வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னது? பாதை போடக் கூடாதா?அப்புறம் எப்புடி கண்டவனுக்கும் கார், பைக் வித்து சுற்றுலா போங்கன்னு சொல்றது?
ஈரோடு : குன்றுகளை அழித்து சாலைகள் அமைக்கப்படுவதுடன், வாகன போக்குவரத்தால் இயற்கையுடன் பறவைகள் உட்பட உயிரினங்கள் பாதிக்கின்றன.மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்காகவே பூமி படைக்கப்பட்டுள்ளது. பூமியின் ஒவ்வொரு அமைப்பும், இயற்கை சங்கிலியால் இணைந்துள்ளன. இனப்பெருக்கம்
அவற்றில், இயற்கை, சில உயிரினங்கள், வளங்கள் அழிந்தால், இயற்கை சங்கிலி அறுபடுவதுடன், பேரிடருடன், அனைத்து வகை உயிரினங்களும் அழியும் அல்லது இடம் பெயரும்.சமீபமாக மனிதர்களால் உருவாக்க இயலாத மலைகள், குன்றுகளை, கற்களின் தேவை, கட்டுமானம், சுற்றுலா, இறைவழிபாடு என பல காரணங்களுக்காக சிதைத்தும், அழித்தும், பாதைகள் அமைத்து போ12க்குவரத்து வசதி செய்கின்றனர்.உதாரணமாக ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே நாகமலை, எழுமாத்துார் குன்றுகளில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல படிக்கட்டு வசதி உள்ளது. இருந்தும் மலை மேல் உள்ள கோவில் வரை வாகனங்கள் செல்ல, மலை, குன்றை உடைத்தும், அழித்தும், தார்ச்சாலை, விளக்குகள், கட்டுமானங்களை செய்வதால் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.அதேபோல சென்னிமலை, சிவன்மலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை என பல உதாரணங்கள் உள்ளன.இவைபற்றி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கூறியதாவது: ஈரோடு மாவட்ட குன்றுகள், மலைகளில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக நாகமலையில் கடந்தாண்டு நடத்திய கணக்கெடுப்பில், 126 வகை பறவைகள், 138 வகை தாவர இனங்கள், 102 பூச்சிகள், 19 எட்டுக்காலிகள், 14 ஊர்வன இனங்கள், 10 பாலுாட்டிகள் என, 413 உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் சில உயிரினங்கள், ஈரோடு மாவட்டத்தில் அரிதானவையாகவும், இங்கு மட்டுமே உள்ளவையாகவும் வாழ்கின்றன.பறவைகளின் உணவு சங்கிலியில் உயரத்தில் இருக்கும் இறை கொல்லி பறவைகளான ராஜாளி கழுகு, கொம்பன் ஆந்தை போன்றவை, பல ஆண்டாக இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. சிறிய தவிட்டு புறா, கரிச்சான், சில்லை, தேன்சிட்டு, சிலம்பன், குக்குறுவான், சின்னான், மாம்பழச்சிட்டு என, 35க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளும் இம்மலையில் பெருகுகின்றன. இயற்கை பாதை
சாம்பல் கழுத்து காட்டு சில்லை, சாம்பல் கீச்சான், மரநெட்டைக்காலி, பழுப்பு மார்பு பூச்சி பிடிப்பான் என அரிய வலசைக்கு வரும் பறவைகள், நீல பூங்குருவி, வெண்தோள் கழுகு, கருந்திலை குயில் சீச்சான், தோட்டக்கள்ளன், நாணல் கதிர்குருவிகள், சூறைக்குருவி என மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை பறவை, 32 இனங்கள் நாகமலையை வாழ்விடமாக கொண்டுள்ளன.இங்கு சுனை நீர்த்தேக்கம் உள்ளது. இத்தகைய உயிரின வாழ்விடத்தை சிதைக்க மலை அடிவாரம் முதல் உச்சி வரை, காடு, மலை, பாறைகளை உடைத்து மண் சாலை, சில இடங்களில் தார், செங்கற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் வாகன நிறுத்துமிடத்தின் அருகே சுனை நீர்த்தேக்கம் உள்ளதால், விரைவில் சுனை பாதிக்கும். இங்கு சாலை அமைத்து போக்குவரத்து அதிகரிக்கும்போது, பல பல்லுயிரினங்கள், அதன் வாழ்விடம் அழியும்.அதே போல, எழுமாத்துார் மலை முருகன் கோவில் பகுதியிலும், 46 வகை பறவைகள், 50 வகை பூச்சிகள் உட்பட பல உயிரினங்கள் வாழ்கின்றன. சித்தோடு அருகே ஆண்டவர் மலைக்குன்றுக்கும் அதே நிலை தான் உள்ளது. எனவே, மலைக்குன்றுகளை அழிப்பதும், பாதைகள், தார் சாலை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை பாதையில் மக்கள் நடந்து செல்ல பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
என்னது? பாதை போடக் கூடாதா?அப்புறம் எப்புடி கண்டவனுக்கும் கார், பைக் வித்து சுற்றுலா போங்கன்னு சொல்றது?