உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் சம்பவம் குறித்து தொடரும் சந்தேகம்: முதல்வருக்கு பா.ஜ. எழுப்பும் 12 கேள்விகள்

கரூர் சம்பவம் குறித்து தொடரும் சந்தேகம்: முதல்வருக்கு பா.ஜ. எழுப்பும் 12 கேள்விகள்

சென்னை: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: பா.ஜ., - எம்.பி.,க்களை கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன், கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுதுமாக கலந்துரையாடி, இந்த பிரச்னையை தெளிவாக புரிந்து கொண்ட பின், மனதில் எழுந்த கேள்விகளை, முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைக்க விரும்புகிறேன். * முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும், கரூர் பஸ் நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்? * விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும், சிலர் கூறினர். இவற்றை தாண்டி கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன? * கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 'லாக் -அப்' மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்? * தி.மு.க.,வினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால், சந்தேகம் அடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவர். கூட்ட நெரிசலுக்கு பின், உண்மையை மறைக்க, தி.மு.க., அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்? * இருபத்தி ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து, நான்கு பேரை கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாக தி.மு.க., அரசு முடக்குகிறது? * பத்தாயிரம் பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக, விஜய் மீது குற்றம் சாட்டும் தி.மு.க., அரசின் காவல் துறை, கூட்டத்தை சரியாக மதிப்பிடாதது ஏன்? * விஜய் தாமதமாக வருவதால், சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று, அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை? * கூட்டத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவு என்பது உறுதி. உண்மையிலே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்ட எஸ்.பி., கரூரில் இல்லாதது ஏன்? * இவ்வளவு குறைபாடுகள் அரசு தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால், அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா? * அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, தி.மு.க.,வின் சட்டம் -ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துக்களை விசாரணை ஆணைய தலைவர் வெளியிடுவது ஏன்? * விசாரணை நடக்கும் நிலையில், அதுகுறித்து பொது அறிக்கைகள் வெளியிட, வருவாய் துறை செயலருக்கு அதிகாரம் அளித்தது யார்; இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா; திறமைமிக்க அரசு அதிகாரிகளை, தி.மு.க., வின் கைப்பாவைகளை போல் பயன்படுத்துவது சரியா? * சிவகங்கை கோவில் காவலாளி அஜித்குமார் 'லாக்-அப்' கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றிய தி.மு.க., அரசு, கரூர் வழக்கை ஒப் படைக்க தயங்குவது ஏன்? தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே, இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையும் இன்றி, சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம். கோரிக்கையை பரிசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பில் நான் முன்வைத்த கேள்விகளுக்கும் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

vbs manian
அக் 03, 2025 09:28

அப்பாவின் அப்பா ஆட்சி காலம் பொற்காலம் என்று சொல்லலாம்.


தலைவன்
அக் 03, 2025 16:43

நாளைக்கு இந்த அப்பா துரையின் ஆட்சி காலத்தையும் பொற்காலம் என்பீர்??


Sun
அக் 02, 2025 22:56

நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ள உங்களுக்கு நன்றாகவே எல்லாம் தெரியும். பாதுகாப்பு குறைபாடுகள், நெருக்கடி இடம் எல்லாம் சரி. இது பற்றிய உங்களது கேள்வியும் சரியே. ஆனால் யாரேனும் கத்தியால் குத்தி விட்டு அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்க முடியுமா? நடந்த சம்பவத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? எதனால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் லேட்டாக வந்தார்? மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். சொன்ன நேரத்தில் சூரியன் இருக்கும் போதே விஜய் வந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்குமா? கட்டுக்கடங்காத தன் ரசிகர்கள் கூட்டம் பசி, தாகத்துடன் இவரைப் பார்க்க முண்டியடிக்கும் போது எந்த தலைவனாவது லைட்டை அணைத்து பின் எரிய விட்டு விளையாடுவானா? உங்கள் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் இப்படித்தான் செய்தார்களா? நாமக்கல் கூட்ட நேரத்தில் சென்னையை விட்டே கிளம்பவில்லை விஜய் இதையெல்லாம் யாருமே கேட்க மாட்டீர்களா? அசம்பாவிதம் நடக்கும் சூழல் உள்ளது. இதில் காவல் துறைக்கு மட்டும்தான் பொறுப்பு வேண்டுமா? கட்சிக் காரர்கள், த.வெ.க தலைவர்கள் யாருக்குமே பொறுப்பு வேண்டாமா? இப்படி ஒரு கட்டுப்பாடற்ற ரசிகர்கள் கூட்டத்தை யாரிடமாவது இது வரை நீங்கள் கண்டதுண்டா? எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த் இவர்கள் ரசிகர்கள் எல்லாம் இப்படித்தான் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தார்களா? அவர்களை சொல்லி தப்பில்லை. அவர்கள் தலைவர் விஜயே இதைத்தான் ரசிக்கிறார். சின்னப் புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது என கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் நடந்துள்ளது. அரசு, காவல் துறை இவர்கள் மீது தவறு உள்ளது போல் விஜய் மீதும் உள்ளது. சொல்லப் போனால் உடனடி தவறு விஜய் மீதுதான். அரசியலில் ஜென்டில்மேனான , பக்குவப்பட்ட நீங்கள் இதையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்பத்தான் முழு உண்மையும் மக்களுக்கு தெரியவரும்.


T.sthivinayagam
அக் 02, 2025 19:34

தமிழக பாஜக தலைவர் அவர்களே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எத்தனையோ மாநாடு பொதுக்கூட்டம் உங்கள் தலைமையில் நடத்திஉள்ளிர்கள் அப்போது எல்லாம் நீங்களும் நிர்வாகிகளும் தொண்டர்கள பொறுப்பாக பார்த்து கொண்டீர்களே, ஆனால் தவெக தலமையும் நிர்வாகிகளும் அவ்வாறாகவா நடந்து கொண்டார்கள்.


தலைவன்
அக் 03, 2025 16:43

நல்ல கேள்வி??


A sagayanathan
அக் 02, 2025 11:37

கரூரில் நடந்த துயர சம்பவம் இரு கட்சிகளும் திமுக மற்றும் த வே கா இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும் இதற்கு சிபிஐ மூலம் விசாரித்து நல்ல முடிவுகளை நேர்மையாக இறந்த அப்பாவி மக்களுக்கு நீதி சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் டாஸ்மாக்கினால் மக்கள் போதைக்கு அடிமையாகி தான் செய்வது என்ன என்று தெரியாமல் பொது மக்களுக்கு பங்கம் விளைவிக்கின்றார்கள் இதை பணம் உள்ளவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆதலால் பொதுமக்கள் நாம் மிகவும் உஷாராக அனைத்து கோணங்கள் ஆராய்ந்து அடுத்த முதல்வர் யார் என்று நாம் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் வெறும் 500 ரூபாய் பணம் கொடுத்து நம்மை ஏமாற்றும் கட்சியினை நம்ப வேண்டாம் எவன் ஒருவன் 500 ரூபாய் கொடுக்கிறானோ அவன் முதல் திருடன் இரண்டாவது அதை வாங்குகிறவன் நாமும் அதற்கு உடமை தான் அதனால் மனசாட்சியாக யாரும் பணம் பெற்றுக் கொள்ளாமல் நேர்மையாக இந்த எலக்சனை நாம் சந்திப்போம்


xyzabc
அக் 02, 2025 10:28

அற்புதமான 12 வினாக்கள். ஆனால் விடை என்னமோ வடையை சுடுவது போல தான் இருக்கும்.


தலைவன்
அக் 03, 2025 16:45

மடத்தனமான கேள்விகள்?? கூட்டத்தை ரத்து செய்தால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?? கட்டுப்பாடற்ற கூட்டத்தை கேள்வி கேட்காமல்...


ஜா அருள்
அக் 02, 2025 09:55

ஆதாரங்கள்/ குற்றச்சாட்டுகள் இருந்தால் விசாரணை கமிஷனரிடம்/ அதிகாரியிடம் அளிக்கலாம். இல்லாமல் கற்பனை கதைகள் கூறினால் அண்ணாமலை மாதிரி ஜோக்கராக மாறலாம்.


ஆரூர் ரங்
அக் 02, 2025 10:24

விசாரணைத் தீர்ப்பை ஏற்கனவே அரசு அதிகாரிகள் குழு ஊடக சந்திப்பில் வெளியிட்டு விட்டது? தப்பித்தவறி இதற்கு மாறான அறிக்கையை முன்னாள் நீதிபதி அளித்தால் என்னாகும்? கருத்துத் திணிப்பில் தீயமுக வை மிஞ்ச முடியுமா?


Haja Kuthubdeen
அக் 02, 2025 14:12

எந்த விசாரணை அதிகாரியிடம்!!!!!!!


பாலாஜி
அக் 02, 2025 08:52

மூடர்கள் கூடாரம் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு வேலை எதுவும் இல்லாமல் இருப்பதால் கற்பனையான அறிவிப்புகளை வெளியிட்டு பொழுது போக்குகிறார்.


Haja Kuthubdeen
அக் 02, 2025 14:15

கற்பனை எல்லாம் இல்லீங்கண்ணா???கரூர் பேருந்து ரவுண்டானா அருகே வேறு யாரும் கூட்டம் சமீபமா போட்டு இருக்காங்களான்னு விசாரிங்கண்ணா...


வரதராஜன்
அக் 02, 2025 08:38

ஐயா சனிக்கிழமை நைட் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் ஒரு மாதிரி பேசுனீங்க இந்த பாஜக அப்புறம் திங்கள் செவ்வாய் புதன்வேற மாதிரி பேசுறீங்க உங்க பொழப்பே நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமோ


vivek
அக் 02, 2025 09:29

இருநூறு ரூபாயா வருதா


T.sthivinayagam
அக் 02, 2025 09:42

இதை தானே அவர்கள் பல வருடங்களாக செய்து கொண்டு வருகிறார்கள்


தலைவன்
அக் 03, 2025 16:46

எல்லாம் மேலிடத்தின் உத்திரவு ??


வரதராஜன்
அக் 02, 2025 08:36

ஐயா கேள்வி கேக்குறதுக்கு ஒரு தகுதி வேணும் உனக்கு என்ன தகுதி இருக்குனு நீரே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவீங்களா என்கிற மாதிரி பேசுறாரு நீங்க 12 கேள்வி கேக்குறீங்க உங்களை திருப்பி கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா பேசாம ஓரமா போய் வேலையை பாருங்க


Haja Kuthubdeen
அக் 02, 2025 14:19

அரசியலுக்கு நேத்து வந்தவன்லாம் கேள்வி கேட்குறான்.30 வருசமா அதிமுகவில் இருந்தவருக்கு அரசியல் தெரியாதா????


M.Sam
அக் 02, 2025 08:28

மிஸ்டர் நை நை உங்க பிளான் ஒர்கவுட் ஆகி விட்டது


புதிய வீடியோ