உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ஆர்.,; தி.மு.க., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ஆர்.,; தி.மு.க., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி

சென்னை : துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தி.மு.க., கூட்டணிக்கு, திடீர் நெருக்கடி உருவாகி உள்ளது. இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், தன் உடல் நலத்தை காரணம் காட்டி, பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலை, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t3b657c5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இண்டி' கூட்டணி தரப்பில், பொது வேட்பாளரை அறிவிக்க, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, மஹாராஷ்டிரா கவர்னராக உள்ளார். இரண்டு முறை கோவை லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்பந்தம், தி.மு.க., கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின் நட்பு வளையத்தில் உள்ளவர். சமீபத்தில் முதல்வரின் வீட்டிற்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார். எனவே, முதல்வர் அவருக்கு ஆதரவளிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆதரவு அளித் தால், 'இண்டி' கூட்டணியில், சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

palaniappan. s
ஆக 18, 2025 13:21

வேறு ஒரு நல்ல மனிதரை!? இன்டி கூட்டணியிலா?


Ramesh Sargam
ஆக 18, 2025 12:28

கூட்டணிக்கு நெருக்கடி. சபாஷ், இதைத்தானே நாங்க எதிர்பார்க்கிறோம். இனி ஒரே கடிதான்.


Shivakumar
ஆக 18, 2025 12:23

ஜெகதீப் தங்கர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவரை துணை ஜனாதிபதியாக நியமித்ததே பாஜகதான்.


Oviya vijay
ஆக 18, 2025 11:32

கலாம் அவர்களை சங்கி என்று அழைத்து ஓட்டு மொத்த தமிழர்களின் முதுகில் குத்திய மாடல்


ramarathinam sivaramakrishnan
ஆக 18, 2025 09:01

டாக்டர் அப்துல் கலாமை ஆதரிக்காதவர்கள். இவரை ஆதரிக்க மாட்டார்கள்.


சாமானியன்
ஆக 18, 2025 08:53

தமிழக பாஜகவில் எச்.ராஜா, அண்ணாமலை, வானதி போன்றவர்கட்கு கவர்னர் பதவி என பிரம்மன் எழுதி வைத்துள்ளான். அண்ணாமலை தமிழக கவர்னராக வருவதை கற்பனை செய்து பாருங்களேன். தமிழிசை ! அதெப்படி கவர்னர் மாளிகையில் மட்டுமே தாமரை மலருகிறது ?


suresh Sridharan
ஆக 18, 2025 08:19

திமுக எப்படியும் இவரை ஆதரித்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் கோயம்புத்தூர் திமுகவை சுத்தமாக துடைத்து வைத்திருக்கும் ஒரு இடம் இவரை ஏற்காத பட்சத்தில் அது இன்னும் அதிகமான சுமையாக முடியும் திமுகவின் கனவு கலையும்


Oviya Vijay
ஆக 18, 2025 07:36

தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் இவரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை... வேறொரு நல்ல மனிதரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்ய முடிந்தால் தோற்றாலும் பரவாயில்லை என்று தேர்தலில் இவருக்குப் போட்டியாக நிற்க வையுங்கள்...


பேசும் தமிழன்
ஆக 18, 2025 09:17

பேசாமல் இத்தாலி பப்புவை இண்டி கூட்டணி வேட்பாளராக நிற்க வையுங்கள். அடுத்த பலிக்கடா வுக்கு உண்டான அனைத்து தகுதிகளும் உள்ளது. ஆனாலும் அவருக்கு ஒன்றும் ஆகாது.... அந்தளவுக்கு மானம் மரியாதை உள்ள மனிதர் ??


vivek
ஆக 18, 2025 09:18

அந்த தகுதி திமுக கூட்டணி சொல்லும் எவனுக்கும் தகுதி இல்லையே....என்ன செய்ய...


subramanian
ஆக 18, 2025 07:26

வாஜ்பாய் ஆட்சியில் பலமடங்கு சலுகைகள் அனுபவித்து விட்டு கடைசியில் காலைவாரிய கேவலமான கூட்டம் தான் திமுக குடும்பம்.


venugopal s
ஆக 18, 2025 07:23

தமிழன் என்றாலே டாஸ்மாக் அடிமை, திருட்டு திராவிடன் என்று வசை பாடியவர்களை இன்று இவரை தமிழன் ,தமிழன் என்று கூவ விட்டது தான் அரசியலின் மகிமை!


பேசும் தமிழன்
ஆக 18, 2025 07:48

கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த.... ஜல்லிக்கட்டு தடை செய்த.... கான் கிராஸ் கட்சிக்கு தான் டாஸ்மாக் டுமிளர்கள் ஓட்டு போடுவார்கள்.... தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தது மோடி அவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம்.... அந்தளவுக்கு நல்லவர்கள் டாஸ்மாக் டுமிளர்கள்.


vivek
ஆக 18, 2025 10:07

திருட்டு திராவிடன் வேறு உண்மை தமிழன் வேறு.


theruvasagan
ஆக 18, 2025 22:26

அசல் தமிழன் மரபணு முற்றிலும் வேறு. டாஸ்மாக் டம்ளன் மரபணு தி.தி..விடன் மரபணு இரண்டும் கிட்டதட்ட ஒரே மாதிரி என்று வேண்டுமானால் சொல்லலாம்.


முக்கிய வீடியோ