உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னரிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல: திருமாவளவன்

கவர்னரிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல: திருமாவளவன்

பெரம்பலுார்: ''தமிழக கவர்னரிடம், பல்கலைக்கழக மாணவி பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல,'' என்று வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பெரம்பலுாரில், அவர் அளித்த பேட்டி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது, சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது, சபை நாகரிகமும் முக்கியம். பார்லிமென்ட் குழுவில் நான் இடம் பெற்று, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்தபோது, அவர் என்னை கேலி செய்த நிலையிலும், எல்லாரையும் போல நான் கைகுலுக்க நேர்ந்தது. அவர் மீது கோபம், வருத்தம், வலி இருந்தது; அவரது நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. எல்லாவற்றையும் விட, சபை நாகரிகம் கருதி, எல்லாரும் எப்படி நடந்து கொண்டனரோ, அதை நாம் மதிக்க வேண்டும் என எண்ணினேன். அதே உணர்வோடு, இதையும் பார்க்கிறேன். தமிழையும், தமிழ் மக்களையும் கவர்னர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், துாய்மை பணியாளர்களை வீட்டிற்கு அழைத்து பேசி இருக்கக்கூடாது. ஜனநாயக முறைப்படி தலைவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும். இதை விஜய் கற்று கொள்ளவில்லை. காலம் அதை அவருக்கு கற்று கொடுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Raj Selvaraj
ஆக 17, 2025 10:06

டேய் சரிங்கிறேயா... தப்புன்றியா. உன் விசுவாசத்த உன் எஜமானர்கிட்ட காட்டு. அடுத்த தேர்தல்ல நீ காணாம போக போற


Durai samy
ஆக 16, 2025 22:47

அப்ப சட்டசபையில் இருந்து ரம்மி ரவி எல்லாத்தையும் மதிக்காம சபை நாகரீகம் மதிக்காமல் ஓடி போலாமா இது நாகரிகமா அந்த பெண் செஞ்சது நாகரீகமா


Bala
ஆக 17, 2025 00:12

same thaan 200UP.


thangam
ஆக 16, 2025 11:42

போ கொத்தடிமை உனக்கெல்லாம் என்னடா சபை நாகரிகம் பத்தி பேச உரிமை இருக்கு


aaruthirumalai
ஆக 16, 2025 00:02

என்னப்பா இது


திமுக கைக்கூலி கொத்தடிமை
ஆக 15, 2025 22:10

கேப்ல கெடா வெட்டு


அழகு / ALAGU
ஆக 15, 2025 21:23

ராஜபக்சே..... கொடுத்த பெட்டியை மட்டும் தூக்கிட்டு வந்துட்டிக! நயவஞ்சக நரி


malar mannan
ஆக 15, 2025 20:36

தன் முகத்தில் தானே கரிபூசிக் கொண்டு,அந்த பைத்தியக்கார செயலை நியாயப் படுத்த அழகாக இருக்கும் என்பதற்காகவே பூசிக்கொண்டேன் என்றால், என்னா புத்திசாலித்தனம்! தங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?


kuppurao r
ஆக 15, 2025 20:27

தவறு என்றால் தவறு என்று சொல்லவேண்டும்.இரண்டு நிலைபாடு என்றுமே தீர்வாகாது.


V RAMASWAMY
ஆக 15, 2025 19:43

அறிவுரை தந்து பேசியிருக்கிறார் அவரது கூட்டணி கட்சி தி மு கவை போல


PTSridharan
ஆக 15, 2025 18:46

திராவிட மாயையில் எல்லா விதமான தெருக்கூத்துக்களும் அரவணைக்கப் படும்.....ஒரே தகுதி., பிராமண த்வேஷம்,கடவுள் மறுப்புக் கொள்கை..... சனாதன புறக்கணிப்பு.....மிஷனரிகளுடன் ஒட்டி உறவாடல்.... இஸ்லாமியத்தை ஏத்தி பேசுவது.....பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து தழைத்து வரும் சனாதன இந்து மதத்தை....இந்தப் புல்லுருவிகள் அழித்து விடுவார்களாம்....கனவிலும் நடவாது.கனவு காண்பது மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உரிமை...காணட்டும் ஜெய்ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை