மேலும் செய்திகள்
2029 தேர்தலுக்கு இப்போதே தயார்படுத்தும் பிரதமர் மோடி
3 hour(s) ago
துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
21 hour(s) ago | 3
விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்
21 hour(s) ago | 33
கோவை மாநகராட்சிக்கு புதிய மேயர் தொடர்பாக தலைமைக்குச் சென்றுள்ள தகவல்களை அறிய ஆளும்கட்சியினர் காட்டும் அதீத ஆர்வத்தால், உளவுத்துறையினர் தெறித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த மேயர் யார் என்பது குறித்து, விதவிதமான தகவல்கள் ரெக்கை கட்டிப் பறந்து வருகின்றன.சமூக ஊடகங்களில், புதிய மேயர் யார் என்பது பற்றி பல தரப்பினரும், தங்களுக்குத் தெரிந்த கதைகளைத் திரித்து பரப்பி வருகின்றனர். சமுதாயத்துக்காக, இரண்டாம் கல்பனாவாக ஒருவரைத் தேர்வு செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளும், ஆளும்கட்சியினரின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்படுகின்றன. அதற்கு ஆதரவும், எதிர்ப்புகளாக கருத்து மோதல்களும் நடந்து வருகின்றன.இது ஒரு புறமிருக்க, புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கு முன்பாக, யார் யார் எப்படி என விசாரிக்குமாறு, கோவை மாநகர போலீசின் உளவுத்துறையினருக்கு, போலீஸ் தலைமையிடத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், ஏழு பெண் கவுன்சிலர்களைப் பற்றிய தகவல்களை, உளவுத்துறையினர் சேகரித்து அனுப்பியுள்ளனர்.அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யார் என தெரிந்து கொள்வதற்கு, ஆளும்கட்சியினரிடத்தில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளவுத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசாரிடம், உடன்பிறப்புகளின் விசாரணை தீவிரமாகவுள்ளது.நுண்ணறிவுப் பிரிவு போலீசார், அப்படி எந்த தகவல்களையும் சேகரித்து அனுப்பவில்லை என்று கூறினாலும், நம்பாமல் மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரிப்பதாகத் தெரியவந்துள்ளது. எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார்தான் இதைச் சேகரித்து அனுப்பியுள்ளனர் என்று தகவல் பரவியதால், அதிலுள்ள போலீசாரிடமும் தி.மு.க., நிர்வாகிகள், போன் செய்து விசாரிக்கின்றனர். இதனால், ஆளும்கட்சியினரை நேரில் சந்திப்பதையும், போனில் பேசுவதையும் உளவுத்துறையினர் திட்டமிட்டுத் தவிர்த்து வருகின்றனர். கட்சிக்காரர்களுடன் நெருக்கமாகவுள்ள உளவுத்துறை போலீசார், இவர்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுகின்றனர். புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவித்தாலும், வேட்பாளரைச் சொல்லும் வரை, 'விடாது கருப்பு' போல, இந்த துரத்தல் தொடரும்.-நமது நிருபர்-
3 hour(s) ago
21 hour(s) ago | 3
21 hour(s) ago | 33