உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்தடுத்து பா.ஜ., கொடுத்த அழுத்தங்கள்: அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பின் பின்னணி?

அடுத்தடுத்து பா.ஜ., கொடுத்த அழுத்தங்கள்: அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பின் பின்னணி?

பா.ஜ., மேலிடம் கொடுத்த அடுத்தடுத்த நெருக்கடியால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வியை தழுவிய பின், சில மாதங்களில், 'பா.ஜ.,வுடன், கூட்டணி இல்லை; எந்த பிரச்னை வந்தாலும் சந்திப்போம்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். தே.மு.தி.க., மற்றும் சிறு கட்சிகளை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, லோக்சபா தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., படு தோல்வி அடைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=59qq7n27&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிர்ந்து போனார்

இருந்தபோதும், அவ்வப்போது மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வந்த பழனிசாமி, கடந்த 4ல், சேலம், ஆத்துாரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியின்போது, 'தி.மு.க., மட்டும் தான் எங்களுக்கு எதிரி; ஆறு மாதம் பொறுத்திருங்கள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்' என, பழனிசாமி திடுமென கூறினார். இதற்கிடையில், அவரது சம்பந்தி சுப்பிரமணியன் மீதான வழக்கில், பழனிசாமியின் மகன் மிதுன் வரை சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.அதேபோல, பழனிசாமி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க, செங்கோட்டையன் திடுமென களம் இறங்கி, பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பினார். கோவை மாவட்டம் அன்னுாரில் நடந்த, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதாவின் படம் இல்லை என செங்கோட்டையன் குரல் எழுப்பி, அதிருப்தியை வெளிப்படுத்த, பின்னணியில் பா.ஜ., இருப்பதாக அறிந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் பழனிசாமி.கூடவே, செங்கோட்டையனுக்கு, 42 மாவட்டச் செயலர்கள் மறைமுகமாக ஆதரவு கொடுக்க முன்வந்திருப்பதை அறிந்து, செய்வது அறியாமல் தவித்தார் பழனிசாமி. அ.தி.மு.க., மற்றும் தன்னை நோக்கி நடத்தப்படும் சம்பவங்கள் அனைத்தின் பின்னணியிலும் பா.ஜ., இருப்பதை உணர்ந்த பழனிசாமி, இதன் பின்பும், பா.ஜ.,வுடனான மோதலைத் தொடர விரும்பவில்லை.தன் மீது லேசான வருத்தத்தில் இருந்த வேலுமணியை அழைத்த பழனிசாமி, பா.ஜ.,வுடன் சமாதானம் பேச பச்சைக் கொடி காட்டினார். இதையத்து, முன்னாள் நீதியரசர் மற்றும் சிலர் வாயிலாக, பா.ஜ.,வின் மேலிடத் தலைவர்களிடம் ரகசிய பேச்சுக்கள் நடந்தன. பா.ஜ., தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதை பழனிசாமி தரப்பும் ஏற்றுக் கொண்ட பின், டில்லிக்கு அழைக்கப்பட்டார் பழனிசாமி.நேற்று முன்தினம் அவசரமாக டில்லிக்கு சென்ற பழனிசாமி, அங்கு கட்சியினருடன் சேர்ந்து அமித் ஷாவை சந்தித்து, இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக பேசியுள்ளார்.

வலுவான 'ஸ்கெட்ச்'

இது குறித்து அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 'வரும் மார்ச் 31க்குள் கூட்டணி குறித்த முடிவை பழனிசாமி அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினர். 'அது நடக்காத பட்சத்தில், அ.தி.மு.க.,வுக்கு வேறு ஒருவர் பொதுச்செயலர் ஆக்கப்படுவார்; எங்களுடைய சாய்ஸ் செங்கோட்டையன்' என பா.ஜ., தரப்பில் சொல்லப்பட்ட தகவல் பழனிசாமியை சென்றடைந்தது.அதோடு, சட்ட ரீதியாக, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும், தேர்தல் கமிஷன் வாயிலாக சில திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் பழனிசாமிக்கு தகவல் அனுப்பப்பட்டது. பழனிசாமி சம்பந்தியை, அமலாக்கத்துறை அல்லது ஐ.டி., மூலம் வளைக்கவும், பா.ஜ., தரப்பில் வலுவான 'ஸ்கெட்ச்' போடப்பட்டுள்ள தகவலும் கிடைக்கவே, பழனிசாமி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.இப்படி அடுத்தடுத்து வந்து சேர்ந்த அதிர்ச்சித் தகவலை அடுத்தே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதென முடிவெடுத்து, டில்லி சென்று சந்தித்து திரும்பியுள்ளார் பழனிசாமி. இனி, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்.பழனிசாமி - அமித் ஷா சந்திப்பில், பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கையில், 26 முதல் 30 சதவீத தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரும் சித்ரா பவுர்ணமி நாளில் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 15, 2025 05:39

