மேலும் செய்திகள்
உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் விளையாட்டு விழா
10-Oct-2024
பொள்ளாச்சி : தொடர்ந்து, மூன்று மாதங்களாக, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மனரீதியாக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இதில், குறுமையம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.முதற்கட்டமாக, காலாண்டு தேர்வுக்கு முன்பே, குறுமைய போட்டி நடத்தப்படும். அதன்பின், ஒரு மாதம் கழித்து, மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும். இடைபட்ட நாட்களில், மாணவர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபடுவர்.ஆனால், நடப்பாண்டு, வழக்கத்துக்கு மாறாக, குறுமையப் போட்டியைத் தொடர்ந்து, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிக்கப்பட்டது. இப்போட்டி, கடந்த 4ம் தேதி துவங்கி, 24ல், முடிக்கப்பட்டது.அதேநேரம், தற்போது, பாரதியார் தின, மாவட்ட போட்டியும் துவுங்கி உள்ளது. மூன்று மாதங்களாக, ஓய்வின்றி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருவதால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நடுவர்களாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: வழக்கமாக, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, ஜன., மாதம் நடத்தப்படும். தற்போது, பாரதியார் தின விளையாட்டு போட்டிக்கு இடையே நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களை ஓய்வின்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்கச் செய்வதால், அவர்கள் மனரீதியாக பாதிக்கின்றனர்.மேலும், போட்டியில் பங்கேற்க, எந்தவொரு பயணப்படியும் வழங்குவதில்லை. இதேபோல, எந்தவொரு போட்டியாக இருந்தாலும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களே நடுவர்களாக செயல்படுகின்றனர். இடைவெளி இல்லாமல் போட்டி நடத்தும் அவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, கூறினர்.
10-Oct-2024