உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கல்லா கட்டும் கவுன்சிலரின் கணவர்... நல்லா கை நீட்டும் அலுவலர்!

கல்லா கட்டும் கவுன்சிலரின் கணவர்... நல்லா கை நீட்டும் அலுவலர்!

நவராத்திரி நெருங்கியதால், சித்ராவும், மித்ராவும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலு பொம்மை, அலங்கார தோரணங்கள், பூஜை பொருட்களை வாங்க, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புறப்பட்டவாறே, அரட்டையை துவங்கினர்.

வருவாய்க்கு 'வருவாய்'

இடம்: தாராபுரம்பொருள்: மண் கடத்தல்ஏவல்: வருவாய்த்துறை''மித்து உனக்கு விஷயம் தெரியுமா, தாராபுரம் ரவுண்டானா பகுதியில், மண் லோடு லாரிகளை பொதுமக்கள் சிறைப் பிடித்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். வருவாய்த்துறைக்கு தகவல் சொல்லியும் கூட யாரும் வரவில்லையாம். நீண்ட நேரம் போராடி, சலித்துப் போன மக்கள் மறியலில் ஈடுபட்டனர். உடனே வந்த போலீசார் சமரசம் பேசி லாரிகளை அனுப்பி வைத்தனராம்...''''ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் மண் கடத்தல் நடப்பது அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும் கூட, 'கவனிப்பு' பலமாக இருப்பதால் கண்டுகொள்வதில்லை. இதில், கொடுமை என்னன்னா, அடியாட்கள் கூட்டம், மறியல் செய்த பொதுமக்களை அடையாளம் கண்டு பிடித்து மிரட்ட நாள் முழுவதும் சுற்றித்திரிந்தனராம்,''

ஒரே இடத்தில நாலு எதற்கு?

இடம்: 3வது வார்டு சக்தி நகர்பொருள்: தெரு விளக்குஏவல்: மாநகராட்சி''சித்ராக்கா... கார்ப்பரேஷன், 3வது வார்டு சக்தி நகரில், விநாயகர் கோவில், ரேஷன் கடை இருக்கும் வீதியில் ஒரேயோரு ஸ்ட்ரீட் லைட் தான் உள்ளது. இது ஒரு மாதமாக எரியாமல் உள்ளதாக, அப்பகுதியினர் புகார் கொடுத்தனர். அதே சக்தி நகர் பகுதியில், ஒரு வீதியில் மும்முனை சந்திப்பு ரோட்டில், ஒரே நாளில், 4 லைட் போட்டாங்களாம்க்கா...''''இதனை பார்த்த அப்பகுதி மக்கள், இருப்பவருக்கு ஒரு நியாயம், இல்லாத வருக்கு ஒரு நியாயமா என வார்டு கவுன்சிலரை வறுத்தெடுத்து விட்டனராம்...''

'ஆபீசரின் ஓசி பயணம்'

இடம்: ஊரக வளர்ச்சிப்பிரிவுபொருள்: ஆபீஸ் ஜீப்ஏவல்: டி.ஆர்.டி.ஏ.,''மித்து இந்த கொடுமையை கேளு. கலெக்டர் ஆபீசில், டி.ஆர்.டி.ஏ.,வில் (1)ணிபுரியும் அதிகாரி ஒருவர் உடு மலையி(5) உள்ள தன் வீட்டுக்கு ஆபீஸ் ஜீப்பில், த(3)யாகத்தான் போறாராம். இதற்கு ஆபீஸ் கணக்கில் தான் டீசல் போடறாங்க. மற்றொரு ஆபீசர், இந்த வண்டி இல்லாத காரணத்தால், அலுவலக பணிக்கு ஒன்றியத்தில் உள்ள ஜீப்பை கொண்டு வந்து பயன்படுத்துகிறார். அதற்கு வாரந்தோறும் வெவ்(4)று ஒன்றியத்தில் இருந்து டிரைவருடன் ஜீப்பை அனுப்பி வைக்க வேண்டுமாம். இவங்க மக்களுக்கு சேவை செய்யும் அ(2)கை பாத்தியா...?''

கவுன்சிலர் யாருங்க? சொல்லுங்க!

இடம்: சாய்பாபா கோவில் வீதிபொருள்: அடாவடி வசூல்ஏவல்: டி.ஆர்.டி.ஏ.,''அக்கா, கார்ப்பரேஷன், 13வது வார்டு பகுதியில், சாமிநாதபுரம், சாய்பாபா கோவில் வீதியில் டெய்லி ஈவ்னிங், ரோட்டுக்கு (3)ன்னாடி, (4)டைகளை சில வியாபாரிகள் போடறாங்க. குறிப்பாக, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிகமான கடைகள் போடறாங்களா(5). அப்படி போடற ஒரு கடைக்கு, நுாறு ரூபா, (1)ங்கடமே இல்லாம, 'மாமூல்' வே(2)டும் என கேட்டு வாங்குறாராம், வார்டு பிரமுகரின் வீட்டுக்காரர். அதனால, வார்டுல அவருக்கு 'வசூல்ராஜா'ன்னு பேரே வச்சுட்டாங்களாம்...'' சொல்லி விட்டு சிரித்தாள் மித்ரா.

இப்படி அலைக்கழிக்கலாமா?

இடம்: காங்கயம்பொருள்: பரிசளிப்புஏவல்: எஸ்.டி.ஏ.டி.,''போன வாரம், காங்கயத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பங்கேற்ற மினிஸ்டர், முதல்வர் கோப்பைக்கான போட்டியில், ஜெயித்தவர்களுக்கு பரிசு வழங்கினார். அதேநாள் சாயந்திரம், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் மறுபடியும் சிலருக்கு பரிசு கொடுத்தாங்க. மீதமுள்ளவர்களுக்கு இந்த வாரம் கொடுக்கிறாங்களாம்.உச்சகட்ட கொடுமை என்னன்னா, பரிசு வாங்க மாற்றுத்திறனாளிகள் வந்துட்டாங்க. 'இப்ப உங்களுக்கு கொடுக்கல. மறுபடியும் கூப்பிடுறோம். அப்ப வாங்கன்னு, திருப்பி அனுப்பிட்டாங்க. 'போட்டியில கூட ஜெயிச்சிட்டோம். பரிசு வாங்கறதில ஜெயிக்க முடியாது போலிருக்கு'னு நொந்துட்டு, திரும்பி போய்ட்டாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''பாவங்க்கா அவங்க...'' என அங்கலாய்த்தாள் மித்ரா.

'சரண்டரான' அதிகாரி

இடம்: பொடாரம்பாளையம்பொருள்: நில உரிமை சான்றுஏவல்: கிராம அதிகாரி''அக்கா.... பெருமாநல்லுாரை சேர்ந்த முன்னாள் விஐபி ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு நில உரிமை சான்று வாங்க, கிராம (1)திகாரியை அணுகினார். அதற்கு, 'ரெண்டு லட்சம் கொடுத்தால் தருகிறேன்,' என்று சொல்ல, பேர(2) பேசி, ஒரு லட்சம் வாங்கிட்டு கொடுத்தாராம்,''''அப்புறம், அதே நிலத்துக்கு வரைபடம் கேட்டதற்கு, 50 ஆயிரம் (4)ண்டும். அப்ப தான் காரியம் நடக்கும்,'னு கறாரா சொல்லிட்டார். பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன, விஐபி, ஒரு அ(5) சேர்த்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தட்டிட்டார். அது (3)ம்பந்தமாக அறிக்கை அளிக்க ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவு வந்துள்ளது. இது தெரிஞ்சு அதிர்ச்சியான அதிகாரி தரப்பிலிருந்து, புகார்தாரருக்கு வெள்ளைக்கொடி காட்ட முயற்சி நடக்குதாம்...'' மித்ரா சொன்னதும், ''பட்டாதான்டி புத்தி வரும்,'' சொன்னாள் சித்ரா.

இதிலுமா 'கூட்டணி' போடுவாங்க!

இடம்: வடக்கு தாலுகா ஆபீஸ்பொருள்: மனு எழுதி தருதல்ஏவல்: 'டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்'''வடக்கு தாலுகா ஆபீஸ் வெளி வளாகத்தில் மனு எழுதித் தரும் நபர்கள் போர்வையில் சில புரோக்கர்ஸ், ஆபீசர்களை கைக்குள் போட்டு கொண்டு, 'கப்பம்' கட்டி ஆயிரக்கணக்கில் மக்களிடம், மனுதாரர்களிடம் வசூலிக்கின்றனர். இதில், தொகை கமிஷனாக வந்து விடுகிறதாம்...''''இந்த புரோக்கர்களுடன் இப்போது, புதிய கூட்டணி ஒன்று உருவாகி விட்டதாம். சில 'டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்' சான்று கேட்டு வரும் மக்களை, இந்த புரோக்கர்ஸ்கிட்ட கூட்டிட்டு போய், 'கமிஷன்' கச்சிதமாக வாங்கிக்கறாங்க. இந்த 'கேங்' பத்தி, பல முறை புகார் கூறியும், போலி சான்றிதழ் விவகாரம் வெளிவந்து வில்லங்கம் ஆகி விடும்னு ஆபீசர்ஸ் 'கப்சிப்'னு இருக்கின்றனர் என, விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினர்,'' என மித்ரா விளக்கினாள்.

'பேரு தான் பெத்த பேரு'

இடம்: 24வது வார்டு, அன்னை நகர்பொருள்: நடுரோட்டில் சுவர்ஏவல்: ஆளுங்கட்சியினர்''மித்து, கார்ப்பரேஷன், 24வது வார்டு ஏ.பி., நகர் - அன்னை கார்டனில் இருந்து அடுத்த வீதிக்கு செல்லும் பாதையை சிலர் சுவர் கட்டி அடைத்து விட்டனர். உடனே சுவரை அகற்ற வேண்டுமென, தோழர்கள் தரப்பு, அதிகாரிகளிடம் பெட்டிஷன் கொடுத்தனர். சுவரை இடிக்க வேண்டுமென, கார்ப்பரேஷனில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, ஒரு மாசமாச்சாம். இன்னும் இடிக்கவே இல்லையாம். ஆளும் கட்சி கூட்டணின்னு பெரிய பேரு. ஆனா, மரியாதை சுத்தமா இல்லைன்னு, தோழர்கள் புலம்பித் தள்ளுகின்றனராம்,'' சித்ரா சொன்னதும், ''அது இப்ப தான் தெரியு மாக்கா...?'' என்றாள் மித்ரா.

'செலக் ஷன் தப்பாயிடுச்சே...'

இடம்: டவுன்ஹால் அருகேபொருள்: 'பில்டப்' கொடுப்பதுஏவல்: யாருன்னு தெரியலே''அக்கா, சமீபத்தில, இன்ஸ்., - எஸ்.ஐ.,களை டிரான்ஸ்பர் பண்ணினாங்க. அதுல, 'வடக்கால' ஐ.எஸ்., ஒருத்தருக்கு பதிலா, எஸ்.ஐ., அளவில் ஒருத்தர் வந்திருக்கார். அவருக்கு ஸ்டேஷன் நடைமுறைகள் கூட இன்னும் தெரியலையாம். ஆனா, எல்லாம் தெரிஞ்சமாதிரி 'செம' பில்டப் கொடுத்துட்டு, 'சிஎஸ்ஆர்., யாரு போடுவாங்க. எப்ஐஆர்., எஸ்.ஐ.,தான் போடுவாருன்னு, சில்லி கொஸ்டின்ஸ் கேட்கிறாராம்,''''இதுக்கு முன்னாடி அவரு, ஏ.ஆர்.,-ல் இருந்து, ஐ.எஸ்.,க்கு வந்துட்டாரு. இவரு கண்டிப்பா பெரிய அதிகாரி செலக்ட் செய்த நபரா இருக்க மாட்டாருன்னு, சக போலீஸ்காரங்களே பேசிக்கிறாங்க...''

இனிமேல் 'சரக்கு ஓட்ட முடியுமா?'

இடம்: 'டாஸ்மாக்' டவுன்ஹால் அருகேபொருள்: இல்லீகல் சேல்ஸ்ஏவல்: சில 'பார்' ஓனர்ஸ்.''தற்போதுள்ள அதிகாரி வந்த பின்னாடி, ரெண்டு மாசமா மதுக்கடையில, 'இல்லீகல்' சேல்ஸ் சுத்தமா இல்லை. 'பார்'காரங்களும், ஆளுங்கட்சி விஐபி-யை புடிச்சு, விக்கலாம்னு பார்த்தாங்க. ஆனா, ஒன்னும் முடியலே. இப்ப வெறும் வாய மெல்றவங்களுக்கு அவுல் கிடைச்ச கதையா, 'சரக்கு' துறையை கவனிக்க அதே மினிஸ்டர் வந்துட்டாரு. இதனால, ஆளுங்கட்சி ஆட்கள் எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருக்காங்க. எப்படியும், வழக்கம்போல, 'சரக்கு' ஓட்டலாம்னு நம்பிக்கையா இருக்காங்களாம்டி மித்து,''சித்ரா சொன்னதும், ''அக்கா.., அதெல்லாம், 'சிங்கப் பெண்ணிடம்' நடக்காதுன்னு நம்பலாம்,'' என்றாள் மித்ரா சீரியஸாக.

