உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மது பாட்டிலுக்கு ரூ.10 நெல்லுக்கு ரூ.40 கமிஷன்

மது பாட்டிலுக்கு ரூ.10 நெல்லுக்கு ரூ.40 கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., ஆட்சியில், நான்கரை ஆண்டுகளில், 3.75 லட்சம் மெட்ரிக் டன் நெல், தமிழக அரசால் வீணாக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய, விவசாயிகள் 40 ரூபாய் கொடுக்க வேண்டும். மது பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்குகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விவசாயத்துக்கு செலவு செய்யவில்லை; கல்வித் துறைக்கு எதுவும் செய்யவில்லை. 'ஈ.வெ.ரா., சிலை மீது கை வைத்தால், கையை வெட்டுவேன்' என்று வன்முறையை துாண்டும் வகையில் வைகோ பேசியுள்ளார். ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில், தமிழகத்தில் தினந்தோறும் பேசி வருகின்றனர். டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை போல, கரூர் சம்பவத்தில், எஸ்.பி., கலெக்டரை ஏன் மாற்றவில்லை? காவல்துறையிலும், தி.மு.க., அரசியல் செய்கிறது. - நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vasan
அக் 25, 2025 19:08

வீடு வரை உறவு ராகத்தில் பாடுங்கள், கீழ் காணும் வரிகளை. பாட்டிலுக்கு 10 உஉஉ RK Nagar சீட்டுக்கு 20 உஉஉ காஸ் சிலிண்டெர்க்கு 30 உஉஉ நெல் மூட்டைக்கு 40 உஉஉ


ஜெகதீசன்
அக் 25, 2025 15:13

கமிஷன், லஞ்சம், ஊழல் என்பவை எல்லாம் அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும். மக்கள் ஓட்டளிக்கும் விதம் தவறு என்று சொல்லி அப்படியே தாண்டி போகாதீங்க. இப்போது அரசுக்கு எதிராக போராடும் அனைத்து அமைப்பினரும் ஏன் நல்ல மாற்றத்துக்கு ஓட்டளிப்தில்லை? இலவசம் மற்றும் ஓட்டுக்கு பணம் பெறுபவர்களை விட ஓட்டளிக்க வராதவர்களே அதிகம். லஞ்ச ஊழலை தாண்டி ஏன் மக்கள் அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள், ஏன் தேசிய கட்சிகளை ஆதரிப்பதில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிங்க நாராயண திருப்பதி அவர்களே.


சிந்தனை
அக் 25, 2025 11:01

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றம்; அதனால் நிரூபிக்கப்படாத குற்றங்களை பற்றி பேசுபவர்கள் தான் குற்றவாளிகள்..


சங்கி
அக் 25, 2025 14:40

அப்படியென்றால் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நீதிபதி முன் வழக்கு விசாரிக்கப்பட்டால் நீதிபதி, வழக்கு பதிந்த காவல்துறை, வாதாடும் அரசு வக்கீல் அனைவரும் குற்றவாளிகளா? பேரு சிந்தனை. ஆனால் கபலத்துக்கு கீழே களிமண்ணோ?


Ramesh Sargam
அக் 25, 2025 09:47

தி.மு.க., ஆட்சியில், நான்கரை ஆண்டுகளில், 3.75 லட்சம் மெட்ரிக் டன் நெல், தமிழக அரசால் வீணாக்கப்பட்டுள்ளது. வயித்துக்கு அரிசி சோறு சாப்பிடும் தமிழக மக்களே, யோசியுங்கள். அந்த 3.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் விளைவிக்க எத்தனை விவசாயிகள் எத்தனை நாட்கள் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டிருப்பான் என்று. அவன் விளைவித்த நெல்லை முறையாக மழை, வெய்யில் இவற்றிலிருந்து பாதுகாக்க தரமான கட்டிடங்கள் கட்டத்தவறி இருக்கிறது இந்த திமுக அரசு. இப்பொழுது விளைந்திருக்கும் நெல்லை மழை காலத்திற்கு முன்பே கொள்முதல் செய்திருந்தால் இப்பொழுது பல லட்சம் டன் நெல்மணிகள் வீணாகி இருக்காது. இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம் கையாளாக திமுக அரசு. அப்படிப்பட்ட திமுக மீண்டும் ஆட்சியில் தொடரவேண்டுமா? சிந்திப்பீர். செயல்படுவார். திமுகவை ஓட ஓட விரட்டுவீர் தமிழகத்தைவிட்டே. செய்வீர்களா...?


Arul Narayanan
அக் 25, 2025 09:18

வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தான் டோல் கட்டணத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். கொடுக்க மாட்டோம் அல்லது வாகனங்களை ஒரு வாரம் ஓட்ட மாட்டோம் என்று சொல்ல துணிவு உள்ளதா?


kjpkh
அக் 25, 2025 11:00

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ 500 தருகிறேன் என்று சொல்லி வோட்டு வாங்கினீர்களே.ஆட்சியாளர்களிடம் கேட்க தைரியம் இருக்கிறதா?


VENKATASUBRAMANIAN
அக் 25, 2025 08:38

டோல்கட்டணம நேர்மையாக வசூலிக்க படுக்கிறது. கேஸ் ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் 10,40 யாருக்கு போகிறது. புரிந்தால் சரி. 200க்கு பதிவு போடுபவர்களுக்கு இதெல்லாம் புரியாது. மக்கள் புரிந்து கொண்டால் சரி


D Natarajan
அக் 25, 2025 08:29

இதை விட மோசமானது டோல் கட்டணக் கொள்ளை, மேலும் LPG சிலிண்டர் விலையில் 50 ரூபாய் அதிக வசூல் , கேட்பாரில்லை இந்த நாட்டில்.


SS
அக் 25, 2025 09:04

உண்மைதான். Gas cylinder டெலிவரிக்கு ரூ30-50 வரை வாங்குகிறார்கள்.


kjpkh
அக் 25, 2025 11:05

அப்போ பாட்டிலுக்கு பத்து நெல்லுக்கு நாற்பது வாங்குவது தவறில்லை என்று சொல்கிறீர்களா.


ஆரூர் ரங்
அக் 25, 2025 11:32

TOLL கட்டணம் வெள்ளைப் பணமாக ஃபாஸ்ட் டேக் மூலமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் பாட்டிலுக்கு பத்து, மூடைக்கு நாற்பதெல்லாம் முழுக்க லஞ்சம். கறுப்புப் பணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை