக்கு வந்துவிட்டது. ஆட்சியின் சாதனைகளை பறைசாற்றும் திமுக ஏன் கூட்டணி கட்சிகளை நம்ப வேண்டும் தைரியமாக தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே. உங்கள் பலம் உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்.


Sundar R
நவ 13, 2025 09:42

வெகுவிரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து தைரியமாக போட்டியிட வேண்டும்.


duruvasar
நவ 13, 2025 09:39

இல்லாத விஷயத்திற்கு அலப்பறை செய்தால் இப்படித்தான் போய்முடியும் .


புதிய வீடியோ