உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னருக்கு நேரம் சரியில்லை: அமைச்சர் மகேஷ் கணிப்பு

கவர்னருக்கு நேரம் சரியில்லை: அமைச்சர் மகேஷ் கணிப்பு

சென்னை : ''தமிழக கவர்னர் ரவிக்கு, கடந்த 8ம் தேதியில் இருந்து நேரம் சரியில்லை,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

கவர்னர் ரவிக்கு, கடந்த 8ம் தேதியில் இருந்து நேரம் சரியில்லை; காரணம், அவர் பேச்சு அப்படி உள்ளது. அவர் எந்த மாநிலத்திலிருந்து வருகிறார். அங்கு, கல்விக்கான திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து, நம் பிள்ளைகளைப் பற்றி பேசுவது நல்லது. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவது குறித்து கவர்னர் இஷ்டத்துக்கும் கருத்து சொல்கிறார். பெறுபவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நெல்லை பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து, முழுமையாக தகவல் கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக, அறிவியல், கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறோம். தென் மாவட்டங்களில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த, தயாராக உள்ளோம். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது, விரிவான அறிவிப்பு வெளியாகும்.புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க காரணம், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நடத்த திட்டமிடும் ஹிந்தி திணிப்புதான். என்.சி.இ.ஆர்.டி., தற்போது, ஆங்கில வழி பாடங்களுக்கு ஹிந்தி பெயரை சூட்டிஉள்ளது. அதன் கையில், தேசிய கல்வி சென்றால், டில்லியில் அமர்ந்து பாடப்புத்தகத்தை வடிவமைப்பவர் கூறுவதைத்தான், நம் குழந்தைகள் படிக்க வேண்டும். இது, கடிகார முள்ளை பின்னோக்கி இழுப்பதற்கு சமம். அதனால்தான், அதை மசோதா நிலையிலேயே எதிர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பல்லவி
ஏப் 17, 2025 00:51

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதுபோல் முன்னாள் பேராசிரியர் தொடர்பான வழக்கு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை அவருக்கு பதவி காலம் முடிந்த பிறகு மாற்று இடம் பெற்று சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


kannan sundaresan
ஏப் 16, 2025 15:17

மாணவர்கள் டாஸ்மாக் செல்வதால் அவர்களுக்கு நேரம் சரியில்லை. இதை கண்டுகொள்ளாத கல்வி அமைச்சருக்கு நேரம் நன்றாகவே உள்ளது.


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஏப் 16, 2025 14:37

ஆர்ட்டிஸ்ட்டு கதறல் அருமை


Rajasekar Jayaraman
ஏப் 16, 2025 13:03

யாருக்கு நேரம் சரியில்லை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


எவர்கிங்
ஏப் 16, 2025 11:20

ஜாதகத்தை பார்... பிரிவினைவாத புடிச்சிருக்கு


xyzabc
ஏப் 16, 2025 11:08

மாடல் ஆட்சி ஜோசியர் சொல்லி விட்டார். ஆஹா


Ragupathy
ஏப் 16, 2025 09:21

தன் பிள்ளை பல மொழி படிக்கலாம்...ஏழைக்குழந்தை படிக்கக் கூடாது...இப்படி ஒரு கல்வி மந்திரி....பரம்பரைக்கொத்தடிமை...


Oviya Vijay
ஏப் 16, 2025 07:30

தமிழகத்துக்கு கவர்னராக என்றைக்கு ரவி அறிவிக்கப்பட்டாரோ அன்றைக்கே அவருக்கு நல்ல நேரம் தவிர எமகண்டம் ராகு காலம் என்று அனைத்துமே அவரை ஆட்கொண்டு விட்டது... சுப்ரீம் கோர்ட்டிடம் வேறு அப்போ அப்போ குட்டு வாங்கி குட்டு வாங்கி... பாவம்... யாரு பெத்த புள்ளையோ... இங்க வந்து மாட்டிக்கினு கஷ்டப்படுது... ஒன்னு மட்டும் உறுதி... தன்னோட பதவியில இருந்து ஓய்வு கெடச்சதுக்கு அப்புறமும் தமிழ்நாடுன்னு பெயரைக் கேட்டாலே அவருக்குள்ள ஒரு உதறல் இருக்கத் தான் செய்யும்... அது மட்டும் நிச்சயம்...


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஏப் 16, 2025 09:17

அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு கவர்னரை கண்டால் எரிச்சல் வருவது இயல்புதானே ஏன்னா அப்பப்ப அவர் திமுகவை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் அவர் எப்போதும் தமிழகத்தில்தான் இருப்பார் திமுக தலைமை குடும்பம்தான் 2026 தேர்தலோடு மூட்டை கட்டிக் கொண்டு ரயிலேறி ஓங்கோல் போகப் போகிறது


vijai hindu
ஏப் 16, 2025 12:27

ஓசி சோறு பிரியாணி குவாட்டர் இதுக்கு தான் மதம் மாறுனியா


ராமகிருஷ்ணன்
ஏப் 16, 2025 06:58

திமுக ஆட்சிக்கு தான் நேரம் சரியில்லை பாலிடாயில் தோஸ்த் புரிந்து கொள்


PARTHASARATHI J S
ஏப் 16, 2025 06:30

மீனத்தில் ஆறுகிரக சேர்க்கையால் நீதிபதிகளும் குழம்பிப்போயினர். அடுத்து வரும் நாட்களில் திமுகவிற்கும் நேரம் சரியில்லை. கூட்டணி டமால். மக்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப் போவது உறுதி. நாட்டு நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றமே ஜனாதிபதியிடம் மேற்கு வங்கம், தமிழ்நாடு அரசை கலைக்கச் சொல்லி பரிந்துரை செய்தாலும் ஆச்சரியமில்லை. மாநில சுயாட்சி கேட்டால் காவிரியில் தண்ணீர் வராது. பருப்பு வராது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை