உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காத்திருந்த செங்கோட்டையன்; பேசாமல் தவிர்த்த இ.பி.எஸ்: விரிவடையும் விரிசல்

காத்திருந்த செங்கோட்டையன்; பேசாமல் தவிர்த்த இ.பி.எஸ்: விரிவடையும் விரிசல்

ஈரோடு : காணொலி கூட்டத்தில், 4:30 மணி நேரம் காத்திருந்த செங்கோட்டையனுடன், பழனிசாமி பேசாமல் தவிர்த்தது, இருவருக்குமிடையிலான விரிசலை மேலும் விரிவடைய செய்துள்ளதாக, கட்சியினர் பரபரப்பாக பேசுகின்றனர். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வில் உள்ள, 82 மாவட்ட செயலர்கள், அப்பகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற காணொலி காட்சி கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gukvymwd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முன் தயாரிப்பு

இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் தலைமையில் ஈரோட்டிலும், புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பணன் தலைமையில் பவானியிலும், புறநகர் மேற்கு மாவட்ட செயலர் செங்கோட்டையன் தலைமையில் கோபி அருகேயும் கூட்டத்தில் பங்கேற்றனர். கோபி கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன் கூட்டியே வந்து விட்டார். கூட்ட அரங்கு அறையில் நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். பின், கூட்டம் துவங்கிய, காலை 10:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை, மொத்தம் 4:30 மணி நேரம் வரை அரங்கிலேயே இருந்து காணொலி முன் பங்கேற்றார் செங்கோட்டையன். 'பழனிசாமி தன்னைக் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசினால், அதற்கு என்ன பதில் அளிக்க வேண்டும் என்ற முன் தயாரிப்புடன் செங்கோட்டையன் கூட்ட அரங்கில் இருந்ததாக கூறுகின்றனர். ஒருவேளை, செங்கோட்டையனிடம் பழனிசாமி இணக்கமாக பேசினால், இருவருக்கும் இடையே உள்ள பனிப்போர் நீங்கி, பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை யும் செங்கோட்டையன் ஆதரவாளர்களிடம் இருந்துள்ளது.

முடியும்போது நன்றி

கூட்டத்தில் செங்கோட்டையனிடம் பேசாத பழனிசாமி முடியும் போது மட்டும் 'ஈரோடு புறநகர் மாவட்ட செயலர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோருக்கும் நன்றி' எனக் கூறி, கூட்டத்தை முடித்து விட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை முதல், உள்ளூர் நிர்வாகிகளும், கோபியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து ஆதரவாளர்களும், செங்கோட்டையன் வீட்டுக்கு வந்து பேசி செல்கின்றனர். இதனால், பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையிலான விரிசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kr
மார் 11, 2025 21:50

ADMK seems to be on a downward spiral. It may not exist after 2026 elections if the general secretary doesn't change his approach


RAAJ
மார் 11, 2025 18:54

இருக்கட்டும் அது இருக்கட்டும் தங்கமணி வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லவில்லையா. உங்கள் ஆட்சியில் இருந்த கொள்ளையடித்த அத்தனை அமைச்சர்களும் வந்திருந்தார்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டி ஆடம்பரமான வரவேற்பு நடந்து கொண்டுள்ளது எல்லாம் மக்களின் பணம். இந்த ஊழல்வாதியின் வீட்டு திருமணத்திற்கு ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வந்திருப்பது துரதிர்ஷ்டம். சீமான் அவர்களே நீங்களும் வந்திருந்தீர்கள். ஆடம்பரமான வரவேற்பை பார்ப்பீர்களா? எவ்வளவு கோடிகள் செலவழித்து இருப்பார். திமுக ஊழல் கட்சி என்று கூறும் நீங்கள் தங்கமணியின் ஊழல்களை பொதுவெளியில் பேச தயாரா. திமுகவும் ஊழல் கட்சி தான் அகில உலக ஊழல் கட்சி திமுக இவர்கள் தங்கமனிடமிருந்தும் பல கோடிகளை லஞ்சமாக பெற்றுள்ளார்கள் அவர் மீது வழக்கு பதியாமல் இருக்க.


Muralidharan S
மார் 11, 2025 15:14

அழிந்து கொண்டு இருக்கிற கட்சி.. அழிவின் இறுதி கட்டம் 2026 சட்டசபை தேர்தல்தான்.. 2026 இல் இரண்டு திராவிஷ கட்சிகளும் அழியவேண்டும்.. அழியும்.. மக்கள் மனது வைத்தால், இந்த நல்லது நடக்கும் .


மால
மார் 11, 2025 14:41

ஓடுவதுனு முடிவு ஓடீரு.


கல்யாணராமன்
மார் 11, 2025 11:04

ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி இடையில் வந்தவர்கள் சசிகலா கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு நபர் ஜெயலலிதாவின் பணிப்பெண் அவ்வளவுதான் அவரை கட்சியுடன் இணைத்து பேசுவதே அபத்தம். எம் ஜி ஆர் காலந்தொட்டு கட்சியில் இருந்து வருபவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும்.


bharathi
மார் 11, 2025 10:48

Sengottiyan is the key person for Jayalalitha to capture the ADMK and sad to see his submissive approach in the party


orange தமிழன்
மார் 11, 2025 08:35

MGR தோற்றுவித்த கட்சி ஜெயலலிதாவால் வளர்ந்த கட்சி இன்று EPS அவர்களால் அழிவை நோக்கி செல்கிறது.......இதற்கு அனைத்து அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்த்து அனைவரையும் ஒருங்கிணைத்து 2026 தீயமுக அரசை வெளியேற்ற வேண்டும்......


naranam
மார் 11, 2025 08:18

அவனவனுக்குப் பெரிய இது என்று நினைப்பு. அதிமுக வை அழித்ததில் முதலிடம் வகிப்பது சசி குடும்பம், அடுத்ததாக பழனி பன்னீர் என வரிசை கட்டி நிற்கின்றனர். கட்சி முக்கால்வாசி அழிந்து விட்டது.


சமீபத்திய செய்தி