உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுல் மீண்டும் கிச்சுகிச்சு.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு

ராகுல் மீண்டும் கிச்சுகிச்சு.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு

பீஹாரில் இன்று தேர்தல் நடக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் மீது காங்., - எம்.பி., ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 2024ல் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை, பா.ஜ.,வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 'தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஒன்பது மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓட்டுப்பதிவு

இந்தச் சூழலில் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை நேற்று மீண்டும் எழுப்பினார். டில்லியில் உள்ள காங்., தலைமையகத்தில், 'ஹெச் பைல்ஸ்' என்ற பெயரில், 2024 ஹரியானா சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக ராகுல் புகார் எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. அதில், 5.21 லட்சம் பேர் போலி வாக்காளர்கள், 93,174 பேர் தகுதியற்ற வாக்காளர்கள், 19.26 லட்சம் பேர் ஒரே பெயரில் பல இடங்களில் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவில், எட்டு வாக்காளர் களில் ஒருவர் போலியானவர். இந்த ஓட்டு திருட்டு தனியாக ஒரு தொகுதியில் மட்டும் நடக்கவில்லை. மாநில மற்றும் தேசிய அளவில் நடந்துள்ளது. ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில், ஒரு போலி வாக்காளர், 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்யூஸ் பெரேரோவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. அதே போல் ஹரியானா வாக்காளர் பட்டியலில், 223 இடங்களில் ஒரே பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் சிலர், ஹரியானா சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்த போலி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் ஏன் நீக்கவில்லை? ஏனெனில், பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அதற்காகவே தேர்தல் ஆணையம் உதவி செய்து இருக்கிறது.

கவலை வேண்டாம்

ஹரியானாவில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், காங்., மாபெரும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த 2024, அக்., 6ம் தேதி ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசிய வீடியோவில், 'மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்; கவலை வேண்டாம்' என கூறியிருக்கிறார். சைனி குறிப்பிட்ட ஏற்பாடுகள் என்ன; அதை குறிப்பிடும்போது அவரது முகத்தில் ஒரு மர்ம புன்னகை பூத்தது. அதற்கான அர்த்தம் என்ன? ஹரியானாவில் மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் உள்ளனர். எனினும், 28 லட்சம் போலி வாக்காளர்களின் உதவியுடன், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து காங்., வாக்காளர், 3.50 லட்சம் பேரை தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர், 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தவர்கள். தேர்தல் நடக்கும் பீஹாரிலும் ஓட்டு திருட்டு நடக்கும். அதைப்பற்றி பின்னர் விளக்குகிறோம். கடைசி நேரத்தில் தான் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்தது. இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்காகவே, இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கமிஷன் சரமாரி கேள்வி

ஹரியானா தேர்தலில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், தேர்தல் கமிஷன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக, ராகுலிடம் தேர்தல் கமிஷன் எழுப்பிய கேள்விகள்: ஹரியானா வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏன் இதுவரை ஆட்சேபனை தெரிவிக்க வில்லை? ஓட்டுச்சாவடியில் ஒரு வாக்காளர் இரண்டாவது முறையாக ஓட்டளிக்க வந்தபோது காங்., ஓட்டுச்சாவடி முகவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? வாக்காளர் அடையாளத்தின் மீது ஏன் சந்தே கம் எழுப்பவில்லை? வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது, காங்., கட்சியின் பூத் அளவிலான முகவர்களும் எந்த ஆட்சேபத்தையும் ஏன் சுட்டிக் காட்டவில்லை? ஓட்டுப்பதிவின்போது முறை கேடுகள் நடந்தால், அதை தடுப்பதற்கு தான் கட்சிகள் சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். முறைகேடுகள் நடந்திருந்தால், அதை ஏன் அவர்கள் தடுக்கவில்லை? போலி வாக்காளர்கள் இருந்தால், அவ ர்கள் பா.ஜ.,வுக்கு மட்டுமே ஓட்டளித்தனர் என்பதை ராகுல் எதை வைத்து சொல்கிறார். அவர்கள், காங்., கட்சிக்கு கூட ஓட்டளித்திருக்கலாம் அல்லவா. முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், ராகுல் அதை நீதிமன்றத்தில் தாராளமாக தாக்கல் செய்யலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

'பிரஸ் மீட்டே மோசடியானது'

ராகுலின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறியதாவது: பீஹார் தேர்தலை திசைதிருப்பவே, ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை ராகுல் எழுப்பியுள்ளார். காங்., தோல்விகளை மறைக்கவே, இதுபோன்ற செய்தியாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்தி அவதுாறு பரப்புகிறார். 2004ல் கூட, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தன. ஆனால் முடிவு என்ன ஆனது. ஹரி யானா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, இதுவரை ஒரு புகாரை கூட காங்கிரஸ் அளிக்கவில்லை. ராகுல் நடத்திய செய்தியாளர் சந்திப்பு கூட மோசடியானது தான். கர்நாடகா, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்களில் காங்., வெற்றி பெறும்போது மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது ராகுல் ஏன் குற்றம் சுமத்தவில் லை. இவ்வாறு அவர் கூறினார். -- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

V.Mohan
நவ 07, 2025 15:24

நம் நாட்டில் அதுவும் ஊழல்- களங்கப்பட்ட, அனைத்திந்திய கட்சியான காங்கிரஸ் கட்சி, நாட்டின் இறையாண்மை மீது எந்தவித பற்றுதலோ, மரியாதையோ இல்லாத ஒரு குடும்ப கம்பெனியாகவும், சிறுபான்மையினரின் அடிமைகளாகவும் திகழ்வதால், அதிலிருந்து மீளவே இயலாத நிலையில் உள்ளனர். மேலும் அதே வகையில் நிலைத்து நிற்க மீண்டும் மீண்டும் தவறான செயல்களையும் ஒருபட்ச சார்பான கருத்துக்களை முன்னெடுத்து வருகிறார் ராகுல் த/பெ ராஜீவ் என்னும் காங்கிரஸின் இளம் தலைவர் வயத, 55. நாட்டைத் துண்டாட வைக்கும் இவரது கருத்துக்களும் பேச்சும் அபத்த குற்றச்சாட்டுகளும், இவர் எப்படி இன்னும் அதிகளவு அபத்தபேச்சுக்களை பேசுகிறார் என்பது எரிச்சல் அடைய வைக்கிறது. காங்கிரஸ்காரர்கள் நிலை பாவம்


Nandakumar Naidu.
நவ 06, 2025 22:04

இவரும்,இவர் குடும்பமும்,இவர் கட்சியும் வாயை திறந்தாலே பொய் தான்.


visu
நவ 06, 2025 20:31

விடுங்க... ராகுல் பீகார் தேர்தல் தோல்விக்கு பதில் தயார் செய்துகொண்டு இருக்கிறார் ஆக இப்பவே அவங்க தோல்விக்கு காரணம் ரெடி


பேசும் தமிழன்
நவ 06, 2025 19:41

பப்பு.... தமிழ் நாட்டில் உங்கள் இண்டி கூட்டணி 40 க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதே.... அப்போ எவ்வளவு ஓட்டு திருடினீர்கள் ??.... வெற்றி பெற்றால்... ஆஹா ஓஹோ.... தோல்வி அடைந்தால்... அய்யோ... அய்யோ... என்னய்யா உங்கள் பிழைப்பு ???


மனிதன்
நவ 06, 2025 22:53

தமிழ் நாடு,கேரளாலாம் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் இங்க உங்க பாட்சா பலிக்காது, இருந்தும் நாலு எப்படி வந்துச்சுன்னு இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கு, அதிலும் குறிப்பா கோவைல கமலுக்கே விபூதி அடிச்சுடீங்கல்ல...இதோ, இப்ப புதுசா SIR னு ஒரு தில்லுமுல்லோட இறங்கியிருக்கானுங்க...இனி நம்மாளுங்க இன்னும் உஷாரா இருப்பாங்க...


jaya
நவ 06, 2025 19:36

நாங்கள் அவரை ஒரு ஜோக்கர் என்று நினைத்தோம். ஆனால் அவர் நாட்டில் பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கும் மிகவும் ஆபத்தான நபர் என்று தெரிகிறது. தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.


Vijay D Ratnam
நவ 06, 2025 19:28

ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்னு சொன்னாளாம்.


Rathna
நவ 06, 2025 18:49

தான் ஜெயித்த கர்நாடகம், ஹிமாச்சல், தெலுங்கானா மாநிலங்களில் பிஜேபி தூங்கியதால் வோட்டு திருட்டு நடக்கவில்லை என்பது வாதம். சிரிப்பு பேட்டி.


M S RAGHUNATHAN
நவ 06, 2025 16:24

It is time the Election Commission takes cognizance of this nonsense and file a defamation case against Raul in SC for ing aspersions against Election Commissioners.


HoneyBee
நவ 06, 2025 14:54

நம் நாட்டின் தேர்தல் ஆணையத்தை கலங்க படுத்துவதே வேலை. ஜெயித்தால் நீதி வென்றது தோற்றால் இவிஎம் மற்றும் தேர்தல் ஆணையம் தனக்கு எதிராக என்று ஒரே பாட்டை எத்தனை யுகங்கள் பாடுவான் இந்த ஜோக்கர்


Muralidharan S
நவ 06, 2025 14:47

கான்-cross கட்சியிலிருந்து இந்த குடும்பம் விலக்கிவைக்கப்பட்டால்தான் இனி அந்த கட்சி உயிர்பிழைக்கும்....இவர் ஒருவரே போதும்... தான் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் உளறிக்கொண்டு திரிகிறார்கள் சகோதரர்கள்..


முக்கிய வீடியோ