துரோகம் செய்வது ஈப்பீசுக்கு கைவந்த கலை. இவரது மகன் மிதுன் மேலே வழக்கு என்று சொல்லி மிரட்டி பணியவைத்ததாக சொல்வதை நம்புவதற்கில்லை. அந்த வழக்கில் கர்நாடகா டான் எடியூரப்பாவின் மகன், கர்நாடக பாஜாக்கா மாநிலத்தலைவர் விஜயேந்திராவும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 15, 2025 05:35

அஜித்பவார் மேலே 17,000+ கோடி ரூபாய் அளவில் ஊழல் குற்றசாட்டுகளை மேடையில் ஏறி கூவினார் நம்ம பெரியஜி. சரத்பவார் கட்சி உடைந்து இப்பொழுது அஜித்பவார் பாஜாக்கா ஆட்சியில் துணை முதல் அமைச்சர். ஊழல் பணத்தை எல்லாம் ரெண்டு சேட்டுக்களுக்கும் பங்கு போட்டு கொடுத்து விட்டார். பழனிசாமியும் அதை செய்வாரா? இல்லை வழக்கை சிபிஐ கோர்ட்டுக்கு கொண்டு போனால் அதிலே எடியூரப்பாவின் மகன், கர்நாடகா பாஜாக்கா மாநிலத்தலைவர் விஜயேந்திராவை சிக்க வைப்பாரா ?


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 15, 2025 05:27

சம்பந்தி சுப்பிரமணியன் மீதான ஊழல் வழக்கில், பழனிசாமியின் மகன் மிதுன் வரை சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதை வைத்து மிரட்டி பாஜாக்கா கூட்டணியை வலுப்படுத்தியது - பாஜாக்கா ஆடீம்கா கொள்கை கூட்டணியின் அடித்தளம்.


பேசும் தமிழன்
மார் 27, 2025 19:38

ஒற்றுமையே பலம்..... ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்..... புரிந்து கொண்டு நடந்தால் சரி.


SP
மார் 27, 2025 16:36

எது எப்படி எடப்பாடியாருடன் கூட்டணி என்பது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை கேட்காமல் செய்ய மாட்டார்கள். ஆனால் எனது தனிப்பட்ட கருத்து எடப்பாடி யாருடன் கூட்டணி சேர்வது நல்லதல்ல


enkeyem
மார் 27, 2025 14:07

எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பை கழக கொத்தடிமைகள் தங்களுக்கே உரிய பாணியில் விமர்சித்து தங்களது வயிற்றெரிச்சலை காட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசினார்களோ இல்லையோ, இந்த கழக கொத்தடிமைகள் என்னவோ நேரில் பார்த்தமாதிரி ஆளாளுக்கு ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு வருகின்றனர்


பேசும் தமிழன்
மார் 27, 2025 19:40

அவர்களுக்கு இப்போதே வயிற்றை கலக்கி இருக்குமே..... அதனால் தான் இந்த கூப்பாடு.


பாமரன்
மார் 27, 2025 13:55

பாருங்க மக்களே... இவ்ளோ கற்பனை பண்ணுனதெல்லாம் சரி... காண்ட்ராக்ட் விசுவாசம்னா இதுதான் அல்லவோ....


S.L.Narasimman
மார் 27, 2025 12:26

சரியான கப்சா கதை. அப்படியே மெய்டன் பண்ணுங்க.


Haja Kuthubdeen
மார் 27, 2025 10:41

ஏனப்பா ஆளாலுக்கு இஸ்டத்துக்கு ரீல் விடுறீக...மலை தலைவரா நீடித்தால் கூட்டணி இல்லை என்று நாமே முடிவுக்கு வந்து விடலாம். பொறுத்திருங்கள் அதுவரை...


Haja Kuthubdeen
மார் 27, 2025 10:37

செம கற்பனை....அஇஅதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய பிஜெபி க்கு யார் அதிகாரம் கொடுத்தார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை