உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுடன் ராமதாஸ்; அ.தி.மு.க.,வுடன் அன்புமணி: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு?

தி.மு.க.,வுடன் ராமதாஸ்; அ.தி.மு.க.,வுடன் அன்புமணி: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

த.வெ.க.,வுடன், அன்புமணி தலைமையிலான பா.ம.க., இடம் பெறாமல் தடுக்க, 40 தொகுதி, ஒரு ராஜ்யசபா 'சீட்'டும் வழங்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், தி.மு.க., பக்கம் செல்ல ராமதாஸ் அணி பா.ம.க., தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க., வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை மட்டும் விஜய் கடுமையாக விமர்சித்து வந்தார்.

70 தொகுதிகள்

ஆனால், சமீபத்தில் நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க., தலைமையில் கூட்டணி அமையும்; விஜய் தான் முதல்வர் வேட்பாளர்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டபோது, ''தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் யாரும், எங்கள் கூட்டணிக்கு வரலாம்,'' என, விஜய்க்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.இந்நிலையில், அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வுக்கு 70 தொகுதிகள் தருவதாகக் கூறி, த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தகவல் பழனிசாமிக்கு தெரிய வந்ததும், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., இடம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும், அன்புமணியின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளனர். அப்போது, பா.ம.க.,வுக்கு 40 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் பேசியதாக கூறப்படுகிறது.

பச்சைக்கொடி

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., மட்டும் இடம் பெற்றுள்ளது. பா.ம.க.,வில் ராமதாஸ் அணி, தி.மு.க.,வை ஆதரிக்கும் வகையில் செயல்படுகிறது. இந்நிலையில், ராமதாஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பா.ம.க., தலைவர்கள் சிலர், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். அங்கே, உரிய மரியாதை அளிக்கும் பட்சத்தில், அப்படியொரு முடிவெடுக்கலாம் என ராமதாசும் கட்சியினருக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். ஆனால், அன்புமணி அணி தே.ஜ., கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது. இருப்பினும், விஜய் தரப்பில் அன்புமணியை கூட்டணிக்கு அழைப்பதால், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணியை தக்க வைக்க பழனிசாமி விரும்புகிறார்.

குழப்பம்

ஏனெனில், இடைப்பாடி தொகுதியில், அன்புமணி பா.ம.க., ஆதரவு இருந்தால் தான், பழனிசாமியால் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், வட மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகள், டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகள் சேர்த்து, மொத்தம் 90 தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றிக்கு, அன்புமணி தலைமையிலான பா.ம.க., கூட்டணி தேவைப்படுகிறது. எனவே, பா.ம.க.,வை தக்க வைக்க, பழனிசாமி அவசரமாக கூட்டணி பேச்சை துவக்கி உள்ளார். அதேநேரம், ராமதாஸ் மாற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதால், இரு தரப்பிலும் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2025 11:34

இதுவும் ஒரு வகை அதிக சீட் கேட்கும் கூட்டணி பேச்சு வார்த்தை வழியா. என்ன ஒன்றும் புரியவில்லை.


vivek
ஜூலை 07, 2025 11:21

என் கணிப்பு படி அடுத்த வருடம் திமுக மண்ணை கவ்விவியவுடன் போலி பெயரில் கருத்து போடுவார்.....


Oviya Vijay
ஜூலை 07, 2025 11:09

என்றைக்குமே லவ்பெல் பாஜகவை நோக்கிச் செல்வதை ராமதாஸ் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். ஒருவேளை தேர்தலுக்கு முன்னே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டால் பாமக அதிலே இடம்பெற வாய்ப்புள்ளது. அதுவும் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பில்லை என்றால் மட்டுமே இதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்வார். ஆனால் ராமதாஸ் மனம் எல்லாம் திமுக கூட்டணியில் இடம்பெற்று விடவேண்டுமென்று தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரையில் கையில் வைத்திருக்கும் ஐந்து எம்எல்ஏக்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தான் முக்கியக் காரணம். திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்று கண்முன்னே தெரிவதால் தான் இந்த ஏக்கம்...


Haja Kuthubdeen
ஜூலை 07, 2025 12:55

இருக்குற கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவே பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. இதில் பாமக ஆறு சீட்டுக்கெல்லாம் சம்மதிக்குமா தம்பி... கொசுறா தேமுதிக வும்.அந்தம்மா பலம் தெரியாம 20சீட்டு வேணும்னு அலம்பல் கொடுக்கும்.முதலில் பஞ்சாயத்து முடுச்சுட்டு வாங்க....


Oviya Vijay
ஜூலை 07, 2025 08:26

என் கணிப்புகளில் இதுவும் ஒன்று... அப்படியே நடந்து கொண்டிருக்கிறது...


vivek
ஜூலை 07, 2025 16:51

என்னென்ன கம்பி கட்ர கதையெல்லாம் சொல்றார் பாருங்க நம்ம காமெடி ஓவியறு


சுந்தர்
ஜூலை 07, 2025 06:59

பழுத்த பெரிய மாம்பழம் பணம் பெற்றுவிட்டதாக் கேள்வி. கல்லடி படும்.


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 04:54

முத்தின மாங்காய் ராமதாஸூக்கு கூறு தப்பி விட்டது இனி அந்த வயதான குழந்தையை அன்புமணியின் குடும்பம்தான் அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து காப்பாற்ற வேண்டும். கொஞ்ச நஞ்ச மரத்தையா வெட்டிப் போட்டீங்க அதன் பலனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கர்மா தன்னுடைய வேலையை சரியான நேரத்தில் செய்ய ஆரம்பித்து விட்டது.


mohana sundaram
ஜூலை 07, 2025 06:34

ஆமாம், ஒவ்வொருவருடைய அயோக்கியத்தனத்திற்கும் கடவுள் கூலி கொடுப்பார். அதை விரைவில் நம் கண் முன்னே நாம் காணலாம்


சமீபத்திய செய்தி