உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் பொருளாதார பங்களிப்பில் முன்னிலை

தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் பொருளாதார பங்களிப்பில் முன்னிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் பெரும்பங்கு வகிப்பதாக, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.நாட்டின் அனைத்து மாநில பொருளாதார செயல்பாடுகளை ஆராய்ந்து, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் மாநிலங்களின் பொருளாதார நிலையில், பெரிய அளவிலான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது தெரியவந்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.கடந்த 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேசிய சராசரியைக் காட்டிலும் தென் மாநிலங்களின் தனி நபர் வருமானம் குறைவாக இருந்தது. பின், தாராளமயமாக்கல் காரணமாக, இந்த மாநிலங்கள் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளன.தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தொழில்துறை வளர்ச்சியும்; கர்நாடகாவின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய பங்காற்றியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு உதயமான தெலுங்கானா, சிறப்பான பொருளாதார செயல்பாட்டை வெளிப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து உள்ளது.அதே வேளையில், கடந்த 1960 - 61களில், நாட்டின் பொருளாதாரத்துக்கு 10.50 சதவீத பங்களிப்பை வழங்கி, முன்னணி மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த மேற்கு வங்கம், தற்போது 5.60 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. தேசிய சராசரியில் 127.50 சதவீதமாக இருந்த அம்மாநிலத்தின் தனிநபர் வருமானம், தற்போது 83.70 சதவீதமாக குறைந்துள்ளது.இதையடுத்து, பல ஆண்டுகளாக தனிநபர் வருமானத்தில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களுக்கும் கீழே மேற்குவங்கம் சென்றுள்ளது.மகாராஷ்டிரா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தக்க வைத்தாலும், முன்பு 15 சதவீதமாக இருந்த அதன் பங்களிப்பு, தற்போது 13.30 சதவீதமாக குறைந்துஉள்ளது.கடந்த 1960 - 61ல் 14 சதவீத பங்களிப்பை வழங்கிய உத்தர பிரதேசம், தற்போது 9.50 சதவீதத்தை மட்டுமே வழங்குகிறது. மக்கள்தொகையின் அடிப்படையில், நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்கும் பீஹார், வெறும் 4.30 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது.

தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில்

மாநிலங்களின் தனி நபர் வருமானம்முன்னணி மாநிலங்கள் 1960-61(%) 2023-24(%)டில்லி 218.30 250.80தெலுங்கானா - 193.60கர்நாடகா 96.70 180.70ஹரியானா 106.90 176.80தமிழகம் 109.20 171.10பின்தங்கிய மாநிலங்கள் 1960-61(%) 2023-24(%)பீஹார் 70.30 32.80ஜார்க்கண்ட் - 57.20உத்தர பிரதேசம் 82.40 50.80மணிப்பூர் 50.30 66.00அஸாம் 102.90 73.70


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
செப் 19, 2024 12:27

தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் பெரும்பாலான முக்கிய துறைமுகங்கள் இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வளர்ச்சி அதிகமாக இருப்பது இயற்கை. துறைமுக வசதி இல்லாத வடஇந்திய விவசாய மாநிலங்களில் அதே வளர்ச்சியைக் காண முடியாது. உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைத்து வைத்திருக்கும் வரை இந்நிலை மாறாது. மேலும் ஆண்டில் பெரும்பாலான மாதங்கள் கடும் குளிர் அல்லது வெப்பமாக உள்ள வட மாநிலங்களிலும், காடுகள் மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களிலும் தொழில் வளர்ச்சி கஷ்டம்.


venugopal s
செப் 19, 2024 16:44

அப்பா, கஷ்டப்பட்டு அவர்களின் திறமையின்மைக்கும் கையாலாகாத்தனத்துக்கும் சாக்கு போக்கு சொல்லி முட்டுக் கொடுத்து விட்டீர்களே!


Rangarajan Cv
செப் 19, 2024 18:05

Sad to notice WB gone to the bottom of the pyramid. In a way people of that is state responsible for electing ineffective govt, which believes only in Dharna


அப்பாவி
செப் 19, 2024 09:02

இங்கே அடிச்சுப்.புடுங்கி உ.பி க்கு குடுப்பவர்களை என்ன சொல்ல?


சமீபத்திய செய்தி