உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரூ.20,400 கோடி திட்டத்திற்கு டெண்டர்

கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரூ.20,400 கோடி திட்டத்திற்கு டெண்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் அனைத்தும், வரும் 2028ம் ஆண்டிற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார் 50 கி.மீ., துாரம், கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., மற்றும் சிறுசேரி - கிளாம்பாக்கத்திற்கு கேளம்பாக்கம் வழியாக 26 கி.மீ., என, 93 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, கடந்த மாதம் 5ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, ஆவடி - கோயம்பேடு, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - பரந்துார், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 'டெண்டர்' வெளியிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் தடத்தில் தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் வரையில், பயணியர் நெரிசல் அதிகமாக இருக்கும்.பரந்துார் விமான நிலையம் அமையும் போது, மேலும் இந்த தடத்தில் கூட்டம் அதிகரிக்கும். இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.இதேபோல், அதிக நெரிசல்மிக்க வழித்தடமாக இருக்கும் கோயம்பேடு - ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை, விரைவில் துவங்க உள்ளோம்.இந்த அறிக்கையை, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில், அரசிடம் அளிக்க உள்ளோம். தோராயமாக கோயம்பேடு - ஆவடி திட்டத்திற்கு 6,400 கோடி ரூபாய், பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோவுக்கு 14,000 கோடி ரூபாய் ஆகும் என, திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளோம்.விரிவான திட்ட அறிக்கையில் மேம்பால பாதை, சுரங்கப்பாதை வழித்தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெறும்.இதற்கான ஒப்புதலை பெற்ற பிறகே, மெட்ரோ திட்டத்திற்கான கட்டுமான பணிகளை துவங்குவோம்.துவக்கிய நான்கு ஆண்டுகளில், பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள்

பூந்தமல்லி - பரந்துார் வழித்தடம்நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, பென்னலுார், ஸ்ரீபெரும்புதுார், சிப்காட், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம்கோயம்பேடு - ஆவடி வழித்தடம்பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட்ஸ், வாவின், அம்பத்துார் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ், டன்லப், அம்பத்துார் ரயில் நிலையம், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம், ஸ்டெட்போர்டு மருத்துவமனை திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nathan
பிப் 22, 2024 22:55

பேருந்து செல்லும் வழியில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செல்லும் என திட்டமிடுவது கொடூரம்


vnatarajan
பிப் 22, 2024 16:58

சிறுசேரி கிளாம்பாக்கம் திட்டம் என்னாச்சு.


Sri
பிப் 22, 2024 13:53

மெட்ரோ இரயில் முதல்கட்ட. phase 1 மட்டுமே மத்திய அரசு 50% கொடுத்து அனைத்து மாநில அரசுகளையும் ஊக்குவிக்கிறது. டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதாலும் யூனியன் பிரதேசம் என்பதால மெட்ரோ ரயில் அனைத்து கட்டங்களுக்கும் நிதி தரப்படுகிறது. வேறு எந்த மாநிலத்துக்கும் இரண்டாவது கட்டம் அடுத்த லெவல் அவர்களே நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும்..அதற்கு நிதி மேலாண்மை நிர்வாக திறன் இருக்க வேண்டும்...திராவிட மாடல் பொய்யை தவிர வேறு எதுவுமில்லை..


பாமரன்
பிப் 22, 2024 15:02

திரும்ப திரும்ப சொன்னால் ஒரு பொய் உண்மை ஆகிவிடாது ???? நம்ம கம்பெனி ஆட்சியில் இருந்த பெங்களூர் மெட்ரோ வருடாந்திர ரிப்போர்ட் படித்து பாருங்கள்... இன்னமும் மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் ஃபைனான்ஸ் செய்து வருவது புரியும்...


rama adhavan
பிப் 22, 2024 11:00

திட்ட அறிக்கை, வழித்தடம், செலவு, நில எடுப்பு, PAP Consultation, tender finalisation, funding arrangement, வழக்கு எல்லாம் முடிக்கவே 2 -3 ஆண்டு ஆகும். கட்டுமானம் 7 ஆண்டுகள் ஆகும். எனவே 2035இல் எதிர் பார்க்கலாம்.


