உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ரகசியமாக பேசும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் அந்த கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் மதிமுக சேர்வதற்கு அந்த கட்சி பேச்சு நடத்தி வருவதாகவும், துரை வைகோ மத்திய அமைச்சராக பதவி ஏற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது பற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கோவையில் பேட்டியளித்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 'தி.மு.க., உடன் கரம் கோர்ப்ப தில், எந்த மாற்றமும் இல்லை. வேறெந்த கட்சியுடனும் சேர்வ தற்கான அவசியமும் இல்லை.'இதுகுறித்து ரகசி யமாக பேசும் பழக்கமும் எங்களுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கற்பனையாக, பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். 'பா.ம.க., வலுவான கட்சி; தற் போது அங்கு நில வுவது உட்கட்சி பிரச்னை.தந்தை, மகன் கருத்து வேறு பாடால், இரு அணி போலத் தெரிகிறது. 'கூட்டணியில் பா.ம.க., இணை யுமா என்பதை, தி. மு.க., தலைமையே முடிவெடுக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

madhesh varan
ஜூன் 23, 2025 12:21

நச்சுன்னு சொல்லிட்டாரு,


Haja Kuthubdeen
ஜூன் 22, 2025 18:41

வாய்ப்பே இல்ல ராசா...மதிமுகவிற்கு சுத்தமா ஓட்டு வங்கியே இல்லை..கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் 6சீட் அதிகம்தான்.அதிகமா எதிர்பார்த்தால் கழட்டி விடப்படும்.அஇஅதிமுகவில் சேர்ந்தாலும் அந்த கூட்டணிக்கு பலன் ஏதுமில்லை.


Manaimaran
ஜூன் 22, 2025 12:01

பேசாம...


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 10:24

சீட் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு பேச்சு. நாகரீகத்தின் உச்சம்.


Muralidharan S
ஜூன் 22, 2025 09:59

நேரடியாக, உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிகரமாக கொந்தளித்து தாக்கி பேசிவிட்டு, பின்னர் தடாலென்று காலில் விழுந்து கூட்டணியில் தொடர்வார்.. இதுதான் திராவிஷ வரலாறு. இந்த காலத்தில், பிச்சைக்காரர்கள் கூட இன்று அவர்களுக்கு அந்த நேரத்திற்கு என்ன வேண்டுமோ காசு வேண்டாம்.. சாப்பாடு வாங்கிக்கொடு, இட்லி வாங்கிக்கொடு என்று .. பிட்சை கேட்டு வாங்கி கொள்கிறார்கள்.. அவர்கள் கேட்டது கொடுக்காமல், நம் கையில் உள்ளது ஏதாவது குடுத்தா, வேண்டாம் என்று போய்விடுகிறார்கள்.... ஆனால், பாவம்.. கொத்தடிமைகளுக்கு அந்த உரிமை கிடையாது..


Valagam Raghunathan
ஜூன் 22, 2025 08:41

தன் தொண்டர்களுக்காக, தன்மானதையே விட்டுக்கொடுத்த தலைவர்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 22, 2025 08:35

பாவம் இவர் புலம்புகிறார்


subramanian
ஜூன் 22, 2025 07:32

வைகோ பருப்பு வேகாது


A viswanathan
ஜூன் 22, 2025 17:07

இது எல்லாம் ஒரு லெட்டர் பேடு கட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை