உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

குள்ள நரிகள் பாதுகாப்புக்காக சேலத்தில் சிறப்பு மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேகமாக அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், 'வங்கு நரி' எனப்படும் குள்ள நரிகள் வேட்டையாடப்படுவதை தடுத்து, அதை பாதுகாப்பதற்கான சிறப்பு மையம் சேலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, யானை, புலி, சிறுத்தை போன்ற வன உயிரினங்களை பாதுகாப்பதற்கு உயர் முன்னுரிமை கிடைக்கிறது. ஆனால், காடுகளின் உயிர் சூழல் பாதுகாப்பில், பல்வேறு வகை சிறிய விலங்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

முன்னேற்றம்

இந்த வகையில், முள் எலி, எறும்புத்தின்னி, குள்ள நரி போன்ற விலங்குகள், குறிப்பிட்ட சில பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உள்ளூர் மக்கள் இவற்றை வேட்டையாடுகின்றனர். அதனால், பெரும்பாலான சிறு விலங்குகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பெரும்பாலான காப்புக் காடுகளில், நரிகள் வாழ்கின்றன. இதில் வங்கு நரி எனப்படும் குள்ள நரி மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் இவ்வகை நரிகள் பரவலாக காணப்படுகின்றன. இங்கு வாழப்பாடி உள்ளிட்ட சில தாலுகாக்களில், பொங்கல் பண்டிகையின்போது குள்ள நரியை பிடித்து வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு பிடிக்கப்படும் குள்ள நரிகள், மீண்டும் அதன் இனத்தில் சேர முடியாமல் அழியும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இவ்வாறு செய்வதால், குள்ள நரிகள் இனமே அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுகிறது. இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக நாட்டிலேயே முதல் முறையாக, சேலத்தில் குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறு விலங்குகள் பாதுகாப்பில், இது முக்கியமான முன்னேற்றமாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு

வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி கூறியதாவது: சேலத்தில் குள்ள நரி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக, சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று எறும்புத்தின்னி, முள் எலி உள்ளிட்ட, எட்டு வகை சிறு விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவை முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் அளவில், குள்ள நரி உள்ளிட்ட சிறு விலங்குகள் பாதுகாப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கனி, நாகூர்
டிச 05, 2024 20:37

சென்னையில் கூட அறிவாலயம் என்ற இடத்தில் குள்ள நரிகள் பேணப்பட்டு வருகிறது. அங்கு முது பெரும் கிழ நரி வசித்து வந்தது. இப்போது இரண்டு தத்திகள் தான் நரி கூட்டத்தை வழி நடத்துகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:23

திராவிட மாடல் பேசும் குள்ளநரிகளுடன்தான் பாஜக திரைமறைவு உறவு வைத்துள்ளது .....


Ramaraj P
டிச 05, 2024 13:50

2000/2001 காலத்தில் (திருப்பூர் மாவட்டம் நான்) இந்த குள்ள நரிகள் நிறைய இருந்தது. ஆனால் இப்போது ஒன்று கூட இல்லை.


hari
டிச 05, 2024 10:20

இங்குள்ள ஓநாய் கூட்டத்தை விரட்ட சில நரிதனமும் வேண்டும்


venugopal s
டிச 05, 2024 09:31

இந்த குள்ளநரிக் கூட்டத்தால் இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஏய்க்க முடிந்தது, தமிழ்நாடு கேரளாவைத் தவிர!


ghee
டிச 05, 2024 10:14

வேணு... இடம் சேலம்... நிறைய ஓநாய் கூட்டம் தமிழ்நாட்டில்


பெரிய ராசு
டிச 05, 2024 11:37

இப்படியே சொல்லிட்டு மோடிக்கிட்டே பிச்சையெடுங்க


Oviya Vijay
டிச 05, 2024 08:16

பாஜக தலைவர்கள் என்ற போர்வையில் நம் இந்தியாவில் குள்ள நரிகள் பாதுகாப்புடனும் மிகுந்த செல்வ செழிப்புடனும் உள்ளனர். கவலை வேண்டாம்...


Arunkumar,Ramnad
டிச 05, 2024 08:38

இத்தனை வருடங்கள் தமிழகத்தை ஆண்ட கட்டுமர குள்ளநரி குடும்பம் பாவம் கஞ்சிக்கு அலைந்து கொண்டிருக்கிறது.


ghee
டிச 05, 2024 10:11

நடுவில் சில ஓநாய் களும் ஊளை யிடும்.....ஹி ஹி


சம்பர
டிச 05, 2024 05:23

அரிசி வருது. பாக்க முடிவது இல்ல


ராஜாராம்,நத்தம்
டிச 05, 2024 07:57

என்னது எடப்பாடி தலைமையில் நடக்கப் போகிற பொதுக்குழு கூட்டத்தை சேலத்துக்கு மாத்திட்டாங்களா?


முக்கிய வீடியோ