உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை: அண்ணாமலை

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை: அண்ணாமலை

சென்னை: 'நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்துள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் காட்டும் பயங்கரமான, இரட்டை நிலைப்பாடுகளும், சதி திட்டம் என்ற அவரின் அனுமானமும் , அவருக்கு புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zzvzsw88&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது, முதல் முறை அல்ல. இதற்கு முன், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 13 முறை வாக்காளர்கள் பட்டியல்களில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பீஹாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின், வாக்காளர் பட்டியல் நீக்கம் குறித்து, ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவின் கற்பனையை, ஸ்டாலின் நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில், தேஜஸ்வி தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார். அவரது புகைப்படத்துடன் கூடிய பெயர் பட்டியலில் இருந்தது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், வாக்காளர்கள் பட்டியல் திருத்தத்திற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டை நாடியதை, ஸ்டாலின் மறந்து விட்டாரா. அவர், வாக்காளர் பட்டி யலில் இல்லாத, உயிரிழந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தினார். கடந்த, 2017ல் தி.மு.க., தமிழகம் முழுதும் உள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தக்கோரி, தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தது. 'ஆதார்' கார்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும். வீடு, வீடாக, வாக்காளர்களை சரிபார்க்க வேண்டும் எனக் கோரியது. ஜனநாயகத்தின் புனிதம் என்பது, வாக்காளர் பட்டியலின் நேர்மையை சார்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venugopal S
அக் 29, 2025 11:43

வந்து விட்டார் எல்லாம் தெரிந்த அண்ணாவி!


கண்ணன்,மேலூர்
அக் 29, 2025 15:54

வந்துவிட்டார் அறிவாலய முரட்டு முட்டு வேணு...


bharathi
அக் 29, 2025 11:34

Highly intellectual it is sad that the party side lined him from TN leadership to compromise for an useless alliance with Edappadi. if Annamalai would have continued there is a hope for BJP as well Tamil Nadu people for a major change in future.


Sun
அக் 29, 2025 06:36

அண்ணன் வர, வர பல்துறை வித்தகர் ஆயிட்டாரு. திடீர்னு ஸ்டாலினுக்கு புரிதல் இல்லேம்பாரு, இயற்கை விவசாயம் பத்தி பேசுவாரு இது நல்ல விசயம்தான். ஆனா புதுசா அண்ணன் சினிமா விமர்சகர் வேற ஆயிட்டாரு! மாரி செல்வராஜ் படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பாரு! மாரி செல்வராஜ் என்னக்காச்சும் பஹல்காம் தாக்குதல் பற்றியோ, ஆபரேசன் சிந்தூர் பற்றியோ பேசி இருப்பாரா? அதப்பத்தியெல்லாம் யோசிக்க அண்ணனுக்கு நேரமில்ல. மொத்தத்துல அண்ண இப்ப ரொம்ப பிஸி.


ரவி
அக் 29, 2025 14:56

உண்மைதான். மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் பார்த்து விட்டு ஸ்டாலின் அவரை கூப்பிட்டு பாராட்டுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எதிர்கட்சி தலைவர் பயிர்களை காக்க பயிர்களை பார்க்க முதல்வர்க்கு நேரமில்லாமல் திரைப்படம் பார்த்து கொண்டு அதன் இயக்குனர் மாரி செல்வராஜை கூப்பிட்டு பாராட்டி கொண்டிருக்கிறார் திரைப்படம் பார்க்க மட்டும் முதல்வர்க்கு நேரமிருக்கிறதா? எனக் கண்டிக்கிறார். ஆனால் அண்ணாமலையும், அமர்பிரசாத் ரெட்டியும் அத் திரைப்படத்தைப் பற்றியும், அதன் இயக்குனர் பற்றியும் ஆஹா, ஓஹோ என அறிக்கை வெளியிடுகிறார்கள். இத்தனைக்கும் அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் தி.மு.க ஆதரவு நிலைப் பாட்டில் உள்ளவர். சென்ற வருடம் திருநெல்வேலியில் வெள்ளம் வந்த போது அரசு அதிகாரி போல் உதயநிதியுடன் சேர்ந்து ஆய்வு மேற் கொண்டவர். இதுவரை எந்தத் திரைப்படம் பற்றியும் விமர்சனம் செய்யாத அண்ணாமலை மாரி செய்வராஜின் திரைப்படம் பற்றியும், அவரைப் பற்றியும் புகழ வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?


Dinakaran,Sivagangai
அக் 29, 2025 15:56

திமுகவிற்கு முட்டு கொடுக்க இந்தா புதிதாக ஒரு அல்லக்கை வந்திருக்கு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை