உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விவசாயி வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின் அரசு: த.வெ.க., தலைவர் விஜய்

விவசாயி வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின் அரசு: த.வெ.க., தலைவர் விஜய்

சென்னை: 'நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளதுபோல, மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, தி.மு.க., ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது உறுதி' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் அரசு என்றால், அவர்கள் வாழ்வாதாரத்தை காத்து, பொருளாதார ரீதியில் உயர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்த நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், மழையில் நனையவிட்டு வீணாக்கி, அவர்கள் வயிற்றில் அடிக்கும் அரசை என்னவென்று சொல்வது? விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்று, பணத்தை கையில் பார்த்து விடாமல் தடுப் பதே, ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க., அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இது, இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வேதனையாக உள்ளது. வெற்று விளம்பரத்திற்காக, 'நானும் டெல்டாக்காரன்' என, பெருமை பேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, ஏழை விவசாயிகள் சார்பாக, நான் ஒருசில கேள்விகளை முன்வைக்கிறேன். டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை, உரிய நேரத்தில் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன? பருவ மழையால் விவசாய பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதிக மழை பொழிவு இருந்தாலும், பயிர்கள் மூழ்காதபடி தண்ணீர் தானாகவே வெளியேறி, நீர் நிலைகளை சென்றடைய போதுமான வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்கள், மழையில் நனைந்து வீணாகாமல், நல்ல முறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒவ்வொரு ஆண்டும் நெல்மணிகள் வீணாகும் நிலையில், அடுத்த ஆண்டாவது அதை மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையா? இது தெரிந்தும், ஒவ்வொரு ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு? விவசாயிகளின் வேதனைக்கு, ஸ்டாலின் அரசு என்ன பதில் சொல்ல போகிறது? நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதேபோல தமிழக மக்கள் மனங்களில் முளைத்து, வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு, இன்னும் வலுவாகி, மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venugopal S
அக் 29, 2025 15:55

கடைசியில் ஒரு ஆக்க்ஷன் ஹீரோ காமெடியன் ஆகி விட்டார் !


Ms Mahadevan Mahadevan
அக் 29, 2025 15:50

எல்லா கட்சியா சொல்லும் கொள்கைகளையே சொல்லி பாரு இவர் எப்படி மாற்றம் தருவார்?. மது விலக்குகொண்ட வருவேன் இலவச ஐ ஒழிப்பேன் ஜாதி மத பார்த்து வழங்கும் சலுகை ஒழிப்பேன் என்று கொள்கை சொல்ல வேண்டும்


Ajrjunan
அக் 29, 2025 15:32

மழைக்கு இது எந்த ஆட்சி என்று பார்த்து வருவதில்லை. மழையால் பாதிப்பும் இருக்கும் பயனும் இருக்கும். விவசாயின் இழப்பு வேதனைக்கு உரியது. முதல்வர் போதுமான நிவாரணம் வழங்குவார்.


Senthoora
அக் 29, 2025 14:52

இவருக்கு இதுகுமுதல் நடந்த விவசாயிகள் போராட்டம் பற்றி தெரியல, யாரால், ஏன் என்று? இனி எடப்பாடி எழுதி கொடுப்பார், இவர் மேடையில் வாசிப்பார்.


Rajah
அக் 29, 2025 14:27

எவரும் எந்தத் துறையையும் விமர்சிக்கலாம். அதற்கு பதில் அளிப்பது அரசின் கடமை. விமர்சனத்தில் கண்ணியம் தேவை.


Natchimuthu Chithiraisamy
அக் 29, 2025 11:18

சினிமா நடிப்பு வசன துறையில் இருந்தவர்கள் முதல்வர்கள் ஆகி அத்திக்கடவு திட்டத்தை தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியாமல் 60 ஆண்டுகள் தவித்தார்கள். எடப்படியார் துவக்கினார் குட்டையெல்லாம் தண்ணீர் தொடர் மழை அங்கு பெய்துகொண்டே இருக்கிறது தென்னை விவசாயம் சில ஆண்டுகளில் பொள்ளாச்சி போல் வளரும் எனவே அதிமுக கூட்டணி அவசியம் விஜய்க்கு


Venugopal S
அக் 29, 2025 10:37

மறுபடியும் தைரியம் வந்து விட்டது!


Rajah
அக் 29, 2025 14:18

அவருக்கு தைரியம் வரக்கூடாது என்பதுதானே திமுகவுக்கும் அதன் கூட்டணிக்க கட்சிகளுக்கும் நோக்கமாக இருக்கிறது. தைரியசாலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு ஏன் பயம் வருகின்றது?


Senthoora
அக் 29, 2025 14:53

அவரின் தைரியத்தை தானாக அழித்துவிட்டார்,


Pandianpillai Pandi
அக் 29, 2025 10:25

எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. நான் அரசியலில் ஒரு கட்சியின் தலைவர் நான் வளர்வதற்காக தி மு க எனக்கு எதிரி. பாதிக்கப்பட்டவர்களை பேருந்தில் அழைத்து வந்து என்ன பண்ணீங்க? மக்களுக்கு தெரியவேணாமா? இது என்ன மாதிரி ஆறுதல். தன்மானத்தை வெட்கக்கேடாக மாற்றிவிட்டிர்களே? இதுதான் த வெ க வின் கொள்கையா? அடுத்து குளிர்காலம் வரும் அப்போ என்ன விவசாயம் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களால இந்தியாவே வயித்திலேயும் வாயிலேயும் அடிச்சுக்கிட்டாங்க. அப்போ நீங்க என்ன செய்தீங்க ? துக்கம்ன்னு தூங்கிட்டீங்க. உங்கள நம்புறவங்களையும் முட்டாளாக்காதீங்க.


Sun
அக் 29, 2025 10:22

தூக்கத்திலேர்ந்து திடீர்னு முழிச்சுட்டாரு நம்ம சனிக்கிழமை சன்னாசி !


என்னத்த சொல்ல
அக் 29, 2025 10:04

அய்யா...தளபதி அறிக்கை விட்டுட்டாரு..


புதிய வீடியோ