உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம்: ரயில்வே அமைச்சர் தகவல்

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம்: ரயில்வே அமைச்சர் தகவல்

சென்னை: “துாத்துக்குடி -- மதுரை புதிய ரயில் திட்டம் வேண்டாம் எனக் கூறி, தமிழக அரசிடம் இருந்து, எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. எனவே, அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது,” என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 'அம்ரித் பாரத் 2.0' படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி ரயில் பெட்டிகளையும், சுற்றுலா பயணியருக்கான பிரத்யேக பெட்டிகளையும் நேற்று, அவர் ஆய்வு செய்தார்.நல்ல வரவேற்புபின்னர், அவர் அளித்த பேட்டி:நாடு முழுதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏழை, எளிய மக்களும், 'வந்தே பாரத்' ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, குறைந்த கட்டணத்தில், 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.'அம்ரித் பாரத் 1.0' திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் கிடைத்த அனுபவத்தின்படி, தற்போது, 'அம்ரித் பாரத் 2.0' திட்டத்தின் கீழ், வந்தே பாரத் ரயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.நீண்ட துார பயணியர் வசதிக்காக, இருக்கைகளில் அதிக தடிமனான குஷன்கள், பயணியரின் உடைமைகளை வைப்பதற்காக, அலுமினியத்தால் செய்யப்பட்ட அறைகள், பயணத்தின்போது அதிர்வு கள் ஏற்படாமல் இருக்க நவீன தானியங்கி 'கப்ளர்' கள், 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாஷ்பேசின்'கள், ஆபத்து ஏற்படும்போது பயணியர், ரயில் கார்டுடன் பேசுவதற்கான வசதி உள்ளிட்ட 12 வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 அம்ரித் ரயில்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.துாத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு, புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இத்திட்டம் வேண்டாம் எனக்கூறி, தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. அதனால், இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுள்ளது.ரயில்வே துறை சார்பில், தமிழகத்துக்கு செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமை யாக நிறைவு பெற்று, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்துள்ளன.விரைவில் அந்த பாலம் திறந்து வைக்கப்படும். ஜம்மு -- காஷ்மீர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த பின்னர், அங்கு ரயில் இயக்கப்படும்.விபத்து தவிர்ப்புரயில் விபத்தை தடுக்கும், 'கவச்' கருவிகள் இதுவரை, 10,000 ரயில் இன்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை, கும்மிடிப்பூண்டி அருகே பாயின்ட் கருவியில் இருந்து போல்ட் கழற்றப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது.மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பதற்காக, தற்போது புதிய வடிவமைப்பில் இத்தகைய போல்ட்கள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன; யாராலும் அகற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில், ரயில் சக்கரங்கள் தயாரிப்பு பணிகளை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ray
ஜன 12, 2025 12:58

ரயில் அதை வேண்டாம்னு ஒண்ண ஒடனே திட்டத்தை கைவிட்டுட்டாங்களாம் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து வீதிக்கு வந்து இத்தனை நான் போராட்டம் நடத்தினாலும் சட்ட சபையில் தீர்மானம் போட்டாலும் தர்க்காலித்தனமாத்தான் நிறுத்தி வைப்பார்களாம் அண்ணாமலையும் டில்லி போயி துறை மந்திரியை பார்த்து ஒப்பாரி வைத்துவிட்டுதான் வந்தார் யார் என்ன கதறினாலும் ஸ்டெர்லைட் காரனை ஏனோ கழட்டிவிடமாட்டேங்கறா என்ன காரணம்னு உள்ளூர் சங்கிகள்தான் விளக்கணும்


Ray
ஜன 11, 2025 21:13

மதுரை - தூத்துக்குடி புதிய ரெயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை, மத்திய ரெயில்வே மந்திரி 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி வழி அருப்புக் கோட்டை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர மத்திய ரெயில்வே மந்திரியைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மந்திரியே பொறுப்பற்ற முறையில் பேசலாமா?


Chinnamanibalan
ஜன 11, 2025 19:07

தென் மாவட்டங்களின் தொழில் முன்னேற்றத்தில் அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தூத்துக்குடி மதுரை இடையிலான இந்த புதிய ரயில்பாதை திட்டத்தை கைவிடாது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லாத இந்த வறட்சி பகுதிக்கு, வராது வந்த மாமணி போல் வந்த தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.


subramanian
ஜன 11, 2025 15:15

ஓரவஞ்சனை பாவி திமுக மண்ணாக போகட்டும்


பாலாஜி
ஜன 11, 2025 13:36

சூப்பர் திராவிடியல் மாடல் அரசு


முருகன்
ஜன 11, 2025 12:35

புயல் மழை வெள்ள நிதி கேட்டால் இல்லை என்பது இப்போது மட்டும் தமிழக அரசு சொல்வதை கேட்பது ஏன்


தமிழ்வேள்
ஜன 11, 2025 13:53

நில எடுப்பு செய்து தருவது மாநில அரசின் வேலை ..அதற்கான பணம் மட்டுமே மத்திய அரசு கொடுக்கும் ....நில எடுப்புக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை ....மாறாக தனது அல்லக்கை பஞ்சாயத்து தலைவர்களை விட்டு , இழப்பீடு போதாது , இது குறை , அது கோளாறு என்று கோர்ட்டில் கேஸ் போடவைக்கும் ..போதாக்குறைக்கு தனியார் /ஆம்னி பஸ் ஓனர்கள் ரயில் பாதைகளை விரும்புவது இல்லை..அவர்கள் வருமானம் குறையும் என்கிறார்கள் ...ஈரோடு -பழனி ரயில் பாதை , வேலூர் கண்டோன்மெண்ட் -சென்னை சென்ட்ரல் இ எம் யு இயக்கம் என்று அனைத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதும் இவர்களே ....சென்னை -திருவண்ணாமலை பவுர்ணமி ஸ்பெஷல் ரயில்களை இயக்கவேண்டாம் ..அரசு போக்குவரத்து வருமானம் பாதிக்கும் என்று சொல்லி முறையிட்டது மாநில அரசு ...காரணம் ரயிலில் டிக்கெட் 60 ரூபாய் , பஸ்ஸில் சுமார் 350 ரூபாய்கள் ...இந்த கொடுமையை எங்கே சென்று முறையிட ?


Anonymous
ஜன 11, 2025 15:31

₹4000 கோடிக்கு கணக்கு சொல்லுங்க அப்பு, நிதிய குடுத்தா, எல்லாம் கருணாநிதி குடும்பத்துக்கு போகுது.


veera
ஜன 11, 2025 16:28

முருகா....அது உன் கொத்தடிமை கும்பல் ஆட்டைய போட ........இது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு....புரிஞ்சுதா


Ray
ஜன 12, 2025 07:37

தென்னக ரயில்வே பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்காமல் தவிர்ப்பதும் ஆம்னி பேருந்துகளின் அழுத்தம் தான் காரணமோ? இது உலகறிந்த ரகசியம்தான் இருந்தாலும் அதை கூச்சமின்றி தமிழவேள் விளக்குவாரா?


Prasanna Krishnan R
ஜன 11, 2025 12:14

திட்டத்தை முடிவு செய்ய யார் இந்த திமுக? மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.


Subburamu K
ஜன 11, 2025 11:52

Long live Kanimozhi akka. Aruppukottai, vilathikulam. makkal are highly privileged. Close all the industries within the Tuticorin MP area


தமிழ்வேள்
ஜன 11, 2025 11:13

மிகவும் பின்தங்கிய விளாத்திகுளம் அருப்புக்கோட்டை பெல்ட் முன்னேறிவிட்டால் , திருட்டு திராவிடத்துக்கு கலவரம் கொள்ளை கூலிக்கு கொலை செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் , பரம்பரை அடிமைகளை மெயின்டைன் செய்ய , ஒரு ரயில்திட்டம் வேண்டாம் என்று சொல்கிறது திமுக ..ரயில் திட்டம் வேண்டாம் என சொல்லும் ஒரே மாநிலம் திருட்டு திராவிட டுமீளகம் மட்டுமே ...இனியாவது தமிழர்கள் திராவிட பித்தலாட்டவாதிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் ...


surya krishna
ஜன 11, 2025 08:59

tamilagatthukku throgham DMK


சமீபத்திய செய்தி