உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்; பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தல்

சென்னை : ''தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி விவகாரங்களை, மேலிடத் தலைவர்கள் பார்த்து கொள்வர்; தமிழகத்திற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, மத்திய அரசு வழங்கியுள்ளது; ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும். ''இவற்றை ஒவ்வொரு வீட்டிற்கும், தமிழக பா.ஜ.,வினர் எடுத்து செல்ல வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், தமிழக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில், முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக பா.ஜ.,வின், 'சிந்தனை அமர்வு' கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், அக்கரையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தலைமை வகித்தார். இதில், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சட்ட சபை தேர்தலுக்கு தயாராவது; மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது, தி.மு.க.,வின் பிரசாரத்தை முறியடிப்பது, தி.மு.க.,வை தோற்கடிப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:

நாகேந்திரன்: தமிழகத்தை தி.மு.க., தலைகுனிய வைத்துள்ளது. தி.மு.க., ஆட்சியை அகற்ற, கூட்டணி கட்சிகளுடன், பா.ஜ.,வினர் இணைந்து பணியாற்ற வேண்டும். அண்ணாமலை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் பா.ஜ.,வினரும் பங்கேற்கின்றனர். அவரின் பிரசாரத்திற்கு நல்ல கூட்டம் கூடுகிறது. சென்னையில் நடந்த கூட்டத்தில், பழனிசாமி பேசும்போது, 'நான்கு ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியை பா.ஜ., காப்பாற்றியது' என, பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தோஷ்: தேர்தல் பணிகளை 'பூத் கமிட்டியில்' இருந்து, அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும். இவற்றை ஒவ்வொரு வீடு வீடாக சென்று, மக்களிடம் கூற வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி விவகாரங்களை மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வர். அதில் கட்சியினர் கவனம் செ லுத்த வேண்டாம். இவ்வாறு, அவர்கள் பேசினர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகளில் பலர், 'கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரனை இணைக்க வேண்டும்; புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். ஒரு நிர்வாகி, 'விஜய்க்கு கூட்டம் அதிகம் வருகிறது. 'இது, தி.மு.க., மட்டுமின்றி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஓட்டுக்களை பாதிக்கும்' எனப் பேச, நடிகர் சரத்குமார் குறுக்கிட்டு, 'கூட்டம் கூடுவது எல்லாம் ஓட்டுகளாக மாறாது' என தெரிவித்ததாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். சந்தோஷ் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் மூத்த தலைவர்களான நாகேந்திரன், எச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமாதானமான அண்ணாமலை சமீப காலமாக, கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தவிர்த்து வந்தார். நேற்றைய கூட்டத்திற்கும், அவர் வராமல் இருக்க திட்டமிட்டுள்ளதை, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தெரிந்து கொண்டார். இதையடுத்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். ஒரு மணி நேரம் வரை நீடித்த சந்திப்பின்போது, 'மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி, ஐந்து மாதங்களாகியும், கட்சியில் வேறு பதவிகள் வழங்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள சிலர், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆதரவாளர்கள் வாயிலாக, சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்து கருத்துக்களை பதிவிடுகின்றனர்' என, அண்ணாமலை தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அதற்கு சந்தோஷ், 'மேலிடத் தலைவர்களிடம் பேசி உரிய தீர்வு காணப்படும்; கூட்டத்தில் பங்கேற்கவும்' என, கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை, பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராஜா
செப் 18, 2025 02:50

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஏ டி எம் ல் உயிரிழந்த தியாகம் செய்த நாட்டு மக்களை நினைத்து கண்ணீர் வருகிறது


kamal 00
செப் 18, 2025 08:13

கள்ள சாராயம் குடித்து இறந்த போது


pakalavan
செப் 17, 2025 12:13

எ எ எ என்னத்த சொல்ல ? எதையாச்சும் சொல்லுங்க


Venugopal S
செப் 17, 2025 11:13

தமிழகத்துக்கு கொடுத்ததை விட ....


palanichamy
செப் 17, 2025 10:58

அப்படி ஒன்னும் தெரியல.


மாபாதகன்
செப் 17, 2025 16:43

அதுலே ஒன்னும் இல்ல?? கிழிச்சு போட்ருங்க???


அப்பாவி
செப் 17, 2025 10:05

கருப்பு பணம் கொண்டு வந்தாக.பாஞ்சி லட்சம் போட்டாக. ரெண்டு கோடி வேலை குடுத்தாக. எல்லோருக்கும் வூடு குடுத்தாக.அண்ணாமலைய கவுத்தாக. நல்ல டியூன் போட்டு பாடவும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 17, 2025 09:18

வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க? ஏதாவது இருந்தாத் தானே?


Arul Narayanan
செப் 17, 2025 08:37

தமிழ்நாட்டில் பாஜக இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் மத்திய நிதியமைச்சருக்கு வேறு முதலமைச்சர் கனவு.


sankar
செப் 17, 2025 08:11

என்னத்த சொல்ல. எட் அனுப்பி விட்டு திமுக மேல் நடவடிக்கை தூக்காமல் இருப்பதாய் சொல்லவா திமுக எம்பீ தேவை என்பதற்காக இல்லை எடபாடியை கெஞ்சி கொண்டிருக்கும் சாதனையை சொல்லவா. எடபாடிக்காக அண்ணாமலையை ஓரங்கட்டிய சாதனையை சொல்லவா. செங்கோட்டையனை பயன் படுத்த விட்டு கழட்டிவிட்டு சாதனையை சொல்லவா. துப்படியின் காதடியாக செயல் படும் நாயனாரின் சாணக்யத்தை சொல்லவா ராமலிங்கம் என்ற உளறுவாயனை வைத்து திட்டிய சாதனையை சொல்லவா. எதை சொல்ல


pmsamy
செப் 17, 2025 07:52

அப்படின்னா ஒன்றிய அரசு திட்டங்கள் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்களா இதுவரைக்கும்? திருட்டுப் பசங்க


naga
செப் 17, 2025 06:10

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் திராவிடக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள் ஆதரவாளர்களுக்கு தான் முதலில் சென்றடைகின்றன என்பதை நாட்டின் உயரிய பாஜ தலைவர்கள் அறிவார்களா என்பது யாமறியேன் பராபரமே... என்ற நிலையில் தான் உள்ளது. அந்த வகையில் தான் தி. பா. ஜ. க., இயங்கி வருகிறது என்பது தான் யதார்த்தம். ‌