உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதத்தை துாண்டிய நபரை கைது செய்யவில்லை: விளக்கம் அளித்த நபர் மீது வழக்கு பதிந்து தொந்தரவு

பயங்கரவாதத்தை துாண்டிய நபரை கைது செய்யவில்லை: விளக்கம் அளித்த நபர் மீது வழக்கு பதிந்து தொந்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இந்தியாவின் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார்' என, இந்திய இறையாண்மைக்கு எதிராக, தேச விரோத கருத்து களை பரப்பி, பயங்கரவாத செயலை துாண்டும் விதமாக உஸ்தாத் பீர் முகமது சதக்கி அஷ் அரி பேசினார். அவரை கைது செய்யாமல், உஸ்தாத் பேச்சுக்கு பதில் அளித்த, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் உஸ்தாத் பீர் முகமது சதக்கி அஷ் அரி சமீபத்தில், 'வீடியோ' ஒன்றில் பேசியிருந்தார். அதில் முகமது நபிகளின் சொல், செயல், தீர்ப்புகள் மற்றும் நடைமுறைகள் அடங்கிய பிரசாரமே ஹதீஸ். அதில், இந்தியாவின் மீது படையெடுப்போரை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார் என, குறிப்பிட்டுள்ளது. மன்னராட்சி இந்த ஹதீசை, இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. முகமது கோரி, அவுரங்க சீப் மற்றும் முகலாயர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், ஒருவரும் ஹதீசை பின்பற்றி முஸ்லிம் நாடாக்கவில்லை. அவர்கள் கடைசி வரை மன்னராட்சி நிர்வாகத்தையே நடத்தினர். போர்ச்சுகீசியர்கள் இந்தியா வந்து சென்ற பின், பிரிட்டீஷார், இந்தியாவை ஆட்சி செய்த அற்புதமான காலத்திலேயே, இமாம் என அழைக்கப்படும், முஸ்லிம் மதத் தலைவர், மிகச் சரியாக கணித்துள்ளார். அவரது ஹதீசில், 'பிரிட்டீஷார் ஆட்சிக்கு பின், இந்தியாவின் ஆட்சி அதிகாரம், ஹிந்து மதத்தில் உள்ள பாசிசவாதிகளின் கரங்களுக்கு சென்று விடும். பிரிட்டாஷாரும், ஹிந்துக்களும் சேர்ந்து, எப்படி முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் ஆட்சிகளை, கடந்த காலங்களில் தகர்த்தனரோ, அதுபோல, ஹிந்துக்கள் கரங்களில் இருக்கும் பாசிச ஆட்சி மீது, முஸ்லிம் சக்திகள் படையெடுக்கும். பின், இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றுவர். முஸ்லிம் ஆட்சி மலரும்' என, சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இதன் வழியே, அவர் வெளிப்படையாக சொல்ல வருவது, 'இந்தியா முஸ்லிம் நாடாக மாற வேண்டும்' என்பதே. அதற்கு, பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி தாக்குதல் நடத்துவோரை, நரகத்திற்கு செல்லாமல் அல்லா காப்பார் என்பதே. இந்திய இறையாண்மைக்கு எதிராக, பயங்கரவாதத்தை துாண்டும் வகையில், தேச விரோத கருத்துகளை பரப்பி வரும், உஸ்தாத்தை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல், போலீசாரும், மத்திய, மாநில உளவு அமைப்பினரும் வேடிக்கை பார்க்கின்றனர். நியாயமல்ல தன் வீடியோ பதிவில் பயங்கரவாதத்தை விதைத்திருக்கும் உஸ்தாத்தின் பேச்சுக்கு, எதிர் வினையாற்றும் விதமாக, 'ஸ்ரீ டிவி' என்ற, 'யு டியூப்' சேனலில் பேட்டி அளித்துள்ளார் பால கவுதமன். அவரின் பேட்டி, சமூக மோதலை துாண்டுவதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது நியாயமில்லாத செயல். பொதுமக்கள் தரப்பில் இருந்து, யாரும் புகார் அளிக்காத நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு எஸ்.ஐ., ஒருவரே புகார் அளித்து, அதன் மீது வழக்கு பதிவு செய்து இருப்பது, தமிழக அரசின் ஒருதலைபட்சமான செயல்பாடு; அடக்குமுறையின் உச்சம். தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத், சுன்னத் ஜமாத் ஸ்டூடண்ட் பெடரேஷன், சுன்னத் ஜமாத் பாலர் சங்கம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், தாவா யாத்திரை நடத்தப்பட்டு உள்ளது. அதில், உஸ்தாத் பங்கேற்றுள்ளார். 'இப்படி நடத்தப்பட்ட யாத்திரை, மத மாற்ற யாத்திரை' எனவும் பால கவுதமன், தன்னுடைய பேட்டியில் கூறி உள்ளார். பயங்கரவாத எண்ணத்தோடு, இட்டுக்கட்டி சொல்லப்படும் விஷயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல், அவ்வாறு சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் என விளக்கம் அளித்த பால கவுதமன் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

krishnamurthy
ஆக 25, 2025 23:45

இது சரியல்ல, இந்துக்களே உஷார்


Nanchilguru
ஆக 25, 2025 20:18

இது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மிரட்டும் செயல், அரசின் இந்த மாதிரியான செயல்களை மக்கள் கவனிக்க வேண்டும்.


எஸ் எஸ்
ஆக 25, 2025 15:18

கண்டிக்கப்படவேண்டியவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடும் இந்துக்கள்தான். அவர்களின் சுயநலம் மிக்க ஓட்டுக்கள்தான் இவர்களுக்கு தைரியம் தருகிறது. 2026இல் திமுக இந்துக்களால் தூக்கி எறியப்பட்டால் பிறகு இந்துக்களை தாஜா பண்ணும் ட்ராமாதான்


visu
ஆக 25, 2025 14:47

இந்த ஆட்டம் எல்லாம் 2026 வரைதான்


kannan
ஆக 25, 2025 14:09

திமுக விரைவில் மக்கள் மன்றத்திலிருந்து தூக்கி எறியப்படும்


தஞ்சை மன்னர்
ஆக 25, 2025 13:39

ஹி ஹி பல இன மக்கள் இருக்கும் நாட்டை ஹிந்துராஷ்டிரமாக மாற்றுவோம் என்று கூவி கூவி கொண்டு இருக்கும் ஹிந்துதுத்துவ கும்பலுக்கு என்ன செக்சனில் வழக்கு பதிவு செய்வேள் சொல்லுங்கோ


N Sasikumar Yadhav
ஆக 25, 2025 16:17

இந்த உலகத்திலிருந்து பயங்கரவாத மூர்க்க மதத்தை அகற்றினால் உலகம் அமைதியாக இருக்கும் . பயங்கரவாத மூர்க்கத்தை வேரடி மண்ணோடு அழிக்கும் இஸ்ரேல் வாழ்க வாழ்க


aasami
ஆக 25, 2025 17:20

Loooosu


நாஞ்சில் நாடோடி
ஆக 25, 2025 19:12

இந்தியா இந்து நாடு. மத மாற்றம் ஒரு தேசிய அபாயம்...


பேசும் தமிழன்
ஆக 25, 2025 19:48

அதை மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த நாட்களில் ஒருவர்..... நீங்கள் சொல்லலாமா ??


Keshavan.J
ஆக 25, 2025 21:55

உங்க அம்மா எத்தனை ஹலால் செஞ்சு ன்னை பெற்றால்


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:19

அங்கே எழுதியிருக்கும் வெளிநாட்டு மொழியில் இருக்கும் வார்த்தைகளுக்கு தமிழர்தம் சொல்லு, அதனை உண்மையான தமிழர்கள் கேட்கும் நாளில் உங்களோட ஆட்டம் க்ளோஸ் ஆயிடும்


Kanns
ஆக 25, 2025 12:39

Stop/Reduce Central Budget Allocation to TN State esp Police Dept


VENKATASUBRAMANIAN
ஆக 25, 2025 08:06

மத்திய அரசு தூங்குகிறதா. பேசிய வரை கைது செய்யலாமே.


பேசும் தமிழன்
ஆக 25, 2025 08:04

தீவிரவாத பேச்சு பேசிய ஆளை கைது செய்யாமல்.. நாட்டை நேசிக்கும் ஒருவர் அதை கண்டிக்கும் வகையில் பேசினால்.. அவர் மீது நடவடிக்கை.. இது தான் விடியாத மாடலா.. இது என்ன விளங்காத மாடல்.... விடியல் ஆட்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் !!!


Modisha
ஆக 25, 2025 07:58

அநீதியின் உச்சம். இத்தனைக்கு பிறகும் திமுகவுக்கு ஹிந்துக்கள் வாக்களிப்பது விந்தை .


முக்கிய வீடியோ