M Ramachandran
பிப் 22, 2024 09:42

அப்போ கிளாம்பாக்கம் அம்போவா? தென்னக மக்கள் சென்னைக்கு வர அஞ்சுவர். இனி விடியலை நம்பி பிரயோகஜனமில்லை. ரயில்வே அமைச்சரின் காலில் விழுந்தாவது தற்போதய ரயில் தடத்தை மேண்மையாக்கி பல ரயில் வண்டி இயக்குமாறு கேட்டு கொள்ளவேண்டும். முடிந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஒரு லூப் லணை போர்த்து இணைக்க சொல்ல வேண்டும். அதுவெ மக்களுக்கு சிறந்தது. இரு திராவிட கட்சிகள் ஆட்சியில் ரயில்வே சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதாவது மத்திய ரயில் அமைச்சர்களிடம் கோலாரிக்காய்ய்ய வைப்பதில்லை. MGR. முதலமைச்சராகா இருந்த சமயம் ரயில்வே அமைச்சர் சென்னைக்காக கொடுத்த திட்டதை அவருக்கு கொடுத்தா உறுதி மொழி (fallowup) செய்யாமல் விட்டு விட்டார். ஜெயலலிதா அவர்க லோ அவர்கள் காலத்தில் தமிழக திட்ட தேவை மனு வாக ரேஸில் வேராய் துறையை அமைச்சகத்திற்கு ணைப்பதால் பிரதம மந்திரிக்கு அனுப்ப அதாஉ அந்த காலத்தில் குப்பைய்ய தொட்டிற்க்கு போய் சேர்ந்தது. mu. கருணாநிதி தமிழகத் திட்டங்களுக்கு முன்னுற்றுமைய்ய த்தராமால் சொந்த குடுப நண்மை க்காக வீரத்தைய்ய காட்டிக்கொண்டு இருந்து விட்டார். இப்பட்டி நம் அரசுகள் ஏமாற்றி கொண்டிருக்கிறது. நம் விதியாய்ய்ய நொந்தது கொள்ள வேண்டியது தான்.


Sri
பிப் 22, 2024 09:02

மெட்ரோ ரயில் 2 மகா லேட்.. 2015-16 கட்டுமான இடங்கள் முழுமையாக ஆர்ஜிதம் செய்யவில்லை.மாதவரம் கோயம்பேடு மார்க்கம் இன்னமும் சரியாக திட்டமிடவில்லை.சாந்தி காலனி கோயம்பேடு வலது மார்க்க திருப்பு பாலத்தாலும் சிந்து குடியிருப்பாலும் பெரிய தடைக்கல்லாக உள்ளது. சிந்து ப்ளாட்ஸ் ஆர்ஜிதபடுத்தாமல் மெட்ரோரயில் திட்டம் முட்டு சந்தில் செல்வது போல் உள்ளது.ஹைதராபாத் மெட்ரோ பிளானிங் நமது அதிகாரிகள் பார்க்க வேண்டும் இரு வழி பாதை முறையில் திட்டமிடப் பட்டுள்ளது. இங்கு ஒரு வழி பாதை குறுகலாக 10 வருடங்கள் பிறகு என்ன செய்யவேண்டும் நினைப்பே இல்லாமல் செயல் படுத்துகிறார்கள். திரு சோமநாதன் 2010-14 காலகட்டத்தில் Phase 1 திறம்பட செயல்படுத்தினார். தமிழகம் போடும் எல்லா மெட்ரோ திட்டத்திற்கும் phase 1 தவிர நிதி இவர்கள்தான் உருவாக்க வேண்டும் மத்திய அரசு முதல் phase மட்டுமே அனைத்து அரசுகளுக்கும் தந்துள்ளது இதனை MHUA வலைதளத்தில் உறுதிசெய்து கொள்ளலாம்


Ramesh Sargam
பிப் 22, 2024 08:16

ஒரு பத்து வருடத்திற்கு முன்பு நிறைவேற்றவேண்டிய திட்டங்கள், இப்பொழுது...


duruvasar
பிப் 22, 2024 06:49

பள பளா, உலகம் எங்கும் சுற்றுவேன். களைப்புக்கு ஹார்லிக்ஸ் பருகுவதன் .இந்த விளம்பர படம்தான் நினைவுக்கு வருகிறது.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி