உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'மற்றவர்களின் உணர்வுகளை அவமதித்து, அவர்களை துாண்டுவது போன்ற கருத்துக்களை பேசக்கூடாது' என, சீமானுக்கு அறிவுரை வழங்கும்படி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மறுத்து விட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில், 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., செயலர் ரமேஷ் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, சீமான் மீது கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால்தான், வழக்கில் இருந்து விடுவிக்க, விசாரணை நீதிமன்றம் மறுத்துள்ளது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:மனுதாரர் மீது தொடரப்பட்டது அரசியல் வழக்கா, இல்லையா என்பது, கடந்த ஆறு மாதங்களாக, அவர் பேசியதில் இருந்தே தெரியும். பிறரை துாண்டும் வகையில் தான் தினமும் பேசுகிறார். அதனால் தான் புதுப்புது வழக்குகள் தொடரப்படுகின்றன.முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இவ்வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்க, எந்த ஆதாரங்களும் இல்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி கூறினார்.உடனே, 'வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்' என, சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதை நிராகரித்த நீதிபதி கூறியதாவது:தனிப்பட்ட நபர்களை துாண்டும் விதமாக, சீமான் கருத்துகளை தெரிவித்து வருகிறார். பேச்சு உரிமையை, அரசியல் சாசனம், சில கட்டுப்பாடுகளுடன் தான் வழங்கி இருக்கிறது. யாரும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது. அடுத்தவர்களின் உணர்வுகளை அவமதித்து, அவர்களை துாண்டுவது போன்ற கருத்துக்களை, சீமான் பேசக்கூடாது என, அவருக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானால் தான், அவர் என்ன பேசினார் என்பது தெரியவரும். இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சிந்தனை
பிப் 07, 2025 19:14

நல்லவேளை காந்திஜி பாரதியார் வல்லபாய் பட்டேல் இருந்திருந்தால் அவர்களையும் இப்பொழுது சிறையில் போட்டிருப்பார்கள்


samvijayv
பிப் 07, 2025 18:55

மதுரை திருப்பரங்குன்றம் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினர் நவஸ்க்கனி நடந்துக் கொண்டுதான் விளைவு தான் தற்பொழுது அங்கு 144 உத்தரவு மக்களின் நல்லிணக்கம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வரை பேசலாம் வாய்க்கு வந்ததை ஆளும் ஆட்சியாளர்கள் பேசினால் சரி அப்படித் தானே.


ஆரூர் ரங்
பிப் 07, 2025 13:53

அண்ணா கருநாநிதியை விடவா கடுமையா ஆபாசமா பேசிட்டார்?


jayvee
பிப் 07, 2025 10:38

சைமன் ஒரு தமிழ் கருணாநிதி என்பதை ஆமை குஞ்சங்கள் மறக்கவேண்டாம்.. பிரதமர் மற்றும் பிஜேபி அமைச்சர்களை தரம் குறைந்து பேசிய சைமன் மற்றும் தீயமுக அடிமைகளை நீதிமன்றம் கண்டிக்க தயங்கக்கூடாது


venugopal s
பிப் 07, 2025 10:34

இனிமேலாவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சி தான்!


Ganapathy
பிப் 07, 2025 13:06

நீதானோ கருணாநிதிக்கு தினமும் டிரஸ் மாத்திவிட்ட ஆளு? இப்படித்தான் உன்னோட மூளை யோசிக்கும்.


kantharvan
பிப் 19, 2025 14:51

வாய்ப்பு இல்லை ராசா ?? வாய்ப்பு இல்ல


angbu ganesh
பிப் 07, 2025 10:01

உண்மைய பேசினாலும் இந்த ஆட்சியில குற்றம்னுதான்


முருகன்
பிப் 07, 2025 11:10

உண்மை பேசலாம். தனிமனித தாக்குதல் கூடாது


karthik
பிப் 07, 2025 09:10

இத்தா வாய்க்கு வந்ததை காலங்காலாக பேசிக்கொண்டு திரிபவர்கள் இந்த திராவிட கும்பல்கள் தான் அவர்களை விட்டுவிட்டு.. சனாதானத்தை கொசுவை போல டெங்குவை போல ஒழிக்கவேண்டும் சென்று சொன்னவனை விட்டுவிட்டு.. ஒரு கிழவன் இப்படி எல்லாம்தான் பேசி இருக்கிறார் என்று உண்மையை சொன்னால் அவரை கண்டிக்கிறது நீதிமன்றம்..


பேசும் தமிழன்
பிப் 07, 2025 07:57

அப்படி பார்த்தால் எத்தனையோ திருட்டு மாடல் ஆட்கள் மற்றும் அதன் அல்லக்கை கட்சி ஆட்கள் இந்து மதத்தை பற்றி தவறாக பேசி விட்டு வெளியே சுற்றி கொண்டு திரிகிறார்கள்..... அவர்கள் மீது இந்த நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் ???


angbu ganesh
பிப் 07, 2025 10:02

கரெக்ட்


nv
பிப் 07, 2025 07:36

கணம் நீதிபதி, பல ஆண்டுகளாக திருட்டு திராவிட கூட்டம் பேசியதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சீமான் பேசவில்லை!! ஒரு தலை பட்சமாக தீர்ப்பு உள்ளது!!


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 07, 2025 07:26

கனம் நீதிபதி அவர்களே இந்த சைமனை இனிமேல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது அப்படி பேசினால் வாயிலயே குத்த வேண்டியது வரும் என்று உத்தரவு போட்டீங்கன்னா நல்லாருக்கும் நாளுக்கு நாள் இவனோட தொல்லை அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.


முக்கிய வீடியோ