உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரேஷன் அரிசி, பருப்பில் மட்டுமல்ல ரேஷன் கார்டுகளிலும் வந்து விட்டது கலப்படம்!

ரேஷன் அரிசி, பருப்பில் மட்டுமல்ல ரேஷன் கார்டுகளிலும் வந்து விட்டது கலப்படம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவையில் உள்ள ரேஷன்கடைகளில், போலி ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் அதிகரித்து விட்டன. இந்த கார்டுகளை பயன்படுத்தி, இலவச அரிசியை பெற்று விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்து எதுவும் தெரியாத, மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தவுடன், வாரிச்சுருட்டி எழுந்து விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.கோவையில் உள்ள 12 தாலுகாக்களில், 1,401 ரேஷன்கடைகளும், 11, 46,045 ரேஷன் கார்டுகளும் உள்ளன. மாதந்தோறும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர, பொங்கல் பரிசுத்தொகை, பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி, சேலை, தீபாவளி பண்டிகைக்கான கூடுதல் சர்க்கரையும் வழங்கப்படுகின்றன.இச்சூழலில், கோவையில் பல ரேஷன்கடைகளில், போலியான ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக பொருட்கள் வாங்கி வெளிச்சந்தையில், அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலாந்துறை திருப்பதி செட்டியார் தோட்டத்தில் வசிக்கும் காயத்ரி, கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:நான் கடந்த பத்து மாதங்களாக எனது பெற்றோரின் வீட்டில் இருக்கிறேன். என் ஸ்மார்ட் கார்டு எண் 31BPO39PY ஆகும். மத்வராயபுரம் ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி வந்தேன். ஆனால் எனது ரேஷன்கார்டை போலியாக தயாரித்த வேறு ஒருவர், கடந்த எட்டு மாதங்களாக ரேஷன் பொருட்களை பெற்று வருகிறார். குறுஞ்செய்தி வந்ததால், நேரில் சென்று விசாரித்த போது, ரேஷன்கார்டை ஸ்கேன் செய்வதில், எந்த பிரச்னையும் இல்லை எனில், பொருட்களை வழங்கிவிடுவேன் என்கிறார் கடைக்காரர்.கார்டு கொண்டு வந்திருக்கும் நபர் யார் என்று கண்டறிய வேண்டும். அவரது கைரேகையை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த பணிகளை செய்யாததால், போலியாக ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர்.ஆலாந்துறையை அடுத்துள்ள மத்வராயபுரத்தில், இது போன்று ஏராளமான ஸ்மார்ட் கார்டுகளை போலியாக பயன்படுத்துகின்றனர். இது குறித்து, கலெக்டரும், மாவட்ட வழங்கல் அலுவலரும் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் இது போன்று, ஏராளமான போலி ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, புகார்கள் வருகின்றன. ஆனால், இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை.போலி கார்டுகளை வழங்கல் துறை அதிகாரிகள் அழிக்க வேண்டும்; தவறினால் ஏழை மக்களுக்கான உணவு பொருட்கள், வெளிமார்க்கெட் செல்வதை தடுக்க முடியாது.

டி.எஸ்.ஓ.,சொல்கிறார்

மாவட்ட வழங்கல் அலுவலர்(டி.எஸ்.ஓ.,) ரேகா கூறுகையில், ''கருவிழிப்பதிவு மற்றும் கைரேகை அடிப்படையில்தான், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து, வழங்கல் துறை அலுவலர்களை கொண்டு கள விசாரணை மேற்கொண்டால், உண்மை வெளியே வரும். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். என்ன நடந்தது என்று விரைவில் தெரியவரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tetra
செப் 30, 2024 10:27

இப்பவாவது தெரியுதா பங்களாதேஷ் விடுதிகளின் ஊடுறுவல். மம்தாவும் ஸ்டாலினும், விஜயனும் இருக்கும் வரை இது தொடரும். மம்தா திருந்த மாட்டார் தமிழக ஆட்சியாளர்களாவது ஊடுருவலை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.


Ramesh Sargam
செப் 25, 2024 13:23

திருப்பதியில் அங்கு வழங்கப்படும் லட்டில் மட்டும்தான் கலப்படம். ஆனால், தமிழகத்தில் எல்லாவற்றிலும் கலப்படம். திமுக கூட்டணியே ஒரு கலப்பட கூட்டணிதான்.


Kanns
செப் 25, 2024 07:07

Mental Aadhar Compelled for Everything incl Wasteful Freebies & Ration Smart Card are Possessed by All Foreign Infiltrators for But Denied to Native Citizens


அப்பாவி
செப் 25, 2024 04:20

எங்க ஊரில் இட்லி மாவு யாவாரம் கொடிகட்டிப் பறக்குது. ஒரு பாக்கெட் 24 ரூவாய்தான். சுமார் 15, 20 இட்லி சுடலாம். நல்லாவும் இருக்கு.


hari
செப் 25, 2024 06:36

நம்ம பாஞ்சு லட்ச அப்பு என்ற அப்பாவி ஓய்வில்லாமல் மொக்கை கமெண்ட்ஸ் போடுவதால் சிறிது ஓய்வு தேவை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை