உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும்?

டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு உள்ளது. சென்னையில் இருந்து குழாய் வழியாக, பெட்ரோல், டீசல் இங்கு அனுப்பப்படுகிறது. இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம், தஞ்சை, திருச்சி, நாகை, சிவகங்கை உள்ளிட்ட, 10 மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்குகளுக்கு, 300க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில், வாழவந்தான்கோட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கின் டேங்கர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், நேற்று காலை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது:கிடங்கில் இருந்து லோடு எடுக்க, ஐ.ஓ.சி.எல்., அடையாள அட்டையை வைத்துள்ள அனைத்து லாரிகளையும் அனுமதிக்க வேண்டும். டீலர்களின் வண்டிகள் காலையில் லோடு பிடிக்கவும், மதிய உணவு இடைவெளி இல்லாமல் லோடு பிடிக்கவும் அனுமதிக்க வேண்டும். மொழி தெரியாதவர்கள் பணியில் இருப்பதால், டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்களை அவமரியாதை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.டேங்கர் லாரிகள் போராட்டத்தால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடுஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், டிரைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sakthi,sivagangai
நவ 29, 2024 08:44

மொழி.தெரியாதவர்கள் பணியில் இருப்பதால் என்ற இந்த ஒரு வார்த்தை பத்தாதா உடனே இங்குள்ள திராவிடனுங்க இந்தி மொழி திணிப்பு, வடக்கன் ஆதிக்கம் என்று அறச்சீற்றத்துடன் உடனே கிளம்பி வருவாய்ங்க பாருங்க! யார் மொதல்ல வர்றானுகன்னு பார்ப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை