உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., பொதுக்குழுவில் நெருப்பை கக்கிய சுகந்தன்; ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

பா.ம.க., பொதுக்குழுவில் நெருப்பை கக்கிய சுகந்தன்; ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது நிருபர்- திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டு அருகே ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதை அடுத்து, இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ராமதாஸ் பேரனும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சுகந்தன், பா.ம.க., தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகளை, அன்புமணியின் ஆதரவாளரான பா.ம.க., இளைஞரணி நிர்வாகி ராஜேஷ், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் ராஜாராம், அன்புமணி ஆதரவாளர் ராஜேஷை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் அருகே நேற்று காலை, வழக்கறிஞர் ராஜாராமும், ராஜேஷும் வந்தனர். இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியது. இருவருடைய ஆதரவாளர்களும், தாக்கிக் கொண்டனர். மோதல் தொடர்பாக, இரு தரப்பும் மாறி மாறி புகார் அளிக்க, இரு தரப்பினர் மீதும் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர். இரு தரப்பினரும் திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். அன்புமணி தரப்பினரை கோபப்படுத்தும் அளவுக்கு, ராமதாஸ் நடத்திய பா.ம.க., பொதுக்குழுவில் அவருடைய பேரன் சுகந்தன் அப்படி என்னதான் பேசினார்? அவருடைய பேச்சு: பா.ம.க.,வில், என் சகோதரர் முகுந்தனுக்கு பதவி வழங்கியபோது, கட்சியின் நிறுவனரான ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டு, 'அவனுக்கு அனுபவம் போதாது' என்றார் அன்புமணி. மேலும், மேடையிலேயே, கால்மேல் கால் போட்டுக்கொண்டு, மைக்கை துாக்கி வீசியது, எவ்வளவு கேவலம்? கடந்த, 2004ல் அன்புமணி, பா.ம.க.,வில் சேர்ந்தபோது, இளைஞர் அணி தலைவர், அதைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் என எவ்வளவு பதவிகள் கொடுக்கப்பட்டன? அன்புமணியாகிய நீங்கள் அமைச்சர் ஆகலாம்; என் தம்பி முகுந்தன், கட்சி பதவிக்கு வரக்கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கென்றால் தக்காளி சட்னியா? வரலாற்றில், அப்பாவை எதிர்த்த அவுரங்கசீப்பில் இருந்து அன்புமணி வரைக்கும் பல பேர் இருக்கின்றனர். தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மகன் தான் அவுரங்கசீப். பதவி வெறிக்காக ஷாஜஹானை, சிறையில் அடைத்து சாகடித்தவர் அவுரங்கசீப். பதவி வெறி கண்ணை மறைத்தால், பெத்த தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவார். அவமானப்படுத்த வாய் கூசாது. ராமதாஸ், எனக்கு தாத்தா மட்டுமல்ல, ஹீரோ. அவர் எந்த பதவியிலும் அமரவில்லை. தன் மகனை பதவியில் வைத்து அழகு பார்த்தார். 2026ல் யார் ஹீரோ, யார் ஜீரோ என்பது தெரிந்துவிடும். இவ்வாறு சுகந்தன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
ஜன 01, 2026 00:24

எப்படி இருந்த கட்சி இப்போ இப்படிஆயிடுச்சே பரிதாபம் கிழவருக்கு இன்னுமா அரசியல் ஆசை பணம் இருக்கும்வரை அவர் பாதாளம் செல்வார் குருமாவை மிக்க சந்தோஷப்படுத்திவிட்டார்கள் இவர்களை நம்பி இனி எந்த வன்னியனும் வாக்கு போடவே மாட்டான் ஆளும் கட்சியிடம் பலமுறைகள் வாங்கிய பெட்டி காலாவாதி ஆகும்வரை இந்த சண்டை நாடகம் தொடரும் பிறகு கட்சியே அழிந்துவிடும் அந்தோபரிதாபம்


Santhakumar Srinivasalu
டிச 31, 2025 22:43

மகளை மட்டும் இல்லாமல் பேரனையும் சேர்த்து கிட்டு கட்சியை அழிக்குது. மகள்கள் மற்றும் மகனுக்கு கட்சியை ஏரியா வைஸ் பங்கு பிரிச்சு எழுதிடு


தமிழ்வேள்
டிச 31, 2025 10:49

வரதட்சிணையாக கட்சியையே கேட்கும் மகள், சொத்தை பாதுகாக்க போராடும் மகன் ..இடையே ஒரு திடீர் என்று வெளியே வந்த வசந்தசேனை ......நல்ல கட்சி ..நல்ல குடும்பம் ..வெளங்கிடும் போங்கோ.....வன்னிய சொந்தங்கள் இனி தங்கள் பிள்ளை குட்டிகளை படிக்க வைப்பது நல்லது ...பாவம் ....அப்பாவையும் மகனையும் நம்பி தலைமுறைகள் வேஸ்ட்டாக வெட்டியானது தான் மிச்சம் .....போங்கப்பா ..


Chandru
டிச 31, 2025 10:16

Why this old man is still making this much of noise? Are there still people who are attached to him?


கூத்தாடி வாக்கியம்
டிச 31, 2025 09:55

வயதான ராமதாஸ் ஒதுங்கி இருப்பது நல்லது


ஆசாமி
டிச 31, 2025 09:33

தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத கட்சி. உழைப்பு , ரத்தம் தொண்டனுடையது. காசு , பதவி குடும்பத்தைனுடையது. கேவலம்.


Krishna
டிச 31, 2025 07:09

ARREST All these Goondas.


சமீபத்திய செய்தி