'நல்லாற்றில் இப்படி அவலம்'

இடம்: எஸ்.மேட்டுப்பாளையம்பொருள்: நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புஏவல்: தனியார் ஒருவர்''அவிநாசிக்கு பக்கம், எஸ்.மேட்டுப்பாளையத்துல, நல்லாற்றுக்கு மழைநீர் வரும் வழிப்பாதையை மறித்து ஒருத்தர் கட்டடம் கட்டிட்டார். அத இடிக்க சொல்லி, பி.ஜே.பி., காரங்களும், மக்களும் புகார் கொடுத்தாங்க. ஆனா, அளக்கறதுக்கு ரெவின்யூ ஆட்கள் வரவேயில்லையாம். இந்த இழுவையில, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அந்நபர், தண்ணீர் டேங்க் கட்டி, காம்பவுண்டும் போட்டுட்டார். இப்படியே போச்சுன்னா, ஆத்துல எப்படி தண்ணி வரும்னு மக்கள் கேட்கறாங்க்கா...'' மித்ரா சொன்னதும், ''மக்கள் கேட்டுட்டே தான் இருப்பாங்க... அதிகாரிகள், காது கேட்காத மாதிரி போயிட்டே இருப்பாங்க...'' என்றாள் சித்ரா ஆவேசமாக.

'வாங்கி கட்டிட்டாங்கோ...'

இடம்: பல்லடம்பொருள்: பாலம் கட்டியதுஏவல்: ஹைவேஸ் டிபார்ட்மென்ட்''அக்கா... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற வித்தைய ஹைவேஸ் டிபார்ட்மென்ட் அதிகாரிகிட்ட கத்துக்கலாம். எப்படின்னு கேளுங்க. பொள்ளாச்சி ரோட்டுல, பாலம் ஒன்று சமீபத்துல கட்டுனாங்க. அதுக்கு பக்கத்துல இருக்கற தனியார் நிலத்துக்கு போக ஒரு பாலமும் கட்டி கொடுத்துட்டு, 'கப்பத்தை' வசூல் பண்ணிட்டாங்களாம். அப்படின்னா, இனிமேல் தனியார் கான்ட்ராக் ஒர்க் டென்டரும், ஹைவேஸ்காரர்களே செஞ்சு தருவாங்களோ?,'' என வெள்ளந்தியாக கேட்டாள் மித்ரா.

'பாடிய வாயும் ஆடிய கால்களும்...'

இடம்: அவிநாசிபொருள்: வசூல் வேட்டைஏவல்: 'குட்டி' அதிகாரி''ஏன்டி மித்து, லிங்கேஸ்வ(4)ர் ஊரிலுள்ள ரெவின்யூ ஆபீசில், மக்களுக்கு 'துணை'யா இருக்(3) வேண்டிய ஆபீ(5)ர் ஒருத்தர், ஒவ்வொரு வேலைக்கும், 'அமவுன்ட் பிக்ஸ்' பண்ணி இஷ்டத்துக்கு வழிச்சிட்டாராம். குறிப்பாக, இதற்கு முன்னாடி இருந்த அதிகாரியோட முழு பொறுப்பையும் இவரே எடுத்துகிட்டு, 'கலெக் ஷன்' பார்த்துட்டார். இப்ப கலெக்டர் ஆபீசுக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டாரு. இப்ப அங்க போய் எப்படி வசூல் பண்ணுவாருன்னு தெரியலேன்னு, ஸ்டாப்ஸ் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க,'' சித்ரா சொ(6)னதும், ''ஆமாங்க்கா... வாங்கிப்ப(2)கிட்டா, (1)ப்புறம் எப்படி நிறுத்த முடியும்,'' என சிரித்தாள் மித்ரா.இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டே, பொருட்களை வாங்கி கொண்டு புறப்பட்டனர். வானம் மழைத்துளிகளை பூமிக்கு அனுப்ப துவங்கியது.முன்குறிப்பு: இந்த வார 'சித்ரா மித்ரா' பகுதியில், சில இடங்களில் விடுபட்ட எழுத்துக்கு பதில், அடைப்புக்குறிக்குள் எண்கள், அந்தந்த 'பாரா'வில், வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட எழுத்துகளை எண் வரிசைப்படி, அதாவது, 1,2,3,4,5... என சேர்த்தால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் முழுமை பெறும்.நவராத்திரி நெருங்கியதால், சித்ராவும், மித்ராவும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலு பொம்மை, அலங்கார தோரணங்கள், பூஜை பொருட்களை வாங்க, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புறப்பட்டவாறே, அரட்டையை துவங்கினர்.

வருவாய்க்கு 'வருவாய்'

இடம்: தாராபுரம்பொருள்: மண் கடத்தல்ஏவல்: வருவாய்த்துறை''மித்து உனக்கு விஷயம் தெரியுமா, தாராபுரம் ரவுண்டானா பகுதியில், மண் லோடு லாரிகளை பொதுமக்கள் சிறைப் பிடித்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். வருவாய்த்துறைக்கு தகவல் சொல்லியும் கூட யாரும் வரவில்லையாம். நீண்ட நேரம் போராடி, சலித்துப் போன மக்கள் மறியலில் ஈடுபட்டனர். உடனே வந்த போலீசார் சமரசம் பேசி லாரிகளை அனுப்பி வைத்தனராம்...''''ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் மண் கடத்தல் நடப்பது அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும் கூட, 'கவனிப்பு' பலமாக இருப்பதால் கண்டுகொள்வதில்லை. இதில், கொடுமை என்னன்னா, அடியாட்கள் கூட்டம், மறியல் செய்த பொதுமக்களை அடையாளம் கண்டு பிடித்து மிரட்ட நாள் முழுவதும் சுற்றித்திரிந்தனராம்,''

ஒரே இடத்தில நாலு எதற்கு?

இடம்: 3வது வார்டு சக்தி நகர்பொருள்: தெரு விளக்குஏவல்: மாநகராட்சி''சித்ராக்கா... கார்ப்பரேஷன், 3வது வார்டு சக்தி நகரில், விநாயகர் கோவில், ரேஷன் கடை இருக்கும் வீதியில் ஒரேயோரு ஸ்ட்ரீட் லைட் தான் உள்ளது. இது ஒரு மாதமாக எரியாமல் உள்ளதாக, அப்பகுதியினர் புகார் கொடுத்தனர். அதே சக்தி நகர் பகுதியில், ஒரு வீதியில் மும்முனை சந்திப்பு ரோட்டில், ஒரே நாளில், 4 லைட் போட்டாங்களாம்க்கா...''''இதனை பார்த்த அப்பகுதி மக்கள், இருப்பவருக்கு ஒரு நியாயம், இல்லாத வருக்கு ஒரு நியாயமா என வார்டு கவுன்சிலரை வறுத்தெடுத்து விட்டனராம்...''

'ஆபீசரின் ஓசி பயணம்'

இடம்: ஊரக வளர்ச்சிப்பிரிவுபொருள்: ஆபீஸ் ஜீப்ஏவல்: டி.ஆர்.டி.ஏ.,''மித்து இந்த கொடுமையை கேளு. கலெக்டர் ஆபீசில், டி.ஆர்.டி.ஏ.,வில் (1)ணிபுரியும் அதிகாரி ஒருவர் உடு மலையி(5) உள்ள தன் வீட்டுக்கு ஆபீஸ் ஜீப்பில், த(3)யாகத்தான் போறாராம். இதற்கு ஆபீஸ் கணக்கில் தான் டீசல் போடறாங்க. மற்றொரு ஆபீசர், இந்த வண்டி இல்லாத காரணத்தால், அலுவலக பணிக்கு ஒன்றியத்தில் உள்ள ஜீப்பை கொண்டு வந்து பயன்படுத்துகிறார். அதற்கு வாரந்தோறும் வெவ்(4)று ஒன்றியத்தில் இருந்து டிரைவருடன் ஜீப்பை அனுப்பி வைக்க வேண்டுமாம். இவங்க மக்களுக்கு சேவை செய்யும் அ(2)கை பாத்தியா...?''

கவுன்சிலர் யாருங்க? சொல்லுங்க!

இடம்: சாய்பாபா கோவில் வீதிபொருள்: அடாவடி வசூல்ஏவல்: டி.ஆர்.டி.ஏ.,''அக்கா, கார்ப்பரேஷன், 13வது வார்டு பகுதியில், சாமிநாதபுரம், சாய்பாபா கோவில் வீதியில் டெய்லி ஈவ்னிங், ரோட்டுக்கு (3)ன்னாடி, (4)டைகளை சில வியாபாரிகள் போடறாங்க. குறிப்பாக, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிகமான கடைகள் போடறாங்களா(5). அப்படி போடற ஒரு கடைக்கு, நுாறு ரூபா, (1)ங்கடமே இல்லாம, 'மாமூல்' வே(2)டும் என கேட்டு வாங்குறாராம், வார்டு பிரமுகரின் வீட்டுக்காரர். அதனால, வார்டுல அவருக்கு 'வசூல்ராஜா'ன்னு பேரே வச்சுட்டாங்களாம்...'' சொல்லி விட்டு சிரித்தாள் மித்ரா.

இப்படி அலைக்கழிக்கலாமா?

இடம்: காங்கயம்பொருள்: பரிசளிப்புஏவல்: எஸ்.டி.ஏ.டி.,''போன வாரம், காங்கயத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பங்கேற்ற மினிஸ்டர், முதல்வர் கோப்பைக்கான போட்டியில், ஜெயித்தவர்களுக்கு பரிசு வழங்கினார். அதேநாள் சாயந்திரம், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் மறுபடியும் சிலருக்கு பரிசு கொடுத்தாங்க. மீதமுள்ளவர்களுக்கு இந்த வாரம் கொடுக்கிறாங்களாம்.உச்சகட்ட கொடுமை என்னன்னா, பரிசு வாங்க மாற்றுத்திறனாளிகள் வந்துட்டாங்க. 'இப்ப உங்களுக்கு கொடுக்கல. மறுபடியும் கூப்பிடுறோம். அப்ப வாங்கன்னு, திருப்பி அனுப்பிட்டாங்க. 'போட்டியில கூட ஜெயிச்சிட்டோம். பரிசு வாங்கறதில ஜெயிக்க முடியாது போலிருக்கு'னு நொந்துட்டு, திரும்பி போய்ட்டாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''பாவங்க்கா அவங்க...'' என அங்கலாய்த்தாள் மித்ரா.

'சரண்டரான' அதிகாரி

இடம்: பொடாரம்பாளையம்பொருள்: நில உரிமை சான்றுஏவல்: கிராம அதிகாரி''அக்கா.... பெருமாநல்லுாரை சேர்ந்த முன்னாள் விஐபி ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு நில உரிமை சான்று வாங்க, கிராம (1)திகாரியை அணுகினார். அதற்கு, 'ரெண்டு லட்சம் கொடுத்தால் தருகிறேன்,' என்று சொல்ல, பேர(2) பேசி, ஒரு லட்சம் வாங்கிட்டு கொடுத்தாராம்,''''அப்புறம், அதே நிலத்துக்கு வரைபடம் கேட்டதற்கு, 50 ஆயிரம் (4)ண்டும். அப்ப தான் காரியம் நடக்கும்,'னு கறாரா சொல்லிட்டார். பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன, விஐபி, ஒரு அ(5) சேர்த்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தட்டிட்டார். அது (3)ம்பந்தமாக அறிக்கை அளிக்க ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவு வந்துள்ளது. இது தெரிஞ்சு அதிர்ச்சியான அதிகாரி தரப்பிலிருந்து, புகார்தாரருக்கு வெள்ளைக்கொடி காட்ட முயற்சி நடக்குதாம்...'' மித்ரா சொன்னதும், ''பட்டாதான்டி புத்தி வரும்,'' சொன்னாள் சித்ரா.

இதிலுமா 'கூட்டணி' போடுவாங்க!

இடம்: வடக்கு தாலுகா ஆபீஸ்பொருள்: மனு எழுதி தருதல்ஏவல்: 'டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்'''வடக்கு தாலுகா ஆபீஸ் வெளி வளாகத்தில் மனு எழுதித் தரும் நபர்கள் போர்வையில் சில புரோக்கர்ஸ், ஆபீசர்களை கைக்குள் போட்டு கொண்டு, 'கப்பம்' கட்டி ஆயிரக்கணக்கில் மக்களிடம், மனுதாரர்களிடம் வசூலிக்கின்றனர். இதில், தொகை கமிஷனாக வந்து விடுகிறதாம்...''''இந்த புரோக்கர்களுடன் இப்போது, புதிய கூட்டணி ஒன்று உருவாகி விட்டதாம். சில 'டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்' சான்று கேட்டு வரும் மக்களை, இந்த புரோக்கர்ஸ்கிட்ட கூட்டிட்டு போய், 'கமிஷன்' கச்சிதமாக வாங்கிக்கறாங்க. இந்த 'கேங்' பத்தி, பல முறை புகார் கூறியும், போலி சான்றிதழ் விவகாரம் வெளிவந்து வில்லங்கம் ஆகி விடும்னு ஆபீசர்ஸ் 'கப்சிப்'னு இருக்கின்றனர் என, விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினர்,'' என மித்ரா விளக்கினாள்.

'பேரு தான் பெத்த பேரு'

இடம்: 24வது வார்டு, அன்னை நகர்பொருள்: நடுரோட்டில் சுவர்ஏவல்: ஆளுங்கட்சியினர்''மித்து, கார்ப்பரேஷன், 24வது வார்டு ஏ.பி., நகர் - அன்னை கார்டனில் இருந்து அடுத்த வீதிக்கு செல்லும் பாதையை சிலர் சுவர் கட்டி அடைத்து விட்டனர். உடனே சுவரை அகற்ற வேண்டுமென, தோழர்கள் தரப்பு, அதிகாரிகளிடம் பெட்டிஷன் கொடுத்தனர். சுவரை இடிக்க வேண்டுமென, கார்ப்பரேஷனில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, ஒரு மாசமாச்சாம். இன்னும் இடிக்கவே இல்லையாம். ஆளும் கட்சி கூட்டணின்னு பெரிய பேரு. ஆனா, மரியாதை சுத்தமா இல்லைன்னு, தோழர்கள் புலம்பித் தள்ளுகின்றனராம்,'' சித்ரா சொன்னதும், ''அது இப்ப தான் தெரியு மாக்கா...?'' என்றாள் மித்ரா.

'செலக் ஷன் தப்பாயிடுச்சே...'

இடம்: டவுன்ஹால் அருகேபொருள்: 'பில்டப்' கொடுப்பதுஏவல்: யாருன்னு தெரியலே''அக்கா, சமீபத்தில, இன்ஸ்., - எஸ்.ஐ.,களை டிரான்ஸ்பர் பண்ணினாங்க. அதுல, 'வடக்கால' ஐ.எஸ்., ஒருத்தருக்கு பதிலா, எஸ்.ஐ., அளவில் ஒருத்தர் வந்திருக்கார். அவருக்கு ஸ்டேஷன் நடைமுறைகள் கூட இன்னும் தெரியலையாம். ஆனா, எல்லாம் தெரிஞ்சமாதிரி 'செம' பில்டப் கொடுத்துட்டு, 'சிஎஸ்ஆர்., யாரு போடுவாங்க. எப்ஐஆர்., எஸ்.ஐ.,தான் போடுவாருன்னு, சில்லி கொஸ்டின்ஸ் கேட்கிறாராம்,''''இதுக்கு முன்னாடி அவரு, ஏ.ஆர்.,-ல் இருந்து, ஐ.எஸ்.,க்கு வந்துட்டாரு. இவரு கண்டிப்பா பெரிய அதிகாரி செலக்ட் செய்த நபரா இருக்க மாட்டாருன்னு, சக போலீஸ்காரங்களே பேசிக்கிறாங்க...''

இனிமேல் 'சரக்கு ஓட்ட முடியுமா?'

இடம்: 'டாஸ்மாக்' டவுன்ஹால் அருகேபொருள்: இல்லீகல் சேல்ஸ்ஏவல்: சில 'பார்' ஓனர்ஸ்.''தற்போதுள்ள அதிகாரி வந்த பின்னாடி, ரெண்டு மாசமா மதுக்கடையில, 'இல்லீகல்' சேல்ஸ் சுத்தமா இல்லை. 'பார்'காரங்களும், ஆளுங்கட்சி விஐபி-யை புடிச்சு, விக்கலாம்னு பார்த்தாங்க. ஆனா, ஒன்னும் முடியலே. இப்ப வெறும் வாய மெல்றவங்களுக்கு அவுல் கிடைச்ச கதையா, 'சரக்கு' துறையை கவனிக்க அதே மினிஸ்டர் வந்துட்டாரு. இதனால, ஆளுங்கட்சி ஆட்கள் எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருக்காங்க. எப்படியும், வழக்கம்போல, 'சரக்கு' ஓட்டலாம்னு நம்பிக்கையா இருக்காங்களாம்டி மித்து,''சித்ரா சொன்னதும், ''அக்கா.., அதெல்லாம், 'சிங்கப் பெண்ணிடம்' நடக்காதுன்னு நம்பலாம்,'' என்றாள் மித்ரா சீரியஸாக.

'நல்லாற்றில் இப்படி அவலம்'

இடம்: எஸ்.மேட்டுப்பாளையம்பொருள்: நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புஏவல்: தனியார் ஒருவர்''அவிநாசிக்கு பக்கம், எஸ்.மேட்டுப்பாளையத்துல, நல்லாற்றுக்கு மழைநீர் வரும் வழிப்பாதையை மறித்து ஒருத்தர் கட்டடம் கட்டிட்டார். அத இடிக்க சொல்லி, பி.ஜே.பி., காரங்களும், மக்களும் புகார் கொடுத்தாங்க. ஆனா, அளக்கறதுக்கு ரெவின்யூ ஆட்கள் வரவேயில்லையாம். இந்த இழுவையில, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அந்நபர், தண்ணீர் டேங்க் கட்டி, காம்பவுண்டும் போட்டுட்டார். இப்படியே போச்சுன்னா, ஆத்துல எப்படி தண்ணி வரும்னு மக்கள் கேட்கறாங்க்கா...'' மித்ரா சொன்னதும், ''மக்கள் கேட்டுட்டே தான் இருப்பாங்க... அதிகாரிகள், காது கேட்காத மாதிரி போயிட்டே இருப்பாங்க...'' என்றாள் சித்ரா ஆவேசமாக.

'வாங்கி கட்டிட்டாங்கோ...'

இடம்: பல்லடம்பொருள்: பாலம் கட்டியதுஏவல்: ஹைவேஸ் டிபார்ட்மென்ட்''அக்கா... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற வித்தைய ஹைவேஸ் டிபார்ட்மென்ட் அதிகாரிகிட்ட கத்துக்கலாம். எப்படின்னு கேளுங்க. பொள்ளாச்சி ரோட்டுல, பாலம் ஒன்று சமீபத்துல கட்டுனாங்க. அதுக்கு பக்கத்துல இருக்கற தனியார் நிலத்துக்கு போக ஒரு பாலமும் கட்டி கொடுத்துட்டு, 'கப்பத்தை' வசூல் பண்ணிட்டாங்களாம். அப்படின்னா, இனிமேல் தனியார் கான்ட்ராக் ஒர்க் டென்டரும், ஹைவேஸ்காரர்களே செஞ்சு தருவாங்களோ?,'' என வெள்ளந்தியாக கேட்டாள் மித்ரா.

'பாடிய வாயும் ஆடிய கால்களும்...'

இடம்: அவிநாசிபொருள்: வசூல் வேட்டைஏவல்: 'குட்டி' அதிகாரி''ஏன்டி மித்து, லிங்கேஸ்வ(4)ர் ஊரிலுள்ள ரெவின்யூ ஆபீசில், மக்களுக்கு 'துணை'யா இருக்(3) வேண்டிய ஆபீ(5)ர் ஒருத்தர், ஒவ்வொரு வேலைக்கும், 'அமவுன்ட் பிக்ஸ்' பண்ணி இஷ்டத்துக்கு வழிச்சிட்டாராம். குறிப்பாக, இதற்கு முன்னாடி இருந்த அதிகாரியோட முழு பொறுப்பையும் இவரே எடுத்துகிட்டு, 'கலெக் ஷன்' பார்த்துட்டார். இப்ப கலெக்டர் ஆபீசுக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டாரு. இப்ப அங்க போய் எப்படி வசூல் பண்ணுவாருன்னு தெரியலேன்னு, ஸ்டாப்ஸ் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க,'' சித்ரா சொ(6)னதும், ''ஆமாங்க்கா... வாங்கிப்ப(2)கிட்டா, (1)ப்புறம் எப்படி நிறுத்த முடியும்,'' என சிரித்தாள் மித்ரா.இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டே, பொருட்களை வாங்கி கொண்டு புறப்பட்டனர். வானம் மழைத்துளிகளை பூமிக்கு அனுப்ப துவங்கியது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை