உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூடநம்பிக்கைகளை சம்பவம் செய்யும் சித்தராமையா

மூடநம்பிக்கைகளை சம்பவம் செய்யும் சித்தராமையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் சென்றால், பதவி பறிபோகும் என்ற செய்தி உலா வருவது வழக்கம். அதுபோல, கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகருக்கு சென்றால் முதல்வர் பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. இதனால், எந்த முதல்வரும் இங்கு சென்றதே இல்லை.இதனை பொய்யாக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா பல முறை அங்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக, தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்.கடந்த, 2002ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, பிலிகிரி ரங்கனபெட்டாவில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக வரலாற்றில் சாம்ராஜ் நகரில் நடந்த ஒரே அமைச்சரவை கூட்டம் இது தான். 2002ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடந்த கூட்டத்தில், பழங்குடியினர் நலனுக்காக பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, நலத்திடங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால், அடுத்த தேர்தல் நடந்த 2004ல், காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது. ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து தரம்சிங் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தார்.இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா நடத்த உள்ளார். ஜனவரியில் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கலாம் என தெரிகிறது.

கொள்ளை பிரியம்

மைசூரு மாவட்டத்தை சேர்ந்த சித்தராமையாவிற்கு சாமராஜ் நகர் என்றால் கொள்ளை பிரியம். பல நலத்திட்ட உதவிகளை செய்து உள்ளார். இதனால், அமைச்சரவை கூட்டத்தின் போது, சாம்ராஜ் நகர், மைசூரு ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம்.அமைச்சரவை கூட்டம் நடத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஷில்பநாக் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.வெங்கடேஷ், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா கலந்து கொண்டனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
ஜன 01, 2025 16:09

அடுத்த முறை நிச்சயமாக நேரு காங்கிரஸ் வராது என்று இந்த செய்கை மிக மிக தெளிவாகக் கூருகின்றது


கிஜன்
ஜன 01, 2025 12:22

தமிழகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளை பெரிதும் ஒழித்தவர் தந்தை பெரியாரின் வழிவந்த தானைத்தலைவர் ....டாக்டர்.கலைஞர் ....


ஆரூர் ரங்
ஜன 01, 2025 13:31

சிவப்புக்கல் மோதிரம், மஞ்சள் துண்டு வழியாக மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியுமா?


kanoj ankrea, mumbai
ஜன 01, 2025 18:22

கிஷன் அதான் dalbathi வீட்டு அம்மா கோவில் கோவிலா போயிட்டு இருக்கு. 21 ஆம் பக்க நாயகர் முதலில் கோவில் தர்ம கர்த்தா. மரினா வில் தினமும் வடை பிரியாணி படையல். இதுதான் உன் ஏ வெ ரா ஒழித்த மூட நம்பிக்கைகள். முதல்ல 4 தெருவுக்கு ஒரு பிள்ளையார், இப்போ தெருவுக்கு 4 பிள்ளையார். வெளங்கிடும்


ஆரூர் ரங்
ஜன 01, 2025 11:57

எதற்கும் 3 பேரை அழைத்து பாத பூஜை செய்து பரிகாரம் தேடி விடுங்கள். வழிகாட்ட இருக்கவே இருக்கிறார் சின்ன தத்தி.


kantharvan
ஜன 01, 2025 17:19

ஓஹோ அந்த வீடுகட்டடுன மேஸ்திரியை எந்நேரமும் உங்க வீட்டு படுக்கையறையில் படுக்க அனுமதித்த தயாள சிந்தனை உள்ள ஆரூர் ரங்கா நீ?


SANKAR
ஜன 01, 2025 08:30

sambhavam seyyum na enna artham?


bgm
ஜன 01, 2025 08:29

எப்படியும் அடுத்த முறை தேறாது. அதுக்கு என்ன


முக்கிய வீடியோ