உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கமிஷனரிடம் அனுமதி பெற்ற பிறகே விடுப்பு எடுக்க வேண்டும் என, கோவையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கோவையில் செயல்படும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்காக, 'வாட்ஸாப் குரூப்' துவக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களையும் இணைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், தற்செயல் விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு உள்ளிட்ட சிறு விடுப்புகளை, முன்கூட்டியே வாட்ஸாப் குரூப்பில் கோரிக்கையாக வைக்க வேண்டும்.அதற்கு மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, விடுப்பு எடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் கோர, மாநகராட்சி கமிஷனரிடம் நேரடியாக அனுமதி பெற வேண்டும் என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கோரும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், தலைமை ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி