உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் போலீசார் கூறிய தகவலில் முன்னுக்குப் பின் முரண்

கோவை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் போலீசார் கூறிய தகவலில் முன்னுக்குப் பின் முரண்

கோவை: கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் கூறிய தகவலுக்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது. கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் நண்பருடன் காரில், கல்லுாரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர் காரை உடைத்து, இளைஞரை வெளியில் இழுத்து தாக்கினர். மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok771nwf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20 ஆகிய மூவரை, போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

போலீஸ் கூறுவதில் முரண்

இச்சம்பவத்தில் போலீசார் கூறிய சம்பவத்துக்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கடந்த, 2ம் தேதி சம்பவம் நடந்த பின், அதிகாலை 3.00 மணிக்கு இளைஞர் போன் செய்ததாக போலீசார் கூறினர். ஆனால், மாநகர போலீஸ் கமிஷனர் தனது பேட்டியில், போலீசாருக்கு இரவு 11:20 மணிக்கு இளைஞர் போன் செய்ததாகவும், போலீசார் 11:35 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், மாணவியை நான்கு மணி நேரத்துக்கும் மேல், 100 போலீசார் தேடியதாகவும், போலீசாரே மாணவியை மீட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், உண்மையில் மாணவி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால், முதல் மாடிக்கு சென்று, வீட்டில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன் பின் அனைவரும் மாணவியை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நடந்தது இப்படி இருக்க, பெண்ணை அப்பகுதியில் இருந்த சுவர் ஒன்றின் பின்புறம், மூவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் அங்கு இருந்ததால், தங்களால் கண்டறிய முடியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் தெரிவிக்கும் அந்த சுவரின் உயரம் குறைவாகவே உள்ளது. அப்படி இருக்கையில், 100 போலீசார் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, நம்பும்படியாக இல்லை. போலீசார் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அந்த இருட்டு வேறு இந்த இருட்டு வேறா?

அடர்ந்து இருள் சூழ்ந்த காலி இடத்தில், 100 பேர் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என, போலீசார் தெரிவித்தனர். மறுநாள், குற்றவாளிகள் மூவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறும் இடமும், புதர் மண்டியே காணப்படுகிறது. காடு போன்ற இடத்துக்குள் இருளில் தப்பி ஓடிய மூவரை அடையாளம் கண்டு, காலில் குறிபார்த்து சுட முடிந்த போலீசாருக்கு, காலியிடத்தில் மாணவியை அடையாளம் காண முடியாதது, விந்தையாகவே உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சிந்தனை
நவ 06, 2025 12:42

காவல்துறை நீதித்துறை கல்வித்துறை மூன்றிலும் குற்றங்கள் கண்டுபிடித்தால் உடனுக்குடன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்


Ragupathy
நவ 06, 2025 10:13

மூன்று பேரும் உண்மையான குற்றவாளிகளா என்றே சந்தேகமா இருக்கிறது...


VENKATASUBRAMANIAN
நவ 06, 2025 08:14

மூன்று பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் மீது இந்த வழக்கை போட்டால் அடங்கிவிடும் என்று நினைத்திருப்பார்கள். காவல்துறை அரசிடம் இப்படி அடிபணிந்தால் அவர்களின் மதிப்பு போய்விடும். இதை உயர் காவல் அதிகாரிகள் உணரவேண்டும்.


duruvasar
நவ 06, 2025 08:10

இந்த மூவரும் தங்ககள் மீது 10 ஆவது ஏப் ஐ ஆர் பதியப்படவேண்டும் என்ற உந்துதலில் செய்திருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. இப்போது முழு சிறுத்தைகளாக மாறிவிட்டார்கள்..


Barakat Ali
நவ 06, 2025 08:00

இதைப் பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர் .... உண்மையான குற்றவாளிகளாக இருக்கவும் வாய்ப்புக்குறைவு .....


Ramesh Sargam
நவ 06, 2025 07:55

ஆட்சியில் உள்ளவர்கள் பொய், பித்தலாட்டம். அவர்கள் அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் காவல்துறையும் ஒரே பொய், பித்தலாட்டம். இப்படி இருந்தால் தமிழகம் என்று உருப்படும்?


ராமகிருஷ்ணன்
நவ 06, 2025 06:45

தேர்தல் வரப்போகுது. விடியலின் வீரம் மக்களுக்கு தெரிய போடப்பட்ட நாடகம் போல. CBI விசாரணை கேட்க வேண்டும்


சுந்தர்
நவ 06, 2025 06:37

எல்லாவற்றிலும் அரசியல். நடந்த சம்பவம் குறித்து உண்மையான தகவல் சொல்ல வேண்டியதுதானே. ஆட்சியாளர்களுக்கு சலாம் போட்டு இப்படி மாட்ட வேண்டியிருக்கிறது.


raja
நவ 06, 2025 06:12

உலக மகா பொய்யன்


Venkatasubramanian krishnamurthy
நவ 06, 2025 05:44

உடனடியாக மூன்று பேரை சுட்டுப் பிடித்ததே ஆச்சரியப்படுத்திய ஒன்று. இதில் போலீஸாருக்கும், கமிஷனருக்கும் தகவல் வெளியிடுவதில் குழப்பம் வேறு. ஒருவேளை இந்த விவகாரத்திலும் "யார் அந்த சார்"க்கு அவசியம் வந்துவிடுமோ?


சமீபத்திய செய்தி